மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி மும்மணிக்கோவை

பாகம் – 2

ஆசிரியப்பா

13. மேதகு சத்தியின் மேலாம் பீடங்கள் உலகிற் பல்லிடத் துற்றுள வென்னினும் வானலர் மண்ணவர் மாறுள மற்றவர் யாவருந் தொழுதுயர் யாக்கையின் பயனைப் பெறுமா றமைந்த பேறுரும் மருவூர் ஆதிபரா சத்தி அனைத்துப்பீ டங்களின் சிறப்புகள் திருவருள் சேர்ந்தவை யெல்லாம் ஒருங்கே கொண்டுதன் சுயம்பு வடிவால் திகழ்வது கண்டால் தீரும் இடர்கள் கண்டவர் கண்களைக் கவர்ந்துதன் மேனி யொளியைக் காட்டி உற்ற நல் அடியராச் செய்யும் அற்புதம் நிறைந்தவன் ஆதலின் காலம் கடவாது கருத்தொன்றி மருவூர்க் குலவு மன்னைக்குத் தொண்டுசெய் வீரே.

வெண்பா

14. தொண்டு செய்அன்பர் தொழுதேத்த மேல்மருவூர் மண்டும் பராசத்தி வண்மையினால் – ஈண்டி வருவோர்க்குக் காணரிய வண்மையொ டெல்லாம் தருவாள் என்றறிவீர் சார்ந்து

கட்டளைக் கலித்துறை

சார்ந்தவர் பக்குவம் கண்டதற் கேற்பத் தனியருளை ஓர்த்து கனவில் தனதுருவத்தை உறவமைத்தும் வார்த்தவோ? மாகணம் கார்நிற லாராகி மாண்வடிவாய்ச் சேர்த்தும் அடியாச் செய்யும் மருவூர்ச் சிறந்தன்னையே

ஆசிரியப்பா

சிறந்த கொழுநராம் சிவனிடப் பாலமைந்தும் உறந்த இருநாழி நெல்கொண்டு உலகுயிரை ஓராண்டு காத்தும் உயிர்போல் மருவிய கலைமகள் திருமகள் கண்களாய்க் கொண்டு மன்பதை கட்கு மனப்படு கல்வியும் துன்னும் பொருளும் தந்தும் உலகைப் புரக்கும் அருள்வடி வாகிப் புரிசடை வித்தகன் தனக்கு விதுப்புறும் அருளினை அடியவர் பெறச் செய்தும் அன்னைகா மாட்சியாய் அகில உலகமும் ஆதாரத் தோடு காணக் கச்சியில் காமக் கோட்டத்தில் எழுந்தருள் இறைவியாய் இருந்தனை! மருவூர் மலைமேல் விளக்கென மற்றவர் அறியச் செய்தனை! என்னுளம் தெளிவுறப் புரிந்த தாயே! கபாலி! தயாபரி! சதுமறை தேடரும் கமலச் சேவடி யுடையோய்! வாட விடாதெனை வாழ்விப்பாய் இனியே!

வெண்பா

17. இனிதாய் இயங்கும் இரவியும் மதியும் நனிவிண் மிசைசூழும் நாளும் – கனவுடைய நின்னரு ளாலே நிதமும் ஒளிருமால் மன்னுமரு வூர்வா முன் மண்பா

கட்டளைக் கலித்துறை

18. மாண்பார் மருவூர் மருவிய மாதே! மகிதலத்தைக் காண்பார் எவையும் தினதிருப்பார்வை கடிதுறலால் பூண்பார் உடலாய் உயிராய்ப் பிறங்கும் பிறபொருளாய் நீண்டே இயங்குமென வறிவார்கள் நின்மலியே

ஆசிரியப்பா

19. மலிநீர்க் கங்கை மதிப்பிறை மாகணம் தரித்த சென்னியன் சம்புவென் போன்தன் தாயாய் மகளாய்த் தாரமாய் அமைந்தச் சிவனியங் கற்குண் சீர்த்த பார்வையால் அருளினை அவன்முன் ஆல காலமாம் நஞ்சினை யுண்ண நயந்தவன் கனத்தில் நிறுத்தனை, ஐங்கரன் நீள்வடி வேலோன் தம்மையும் உதரத்துள் உலகையும் தரியாது பெற்றனை, பெற்றமும் பிறங்கிடும் சீயமும் ஊர்த்தனை உன்னால் உறாததெப் பொருள்தான், மருவூர் வாழும் மாதங்கி! மதுரம் செறிந்த கரும்பும் சேர்அபய வரதமும் சங்குசக் கரமும் தரித்தனை, திருமால் தங்கை யென்று சாற்றுதற் குரியோய் நிறைவள மென்றும் குறையாச் சீர்த்தி மருவூ ரமர்ந்தனை மருவும் அடியரைக் காக்கும் அவணி முதல்வியே!

வெண்பா

20. அவனி முதல்வி அடியார் உளத்தில் கவலையில் லாமல் கவினி – நவநவமாய் அஞ்ஞானம் போக்கும் அவியா விளக்காகும் மெய்ஞ்ஞான மேல்ம ருவூர் மாது

கட்டளைக் கலித்துறை

21 மாதா வயிற்றிற் கிடந்து வருந்தியிவ் வையகத்தில் ஆதார மாகப் பிறந்து வளர்ந்தும் அணங்கனையார் சேதார் இதழ்கள் விழிகளிற் சிக்கித் தெளிவின்றியே கோதார் வினைகள்செய் தேன்மரு வூரன்னை கொண்டருளே

ஆசிரியப்பா

22. பிறந்தேன் இடும்பை பிறங்குமிவ் வுலகில் மறந்தேன் நின்திரு நாமம் வளசமலர்ப் பாதம் வணங்கேன் வனிதையர் கண்வலையில் சிக்கிச் செய்யொணாத் தீவினை செய்தேன் அய்ய மின்றி அரும்பொருள் தேடினேன் ஐம்புல வேடர் அடியெனைத் தீநெறியில் உய்த்தனர் அவர்தம் உறுநட்பு நீங்கலேன் உயர்வுக்கு வழிசொலும் உற்றோர் மொழிகளை உதறித் தள்ளினேன், உயர் சாத்திரங்கள் கற்றும் அவற்றின் கருத்துப் படிநடவேன் எவ்வாறு? மருவூர் இருக்கும் பராபரிநீ கைவிடில் வேறு கதியிலைபார் கருணையனே!

வெண்பா

23. கருங்குழல் வண்டும் கடிமலர்க் கையில் மருவிய வண்டும் வனசம் – பொருவும் திருமுக வண்டும் சிறந்தொலி செய்ய மருவூ ரமைந்தாய் நின் மாண்பு

கட்டளைக் கலித்துறை

24. மாண்பார் மருவூ ரனைநின் திருவடி மறந்தறியேன் தூண்டும் மனத்துன் பெயரை இயம்பித் தொழுதிடுவேன் வேண்டேன் உலகின்பம் தேன்மல ரால்பூசனை செய்குவேன் ஏண்பா லவர்வாழ் மருவூரனை! யௌக் கென்குறையே?

ஆசிரியப்பா

25. குறையேது மில்லாக் குணக்குள் றே! முகில்போல் திருமேனி தன்னில் பவளமும் முத்தும் கமுகும் நீலமும் கமலமும் அமைந்தமை செவ்விதழும் முறுவலும் சிரிப்பும் விழிகளும் திருமுகத் தமைந்ததுபோல் காட்டி அடியரைத் தொண்டு செயச் செய்குவான் தொல்மருவூர் வாழும் மனோன்மணி மாதங்கி சுந்தரியே!

வெண்பா

26. சுத்தரம் நிறைந்து சுடர்மேனி வாய்ந்துபெரும் மந்தர மனைய வனமுலையார் – அந்தமிகும் கற்பகப் பேரகம் கருதும் பதம்வேண்டேன் பொற்பார் மருவூரிற் போத்து.

கட்டளைக்கலித்துறை

27. போகப் பொருளாய் சுவர்க்கமும் மற்றைப் பெருவில்பதத் தாக மவைபெறின் என்னாம்? மருவூர் அமர்ந்ததிரு ஏக தயாபரி சேவடி சேர்ந்தங்கி யல்மனத்தால் பாரு பொழியால் பரவுதற்கீடிலை மற்றைவையே.

ஆசிரியப்பா

28. மற்றுமோர் தெய்வ வழிபாடு செய்யார் யாமனை ஆகமமும் அ றிந்தமைந் தோரே சிற்பரை மற்றவன், சிறுப்புறும் கன்னியர் எழுவர் முதல்வியாய் ஏற்றகா பாலியாய் முத்தலைச் சூலம் முன்னிக் கொண்டவன் சூலத்தின் கூன்று சுடர்களும் மூவர் தேவரைக் கைக்கொண்டு திகழும். அவர்செயல் மேவரப் புரியவும் ஏவலின் நிற்கவும் செய்பவன் என்பதைத் தெளிவுறக் காட்டும் அன்றியும் அடியார்க் கரும்பகை நேர்ந்தால் அழியச் செய்யும் ஆரணி பூரணி மருவூர் மேவிய மரகத வடிவினன் அவள்திரு வடியை அன்பாய் நாளும் தவராது தொழுவது தக்கது தமக்கே

வெண்பா

29. நமக்கரண் மேல்மருவூர் நாயகியா மென்றே நமன்துயர் மாற்றி நலமாய்க் – குனிதிரைநீர் ஞாலத் துயிர்கள் நனிபயம் நீங்கின ஆலும் மறைமொழியி தாம்

கட்டளைக் கலித்துறை

30. ஆன்ற புகழ்மரு வூரினில் வாழும் அனையவன்தான் ஈன்ற கமல முகத்தி கொடிபோல் இடைச்சியுயிர் மான்ற மணமீன் படுத்தும் வலைச்சி மயலகற்றி ஊன்றும் விழிச்சி அபய கரத்தி உலகவனே. முற்றும். ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 3 (1982) பக்கம்: 17-20]]>