1990ல் நான் அடிக்கடி ஹரித்துவார்,ரிஷிகேஷ் ஆகிய இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். இமயமலை அடிவாரத்தில் இயற்கை அழகை ரசிப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று.

ஒருமுறை ஹரித்துவார் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. பட் அவர்கள் என்னையும், பேராசிரியர் திரு. இராமச்சந்திரன் அவர்களையும் ஹரித்துவார் வருமாறு அழைத்திருந்தார்.

நான் டெல்லி சென்று அங்கிருந்து டூன் எக்ஸ்பிரஸ் மூலம் ஹரித்துவார் சென்றோம். எங்களை ஹரித்துவாரிலுள்ள ‘மெட்ராஸ் கபே’ உரிமையாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அய்யர் அவர்கள் ஸ்டேஷனுக்கு வந்து அவரது இருப்பிடத்திற்கு அழைத்து சென்றார்.

நல்ல, தென்னாட்டு உணவு கொடுத்து உபசரிக்கும் அன்பர் அவர். தனது பூஜை அறையில் அன்னை ஆதிபராசக்தியின் படமும், ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் படமும் வைத்தது வழிபாடு செய்து வருபவர். நாங்கள் ரிஷிகேஷ் முதலிய இடங்களுக்கு செல்லும் பொழுது தனது மகனையும் எங்களின் உதவிக்கு அனுப்பி வைப்பார்.

நாங்கள் ஹரித்துவார் சென்றவுடன் திரு. பட் அவர்கள் எங்களைக் காலையில்10.00 மணியளவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்ச் (குலபதி)சந்திக்க அழைத்துச் சென்றார்.

நானும்,பேராசிரியர் திரு. இராமச்சந்திரனும் செவ்வாடை அணிந்திருந்தோம். துணைவேந்தரின் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும்,எங்கள் செவ்வாடையைக் கண்டு, மதித்து தன் இருக்கையை விட்டு அவர் எழுந்து வந்து எங்களை இரு கைகூப்பி வரவேற்று, அவரது இருக்கைக்குப் பக்கத்தில் அமரச் சொன்னார். அப்பொழுதுதான் செவ்வாடைக்கு உள்ள மதிப்பு, மரியாதை எங்களுக்குப் புரிந்தது.

வட மாநிலத்தில் செவ்வாடைக்கு எப்பொழுதுமே மரியாதை உண்டு. ‘We are the Devotees of Melmaruvathur'(நாங்கள் மேல்மருவத்தூர் பக்தர்கள்) எனக் கூறினோம். அதற்கு துணைவேந்தர், ‘I Know Bangaru Swamiji(பங்காரு ஸ்வாமிகளை நான் அறிவேன்) எனக் கூறினார்.

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள்செய்து வரும் சமுதாய சேவைகள், அன்னதானம், கருவறையில் பெண்களை அனுமதித்தல்.பெண்களின் முன்னேற்றம், வேள்விப்பூசைகள் முதலியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறினோம்.

அவர், உடேன எழுந்து, ‘வாருங்கள், வெளியே செல்வோம்’ எனக் கூறினார். பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்தவுடன், ஆங்காங்கே பல இடங்களில் யாக குண்டங்கள் கட்டப்பட்டிருந்ததைப் பார்த்தோம். அவற்றைச் சுட்டிக்காட்டி இந்த யாக குண்டங்களில் ,மாணவர்கள் யாகங்கள் செய்து வருகின்றனர். மேலும் நாள்தோறும் காலை 6.00மணிக்கு யோகாப்பியாசங்கள் செய்வர் என கூறினார். நாங்கள் மகிழ்வடைந்தோம். அவரிடம் விடை பெற்றுக்கொண்டோம்.

மறுநாள் ஹரித்துவாரிலிருந்து ரிஷிகேஷ் சென்றோம். மாலை நேரம். மிகவும் ரம்மியமாக இருந்தது. நான், பேராசிரியர் திரு. இராமச்சந்திரன்,பேராசிரியர் பட் ஆகிய மூவரும் இயற்கை அழகை ரசித்து கொண்டே மரங்கள் அடர்ந்த சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தோம்.

அப்பொழுது சாலை ஒரத்தில் சாது ஒவர் ஒற்றைக்காலில் தவம் செய்து கொண்டிருந்தார். தலைமுடிக் கற்றைகள் கால் வரையில் நீண்டிருந்தன.அவரிடம் ஏதோ ஒர் ஈர்ப்பு சக்தி இருந்தது. உடேன பேராசிரியர் பட், ‘இவர் ஒரு பெரிய மகான். பல வருடங்களாக இப்படி ஏகபாத ஆசனத்தில் தவம் செய்து கொண்டிருக்கிறார். காற்றின் மூலமாகவும், சூரிய ஒளியின் மூலமாகவும் தனது உணவையும், சக்தியையும் பெற்றுக்கொள்கிறார். யாரிடமும் பேசமாடார். எப்போதாவது சிலரிடம் ஏதாவது சொல்லுவார் எனக் கூறினார்.

நாங்கள் அவரைக் கடந்து செல்லும் நிலையில் இருந்தோம். அப்பொழுது அந்த சாது கண்விழித்து எங்களைப் பார்த்தார்.

‘Oh! Red dress! Come here! என்றார். நாங்கள் அவர் அருகில் சென்றோம்.

Swamiji ! Namaskar! we are coming from Tamilnadu. We are the disciples of Bangaru Adigalar of Melmaruvathur என்றோம்.

Immediately,he materialised 3 rotors from space and asked us to eat.

நாங்கள் ரொட்டியைச் சாப்பிட்டவுடன், அவர் தொடர்ந்தார்.

Oh! Men!
Red is the symbol of unity and universal brotherhood. I know Bangaru Maharaj and Melmaruvathur better than you . Listen my words!

(உடனே பேராசிரியர் இராமச்சந்திரன் தனது டையில் சுவாமிகள் சொல்வதைச் சுருக்கெழுத்தில் எழுத ஆரம்பித்தார்.)

Bangaru Maharaj is the saviour of Mankind. He is the man of compassion. He is the embodiment of Adisakthi, Adhiparasakthi. I like his Divine Oracle. Melmaruvathur is the center of spiritual Culture and Social Service. Bangaru Maharaj transforms Power- pelf- Pleasure oriented ruts to the life of Purity, Simplicity and Divinity. He dislikes untouchability,in approachability and unshadow ability. Service is the crown of his philosophy. He fights for the upliftment of oppressed and Suppressed class of the society. He fights for the development of women. The yaganas Which he performs can Purify the Mother Nature and the entire universe.

He can control the elements (panchabutas). He stresses self-realisation through meditation. Service is the key to emancipation . Bangaru Maharaj is a Grashasta. But he is the lord of all sadhus, yogis, Sannyasis, and Nava Nadha Siddhas of Himalayan region. Bangaru Maharaj ordered me to stand one legged-Eka patha Asana-and do Tapas. Gorakh Nath Siddha is the chief disciple of Bangaru Maharaj. Every year during chitra poranima day, we fly to Melmaruvathur, through Gahana marga and perform patha pooja to Guru Maharaj Bangaru. Likewise every year during Durga pooja(Navarathri) festival, we to Melmaruvathur and pour oil Aganda Deepa and workship Our travel is invisible. During Mahara Poosya Jothi(Thaiposa Jothi) Day we workship theThaiposa Jothi lit by Guru Maharaj.

Oh! Men!

Whatever you want will get it Melmaruvathur. Don’t wander hither and thither. Surrender to Bangaru Maharaj.

(ஆங்கில மொழியின் தமிழாக்கம்

”ஓ! செவ்வாடைகளே ! இங்கே வாருங்கள்!” என்றார்.

நாங்கள் அவர் அருகில் சென்றோம்.

“சுவாமிஜி !வணக்கம்! நாங்கள் தமிழ் நாட்டிலிருந்து வருகிறோம். நாங்கள் மேல்மருவத்தூர் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் சீடர்கள்” என்றோம்.

உடனே அவர் ஆகாயத்திலிருந்து 3 ரொட்டிகளை(சப்பாத்தி)
வரவழைத்து எங்களைச் சாப்பிடும்படி ஆனையிட்டார். நாங்கள் ரொட்டியைச் சாப்பிட்டவுடன் அவர் தொடர்ந்தார்.

ஓ! மனிதர்களே !

சிவப்பு என்பது ஒற்றுமை மற்றும் பிரபஞ்ச சகோதரத்துவத்தின் அடையாளம். நான் பங்காரு மகாராஜைப் பற்றியும், மேல்மருவத்தூர் பற்றியும் உங்களை விட நன்றாக அறிவேன்.

என்னுடைய சொற்களைக் கேளுங்கள் !

(உடனே பேராசிரியர் இராமச்சந்திரன் தனது டையில் சுவாமிகள் சொல்வதைச் சுருக்கெழுத்தில் எழுத ஆரம்பித்தார்.)

பங்காரு மகராஜ் மனித குலத்தை ரட்சிப்பவர். அவர் கருனை உடையவர். அவர் ஆதிசக்தி, அன்னை ஆதிபராசக்தியின் அம்சம். நான் அவருடைய தெய்வீக அருள்வாக்கை விரும்புகிறேன். மேல்மருவத்தூர், ஆன்மிகப் பண்பாடு மற்றும் சமுதாயத் தொண்டிற்கான மையம் ஆகும். பங்காரு மகராஜ் அதிகாரம், தவறான வழியில் வந்த செல்வம், சிற்றின்பம் ஆகியவற்றுடன் கூடிய சக்கர சுவட்டிலிருந்து,தூய்மை, எளிமை மற்றும் தெய்வீகம் என்று வாழ்விற்கு மாற்றியமைக்கிறார். அவர் தீண்டாமை, நெருங்காமை,நிழல்படாமை ஆகியவற்றை விரும்புவதில்லை. தொண்டு என்பதே அவரது தத்துவத்தின் கிரீடம் ஆகும். அவர் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் நசுக்கப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டிற்காகப் பாடுபடுகின்றார். அவர் செய்து வரும் யாகங்கள் இயற்கை அன்னை மற்றும் இப்பிரபஞ்சத்தை தூய்மைபடுத்துகின்றன.

அவரால் பஞ்ச பூதங்களை கட்டுப்படுத்த முடியும். அவர், தியானத்தின் மூலம் தன்னையறிதலை வலியுறுத்துகிறார். தொண்டு என்பதே வீடுபேற்றிற்குரிய சாவியாகும். பங்காரு மகராஜ் ஒர் இல்லறத்தார். ஆனால் அவர் இமாசல பகுதியிலுள்ள சாதுக்கள், யோகிகள், சந்நியாசிகள் மற்றும் நவநாத சித்தர்களுக்குத் தலைவராக உள்ளார். பங்காரு மகராஜ் என்னை ஒற்றை காலில் (ஏகபாத ஆசனம்) நின்று தவம் செய்ய சொன்னார். கோரக்நாத் சித்தர் பங்காரு மகராஜின் தலைமைச் சீடராவார். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பொளர்ணமி முழு நிலவு நாளில் நாங்கள் ககன (ஆகாய) மார்ககமாக மேல்மருவத்தூருக்கு வந்தது குரு மகராஜ் பங்காருஅடிகளார் அவர்களுக்கு பாத பூஜை செய்கிறோம். அதைப்போல ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை விழாக்காலங்களில் (நவராத்திரி) நாங்கள் மேல்மருவத்தூர் சென்று அகண்ட தீபத்தில் எண்ணெய் ஊற்றி வழிபாடு செய்கிறோம். எங்கள் பயணம் யார் கண்களுக்கும் தெரியாது. தைப்பூச நாளில் ,குருமகராஜால் ஏற்றப்படும் தைப்பூச ஜோதியை நாங்கள் தரிசிக்கிறோம்.

ஓ! மனிதர்களே எதை நீங்கள் விரும்புகின்றீர்களோ,அதை மேல்மருவத்தூரில் பெறுவீர்கள். இங்கு அங்கு அலையாதீர்கள் . பங்காரு மகராஜை சரண் அடையுங்கள்)

அந்த சாது கண்களை மூடிக் கொண்டார். போய் வாருங்கள்! என்றார். நாங்கள் கீழே விழுந்து அவரை வணங்கினோம். மன அமைதியுடன் திரும்பினோம்.

ஓம்சக்தி !

பக்கம்: 11-15.
பேராசிரியர், முனைவர் ஆர். கண்ணன். M.A., Ph.D., திருபுவனம்.
ஏப்ரல்-2019.