ஓம் சக்தி………

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச விழாவை முன்னிட்டு , இருமுடி ஏந்தி வரும் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கும் வகையில், சித்தர் பீட வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட அன்னதானக் கூடங்களை ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் திறந்து வைத்தார் .

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் முக்கிய விழாவான தைப்பூச விழாவை முன்னிட்டு இருமுடி ஏந்தி வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் சித்தர் பீடத்தின் கருவறையில் வீற்றிருக்கும் சுயம்பு, அன்னை ஆதிபராசக்திக்குபூஜை செய்து விட்டு , அங்கு வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிடுவர். இருமுடி செலுத்தும் நிகழ்ச்சி இந்த ஆண்டு வரும் டிசம்பர் 10 ம் தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 3ம் தேதி தைப்பூச ஜோதியுடன் நிறைவடைகிறது.

கடந்த ஆண்டு தைப்பூச இருமுடி நிகழ்ச்சியில் 60 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானத்தில பங்கேற்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலான பக்தர்கள் வருவார்கள் என்பதாலும் பல்வேறு நகரங்களில் இருந்து செவ்வாடை பக்தர்களின் வசதிக்காக சித்தர் பீடத்தின் பின்புறம் , ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு அருகில் மாபெரும் புதிய அன்னதானக் கூடங்கள் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் கட்டப்பட்டுள்ளது . இதன் திறப்பு விழாவையொட்டி நேற்று காலையில் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது . நண்பகல் 1 . 00 மணிக்கு ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் கட்டடத்தைத் திறந்து வைத்தார் . ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஆன்மிக இயக்க துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அன்னதான கூடத்திற்கு நேரில் சென்ற பங்காரு அடிகளாருக்கு செவ்வாடை பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது . அங்கு வைக்கப்பட்டிருந்த அன்னலெட்சுமி , தானிய லெட்சுமி சிலைகளுக்கு தீபாராதனை செய்து, கற்பூரம் ஏற்றி வைத்து சமையல் பணிகளை தொடங்கி வைத்தார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் பின்புறமுள்ள 30 ஏக்கர் நிலப்பரப்பில் , பக்தர்கள் வாகனங்கள் நிறுத்திவிட்டு செல்ல, அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன . இதன் அருகே அன்னதான கூடம் அமைக்கப்பட்டுள்ளதால் இருமுடி பக்தர்களுக்கு வசதியாக அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.
]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here