மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி மும்மணிக்கோவை

காப்பு – வெண்பா அகில மெலாங்காத் தளிக்கும் நன் மாதா நகில் மறைபோற்றும் தலங்கள் – பகிராத மேல்மருவத் தூரன்னை மும்மணிக் கோவைக்கு நால்வாயான் ஐங்கரன்தான் நாடு. நூல் ஆசிரியப்பா 1 உலகோர் நாளும் உண்மை யன்பொடு நலமுற வாழ்த்தும் நங்கை; உற்றவர் இடுக்கண் போக்கி எழும்நன் ஞானம் கொடுக்கும் காரணி; கோள்பிறை யாறு செந்தியில் தரித்த செந்திரு வடியான்; வானவர் மண்ணோர் வாயாரத் துதிக்கும் தாரணி கெளரி, நவில்பரா சத்தி வேத முதல்வி, வித்தகி, பூரணி, செய்வளங் குன்றாமல் கொழும்புளல் நிறைந்த நீர்நிலை, துடவை, நிகரில் அடியவர் பித்தா தமைந்து பிறங்கு மருவத்தூர் மேவிய அன்னை மிளிர்கமல வதனத்துள் கருணை விழிகள் காண்பவர் கொண்ட மருளினை நீக்கி மாண்புறச் செய்யும் சுயம்பு வடிவாம் தூயவள், நம்பும் அன்பர்கள் துயரம் அகற்றும் பார்வதி. சேவடி சேருமின் சேரும் இன்பம் தாவல ரும்துயர் தணியும் இனிதே. வெண்பா 2. இனிதே மருவத்தூர் ஏற்றபரா சத்தி தணியருள் மேனி தரித்தாள் – பனிமலர்க் கோதை மருள்நீக் கும்கோமாட்டி தானிணையைத் தூதைமலர் தூவிடுவீர் சூழ்ந்து கட்டளைக் கலித்துறை 3. சூழ்ந்த பிணிநீங்கும் பேசும் நலமுண்டாம் சூர்த்தவிழி ஆழ்ந்த மகிடன் தலைமித் தாட்கொண்டரி பரியின் தாழ்ந்த பிடர்மேல்வந் தாதரவாய்த் தன் சரணமதைக் காழ்ந்து படிகாட்டும் மேல்மருவூர் வாழும் காரணியே! ஆசிரியப்பா 4. காராரும் ஆணவம் காட்டை எரித்து தோரர் மனமாய் நிலத்துள் மருவூர் அம்பிகை வடிவாம் வித்தினை விதைத்து முன்புசெய் நேர்த்தி முழுவதும் செய்துபின் அன்புநீர் பாய்ச்சி ஐம்புலக் கனைகட்டுச் சிற்றின் பத்தைச் சிறைசெய்து மோளக் கருத்தாய்ப் பிறவெண்ணம் கலவாமல் மூக்கின் நுனிபார்த் தொருநிலை நோக்கி நிற்கும் அடியவர் மறைமுடி அமர்ந்தவள் வடிவை எண்ணி உலகத் திறைவி, காரணி, பார்வதி, கௌமாரி, பராசத்தி, ஞான உருவாய் நிறைந்த உமையே! பாரினைப் படைத்துக் காத்துப் பண்புறுத்தும் செல்வி! என்று பலகால் ஈடின்றித் துதித்தால் சீர்பெறும் விளைவும் செம் சால்உடலும் மை தருவா னவனடி சார்த்துய்கு வீரே! வெண்பா 5. வீயும் பெருஞ்செல்வம் வீணில் உடல்மாயும் சேயும் மனையும் செழுங்கினையும் – தீயுண்ட நல்விறகில் நீறாகும் றண்ணி மருவத்தூர்ச் செல்வி பராசத்தி சேர்ந்து. கட்டளைக் கலித்துறை 6. சத்தியம் செய்வேன் மருவத்தூர்த் தேவி சரணமதை மெத்திய அன்புடன் பங்கா ரடிகள் முன்னமெவ அவள் தத்துத லில்லா அருளால் பலசித்துத் தந்தளனால் புத்தியில் அஞ்சனம் சொலச்செய் தானித்து பொய்யலவே! ஆசிரியப்பா அதுவிது வென்றே புதுவதாய்ச் சில்லோர் கதுமெனச் சொல்லிக் காண்பவர் உள்ளம் கலக்கி மாற்றுவர் கயவரே அவர்தாம், ஐம்புல இன்பமே அடையத் தக்கது, மனைவி மக்களொடு மருவுதல் பேரின்பம் கடவுளு மில்லை கண்டவர் இல்லை, என்றே நாத்திகம் இயம்புவோ ரென்னினும், மேல் மருவத்தூர் மேவிப் பராசத்தி திருமுன் வந்தவள் தெய்வ உருவினைக் கண்டால், தம்மைக் காணார் பத்தி வழியில் நின்று வழுத்தி ஆத்திகர் ஆருந ரன்றி அறிவில ராகார் இங்ஙனம் பல்லோர் இயல்பாயச் சக்தியின் திருவருள் பெற்றுத் திகழ்ந்தனர். ஆதலின் மருவூரம்பிகை மாண்பினை எடுத்துக் கூறுதல் எளிதோ குலவியவள் தான் சேர்மின் சிறப்புடன் நிலைத்தவாழ் வுறலே! வெண்பா 8. வாழ்வார் மருவூர் மறைசொலும் சத்திதான் ஊழ்வினை பாற்றும் உமையவன் – தாழ்வில்லா வாழ்நாளை வீணில் மடியா தினியன்பாய்ச் சூழ்ந்தவளை வாழ்த்துமின்கள் தேர்ந்து கட்டளைக் கலித்துறை 9. மின்னும் மகரக் குழையும் மணியொளி வீசுமுடி துன்னும் திருவடிக் கிண்கிணி வாய்ந்த துகளில் கலை மன்னும் உமையாள் கமல வதனமும் வாழ்ந்திடவே பொன்னின் அணிகளும் சேரும் மருவூர்ப் பொலங்கொடிக்கே ஆசிரியப்பா 10. கொடுமை செய் கூற்றமும் குணமிலாப் பேயும் னடுச்செய் நோயும் வாழ்க்கையிற் கேடும் உற்றவர் மருவூர் உயர்பரா சத்தியின் திருத்தனி யடைந்து தினமும் தொழுதும் அருமையார் வேம்பின் அமைந்த உடையினைத் தூய்மை செய் துள்ளதுகளில் உடலில் சுற்றியும், ஓம் சத்தி தூயோய்! என்று பலகால் அவள்தன் பண்பார் பெயர்களைக் கூறி உடலினைக் கொண்டுகீழ்க் கிடந்தி புரண்டு வலம் வந்து போக்கறும் வினைகளைப் போக்கிப் புகழும் பொன் முதற் செல்வமும் பெற்றிங் குய்ந்தனர்; பெறவரும் கல்வி கற்றவ ருந்துதி காபாலி யடிகளை என்றும் போற்றுதல் ஏற்றமாம் மன்னாப் பிறவியின் மாண்பய னஃதே! வெண்பா 11. தேனார் பொழில் துற்றுத் தேங்குமெழில் நந்தனமும் வானார் செழுஞ்சாலி வண் கரும்பும் – ஆனது மாரியிலாக் காலத்தும் வனந்தரும் மேல்மருவூர்க் காரியுண்டி யன்னையருள் காண்! கட்டளைக் கலித்துறை 12. காண்டற் கெளியவள் அன்பருக் கென்றும் கருத்தில்லார் தீண்டற் கரியவள் தெய்வ வடிவினள் சேர்ந்து மறை பூண்டு பரவும் போதம் உடையவர் போந்து தொழ வேண்டும் வரந்தரும் மேல்மருவூர் அன்னை மேதகவே! ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 3 (1982) பக்கம்: 25-28        ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here