எல்லாம் அவளே

0
1730

அன்னை ஆதிபராசக்தி ‘‘எல்லாம் நான்தானடா” என்று அடிக்கடி கூறிவருகின்றாள். இதை மனத்தில் வைத்துச் சிந்தனை செய்தேன். உயிர் உள்ள எல்லாப் பொருள்களிலும் மின் சக்தியாக அன்னை ஆதிபராசக்தி இருக்கின்றாள் என்பதைச் ‘‘சக்தி ஒளி”யில் படித்தோம். ஆனால் ‘‘எல்லாம் நானே” என்பதன் உன் பொருள் அது மட்டும் அல்ல! உலகில் உள்ள எல்லாப் பொருளும் அவள்தான் என்று விஞ்ஞான ரீதியாக தெரிந்து அறிய வேண்டும்.

உயிரற்ற பொருள்களில் அவள் இருக்கின்றாள் என்றால், கல், மண், இரும்பு, தூண், துரும்பு முதலியவைகளிலும் இருக்கின்றாள் என்றல்லவா பொருள்? சாதாரணமாக நம் அறிவுக்கு இது புரியவில்லைளே! எல்லாமே அவள் என்று எப்படி நிரூபிப்பது? வேதாந்தம் ஆன்மிகத்தின் மூலம் இதை உணர முடிகின்றதல்லவா! ‘‘எல்லாம் சிவமயம்”, ‘எல்லாம் ஏசுவே”, எல்லாம் அல்லாவே”, ‘‘சர்வம் விஷ்ணு மயம் ஜகத்” என்ற வாக்குகளை அன்றாடம் கேட்டு வருகின்றோம். எல்லாம் ‘‘சக்தி மயம்” என்று அன்னை கூறுகின்றாள். நாம் இப்போதுதான் புரிந்துகொண்டு வருகின்றோம். சக்திக்கும் எல்லாப் பொருள்களுக்கும் அடிப்படையான தொடர்புண்டு என்பதை உணர வேண்டும். சக்தியே எல்லாம் என்பது உண்மை.

எப்பொருளிலும் சக்தி (Energy) இருக்கின்றது என்பது விஞ்ஞானம். இந்த ஒற்றுமையான தொடர்பைக் கண்டுகொண்டு ஆராய்ந்ததின் விளைவே அன்னையின் அருளுடன் கிடைத்த விடை. அது இதோ!

பராசக்தியை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்று சக்தியாகக் கூறுவோம். ஆதிபராசக்தியே பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என மூவராக இருந்து முத்தொழிலையும் செய்கின்றாள். சரஸ்வதி, இலக்குமி, பார்வதி ஆகிய மூன்று பத்தினிகளாக அவர்களுக்கு அமைத்துள்ளாள்; அவளின்றி ஓர் அணுவும் அசையாது, என்பதைப் புரிந்து கொள்ளலாம். எல்லாம் மூன்று தானா? மூன்று மூர்த்திகள், அவர்களுக்கு மூன்று சக்திகள், சிவன் – பார்வதி, விஷ்ணு – இலக்குமி, பிரம்மா – சரஸ்வதி, இரட்டையான மூன்று தம்பதிகள்! மலைமகள், திருமகள், கலைமகள் ஆகிய மூன்று மகன்களாய் வந்தவள் பராசக்தி! மூன்று இரட்டையர்களு;ககும் ஒரே தொழில், ஒரே பாவனை, ஒரே திறம், சிவன் ஞானத்தைக் கொடுப்பது போல அவள் சகோதாரியான சரஸ்வதியும் ஞானத்தை தானே தருகின்றாள்?

விஷ்ணு சங்கு சக்கரத்தைக் கைகளில் வைத்திருப்பது போலவே அம்பாள், தனிவாக இருக்கும் துர்க்கை நிலையில் அவன் கைகளில் இருப்பது சங்கும் சக்கரமும் தானே! நிறம் கறுப்பு (கருநீலம்). பிரம்மா – இலக்குமி இருவருடைய ஆசனமும் தாமரைப்பூ; இரட்டையர் நிறமும் மஞ்சள் நிறமே! பிரம்மா சதா படைத்துக் கொண்டே இருக்கின்றார். இலக்குமியும் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கின்றாள். மூன்று தொழில், ஆக்கல், காத்தல், அழித்தல்; மூன்று குணங்கள், சத்துவம், ரஜசம், தாமசம், சத்துவம் – வெளுப்பு; ரஜசம் – மஞ்சள்; தாமசம் – கறுப்பு. இவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருக்கின்றன. அதாவது ஆதிபராசக்தி ஒன்றுக்கொன்று தொடர்பாகக் காட்சியளிக்கின்றாள். பராசக்தி எல்லாமாய் மாறுகின்றாள். எல்லாவற்றையும் ஒன்றாகக் காட்டுகின்றாள். எல்லாம் சக்திமயமாய் மூன்றாகவும் விளங்குகின்றாள்.

இந்த எண்ணங்களுடன் அவள் அடிப்படைப் படைப்புகளையும் ஆராய்ந்தேன். ஒவ்வொரு பொருளும் மிகவும் நுண்ணிய அணுக்களால் ஆனவை. அதாவது மிகச் சிறிய அணுக்களால் ஆனவை. அதைவிட வேறு சிறிய நுண்ணிய துணுக்குகள் கிடையாது. ‘‘அணுக்களைத் துளைக்க முடியாது.” என்று கருதிய காலத்திலேயே அணுவைத் துளைக்க முடியும் என்று உலகுக்குக் கூறினான் தமிழன். அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்தியது போல், திருக்குறளை எடுத்துக் கூறவில்லையா? அந்த நுண்ணிய பொருள் தான் அணு! அணு என்றால் என்ன? அணுவைத் துளைத்தால் என்ன இருக்கின்றது? அணுவில் எவ்வளவு சக்தி இருக்கின்றது? எவ்விதம் அணு சக்தி மயமாகின்றது?

முன்பெல்லாம் அணு என்பது சிறியதிலும் சிறிய, உடைக்க முடியாத, நுண்ணிய, கெட்டியான, கட்டியாகவே கருதப்பட்டது. பின்னர் இந்தத் தத்துவமே தவறானது, என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்தனர். நுண்ணிய அணுவே ஒரு பெரிய சூரீய மண்டலம் போல் உள்ளதைக் கண்டுபிடித்தனர். சூரீயனை மையமாக கொண்டு சுக்கிரன்,பூமி, வியாழன், சனி போன்ற கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் சுற்றி வருவதை இன்று யாவரும் அறிவோம். அதேபோல் ஒரு உட்கருவை (Nucieus) மையமாகக் கொண்டு சிறு நுண்ணிய பொருள்கள் (Partlcies) அதைச் சுற்றி வருகின்றன. ஒரு அணுவை ஒரு பெரியகூடைப்பந்து அளவிற்குப் பெரிதாக்கிப் பார்த்தால், அணுவின் உள்ளே என்ன நடக்கின்றது என்பது புரியும்.

உள்கருவாக இருப்பதில் இரண்டு பொருள்கள் இருக்கின்றன. அவற்றிற்கு நியூட்ரான் என்றும் புரோட்டான் என்றும் பெயர். வெளியில் இக்கருவைச் சுற்றி வருவதற்கு எலக்ட்ரான் எனப்பெயர். ஒரு துப்பாக்கியிலிருந்து வரும் ரவை எவ்வளவு வேகமாக வருகின்றது! அதைவிடப் பலமடங்கு அதிக வேகமாகச் சுற்றி வருகின்றது. உட்கருவுக்கும் சுற்றிவரும் எலக்ட்ரானுக்கும் இடையே பெரிய சூனிய இடைவெளி இருக்கின்றது. அதாவது சூரியனுக்கும், அதைச் சுற்றி வரும் கிரகங்களுக்கும் உள்ள இடைவெளிபோல் சூனியப் பிரதேசம் இருக்கின்றது. இவ்விதமுள்ள அணுவினால்தான் கெட்டியான பதார்த்தகள், பொருள்கள் ஆனவையென்றால் நம்ப முடியவில்லையல்லவா? இரும்பு முதல் சுவர், மரம், கல் எல்லாம் இவ்வணுக்களால் ஆனவையே, எலக்ட்ரான்கள் இவ்வணுக்களின் உட்கருவை ‘‘எலக்ட்ரான்” வேகத்தில் சுற்றுவதால் அதாவது கணக்கிட முடியாத மிக வேகத்தில் சுற்றிச் சுற்றி வருவதில் அணுவைக் கெட்டிப் பொருளாக இருக்கச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக நமது வீட்டில் மின் விசிறி சுற்றுகிறது; அது கூன்று தகடுகளை உடையது; சுற்றும்போது அத்தகடுகளுக்கு இடையே உள்ள இடைவெளிதெரிவதில்லை. மிதி வண்டியின் சக்கரத்தில் ‘‘ஸ்போக்ஸ், என்ற கம்பிகள் உள்ளன. அச்சக்கரம் வேகமாகச் சுற்றும்போது கம்பிகள் தெரிவதில்லை. ஒரே தகடு போல் அல்லது வட்ட வில்லை போல்தெரிகின்றது. சாதாரண ‘‘நிலையில் அக்கம்பிகளின் நடுவில் கைவிடுவது போல், அது சுற்றும்போது கையையோ, விரலையோ நடுவில் விட்டால், கைவிரல் துண்டாக நேரிடும் ஆனால், உண்மையில் இடைவெளி இருக்கத்தான் செய்கின்றது இல்லையா?

எலக்ட்ரான் சுற்றிவரும் வேகத்துடன் இவற்றின் வேகத்தை ஒப்பிட்டுக் கூடப் பார்க்க முடியாது. ஆனால் ஒரு துப்பாக்கிக் குண்டை மின் விசிறியின் தகடுகள் சுற்றும் வேகத்தைக் கணக்கிட்டுச் சுட்டால் அத்தகடுகளுக்கு இடையே எளிதில் இடைஊர்இன்றி செல்ல முடியும் காரணம்? துப்பாக்கிக் குண்டு விசிறியின் தகடுகளின் வேகத்தை விட அதிவேகமாகப் பாய்வதால்தான் இவ்வாறு நிகழ்கிறது. அதேபோல் சில அணுத்துளிகள் அதிவேகமாகப் பாய்கின்ற காரணத்தால் அதை அணுவினுள் சுற்றிவரும் லைக்ட்ரான்களுக்குள் உள்ள இடைவெளியின் வழியே சென்றுவிடுகின்றன. ஆதிபராசக்தியின் படைப்பின் மகிமையை விஞ்ஞானம் இப்போதுதான் தெரிந்து கொள்ள முடிந்ததோ என்னவோ! இதன் விளைவே ‘‘அணுகுண்டு”.

அணுவினுள், அன்னை ஆதிபராசக்தி இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்தி கனரகப் புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் ஆகிய மூன்று பொருள்களாக விளங்குகின்றாள். உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் இந்த மூன்று பொருள்களை உடைய அணுவினால் ஆனவையே. எல்லாம் சக்தியே என்பதின் தத்துவத்தை விஞ்ஞானம் நம் அறிவுக்குப் புலப்படுத்துகிறது.
ஒவ்வொரு அணுவிலும் உள்ள புரோட்டானின் எண்ணிக்கை மாறுபடுவதால் தான் உலகிலுள்ள பொருள்கள் எல்லாம் பல பொருள்களாகத் தம் தன்மைகளில் மாறுபட்டு வேறு வேறாக நமக்குத் தெரிகின்றன். இவ்வாறு மூன்று நுண் பொருட்களை வைத்துக் கொண்டு இந்தப் பராசக்தி எவ்வளவு பொருள்களைக் காட்டி மாயை புரிகின்றாள்! தங்கத்தில் 79 புரோட்டன்களும், வெளியில் 47ம், இரும்பில் 26ம் இருக்கின்றன!

நியூட்ரான் ஞானிகளைப் போல் சாந்தமாக எந்தவித ஆட்டமுமின்றி அசையாது இருக்கின்றது. இதுதான் ஞானசக்தி. ஆனால் உன் கருவில் இருக்கும் புரோட்டனிலும் அதைச் சுற்றி வரும் எலக்ட்ரானிலும் மின் சக்தி இருக்கின்றது. இம்மின் சக்தி ஒரு பேனாவைத் துணியில் தேய்ந்தால் ஏற்படும் கவர்ச்சி சக்திச் சிறு பேப்பர் துண்டுகளைக் கவர்ச்சித்து இழுக்கும் சக்தியைப் போன்றது. அதை எதிர்மறை இழுப்புச் சக்தி (Negative charge) என்பர். தேய்த்த துணியில் இச்சக்திக்கு நேர் எதிரான சக்தி ஏற்படுகின்றது. (Possitive Charge) அதுவே ‘‘சமப்படுத்தும் சக்தி”.
இதுபோலவே புரோட்டானில் ஒரு மின் சக்தியும் சுற்றி வரும் எலக்ட்ரானில் நேர் எதிரான மின் சக்தியும் உள்ளதை விஞ்ஞானம் கண்டுள்ளது. ஒவ்வொரு சக்திக்கும் நேர் எதிர்முகச் சக்தியைத் தந்திருப்பதுதான் பராசக்தியின் தத்துவமோ?
தொடரும்…

ஓம் சக்தி!

பக்கம்: 9-12.
நன்றி: சக்தி ஒளி.
விளக்கு -1 சுடர் 3 (1982).