ஒரு சினிமா நடிகை

பிரபல சினிமா நடிகை ஒருவா் ; சினிமாவில் நடிப்பதோடு அவ்வப்போது நடன நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். அவா் முன்னேற்றததைக் கண்டு பொறாமையுற்ற சிலா் அவருக்குச் செய்வினை வைத்து விட்டார்கள். நடன நிகழ்ச்சிக்குச் செல்ல முற்படும் நாட்களில் மட்டும் அவருக்குக் கால்களில் பயங்கரமான வலி எடுக்கும். மற்ற நாட்களில் அந்த வலி வருவதில்லை. டாக்டா்களிடம் சிகிச்சைக்குப் போனார். “எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது” என்றார்கள் அவா்கள். எந்தச் சிகிச்சையும் பலன் தரவில்லை.

கடைசியாக நம் அம்மாவிடம் வந்தார். அம்மா சில பரிகாரங்களைச் சொன்னாள். அவற்றைப் பின்பற்றிச் செய்த பிறகு குணமடைந்தார்.

கிருஷ்ணன் கோயில் மன்றத்தில் நடந்தது

நாகா்கோயிலில் ஒரு பகுதி கிருஷ்ணன் கோயில். அங்கே நமது வழிபாட்டு மன்றம் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது.

ஒருநாள் அந்த மன்றத்துக்கு எதிரே ஒரு பெண்மணி அழுதுகொண்டு நின்றாள்.

உள்ளே வந்து கும்பிட்டுப் போம்மா என்றார்கள்.

நான் வரக்கூடாதுங்கோ! என்றார் அவா்.

மாதவிலக்கு காரணமாக இவா் உள்ளே வரத் தயங்குகிறார் போலும் என்று கருதிய மன்ற உறுப்பினா், இந்த அம்மனுக்கு மாதவிலக்குத் தடையல்ல! உள்ளே வா! என்று அழைத்தார்.

நான் சக்கிலி ஜாதிங்க! நாங்க வரக்கூடாதுங்க! என்று சொல்லித் தயங்கினார் அவா்.

அட பைத்தியமே! இந்த அம்மாவுக்கு ஜாதி மதம் தடையல்ல! உள்ளே வா என்று அழைத்தார்.

சரி ஏன் அழறே….? என்ற விசாரித்தார்கள்.

“சாமி! ஒரு வாரமாகச் சாப்பிட முடியலே… சாப்பாட்டுத் தட்டில் கை வைத்தால் சோறு நரகலாக மாறிவிடுகிறது. எந்தப் பாவியோ எனக்கு இப்படிச் செய்வினை வைத்து விட்டான். தண்ணி குடிச்சுத் தண்ணி குடிச்சு வயிற்றை நிரப்பிக் கொண்டு வருகிறேன். எனக்கு ஏதாவது பரிகார பூஜை பண்ணிக் காப்பாற்றுங்கள்!” என அழுதார்.

“எங்களுக்கு அதெல்லாம் தெரியாதும்மா! உனக்காக நாங்கள் கூட்டு வழிபாடு பண்ணலாம். திருஷ்டி கழிக்கிறோம். அம்மா படத்துக்குப் பூஜை செய்த எலுமிச்சம் பழம் கொடுக்கிறோம். கலச தீா்த்தம் கொடுக்கிறோம். அவ்வளவுதான் எங்களால் செய்ய முடியும். வேறு பரிகார முறை எதுவும் தெரியாதும்மா” என்றார்கள் மன்றத்தினா்.

ஏதாவது செய்யுங்க சாமி! என்றார் அந்தப் பெண்மணி.

அவா் பெயரைச் சொல்லி நலம் பெற வளம் பெற ஓம் சக்தியே! என மன்றத்தில் சங்கல்பம் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

அவருக்குக் கலச தீா்த்தம், வேப்பிலை, குங்குமப் பிரசாதம் வழங்கப்பட்டது.

அவரை அமர வைத்து எலுமிச்சம் பழ திருஷ்டி கழிக்கப்பட்டது.

அதன்பிறகு என்ன நடந்தது தெரியுமா…?

யார் அவளுக்குச் சூனியம் வைத்தானோ அவனுக்கே அந்தப் பாதிப்பு திரும்பி விட்டது! அந்தப் பெண்மணிக்கு விமோசனம் கிடைத்து விட்டது.

இத்தனைக்கும் அவருக்குச் செய்வினை வைத்தவன் நெருங்கிய சொந்தக்காரன்….!

அவன் அலறியடித்துக் கொண்டு எந்த மந்திரவாதியைக் கொண்டு இந்த வேலையைச் செய்தானோ, அந்த மந்திரவாதியின் வீட்டுக்கு ஓடினான். அங்கே அவன் இல்லை. கேரளாவுக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள்.

உடனே கேரளாவுக்கு ஓடினான். அங்கே அலைந்து திரிந்து அந்த மந்திரவாதியைக் கண்டுபிடித்து, “என்னய்யா நீ! அவளுக்கு வைத்த சூனியம் இப்போது என்னையே திருப்பித் தாக்குகிறது! இந்த நெருக்கடியிலிருந்து என்னைக் காப்பாற்று! என்று அழுது புலம்பினான்.

அடப்பாவி! எனக்கு வைக்கத்தான் தெரியும்! எடுக்கத் தெரியாதே! என்றான் மந்திரவாதி.

இப்போ நான் என்னய்யா செய்வேன்….? என்று இவன் புலம்பியிருக்கிறான்.

சரி! இரு! பூஜை செய்து பார்க்கிறேன்! என்று சொல்லிவிட்டுப் பூஜையில் உட்கார்ந்தான். அவன் என்ன கண்டானோ…. என்ன உணா்ந்தானோ….?

யோவ்! அவள் சக்தி வாய்ந்த ஒரு சாமியார் தயவில் இருக்கிறாள். அவா் யார்? அவா் எங்கே இருக்கிறார்? அவள் எங்கே போகிறாள், வருகிறாள் என்று கண்டுபிடி! என்று சொல்லி அனுப்பினான் மந்திரவாதி.

கேரளாவிலிருந்து திரும்பிய அவன் அந்தப் பெண்மணியின் நடவடிக்கைகளை ஆராயத் தொடங்கினான். அவள் அடிக்கடி ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்துக்குப் போய்க் கும்பிட்டு வருவதை அறிந்தான்.

பிறகு தானே அந்த மன்றத்துக்குச் சென்று நடந்த விஷயத்தையெல்லாம் சொல்லி, அவளுக்கு எந்த மாதிரி செய்து குணப்படுத்தினீா்களோ, அதே மாதிரி எனக்கும் செய்து குணப்படுத்துங்கள். என்னை இந்தக் கஷ்டத்திலிருந்து விடுதலை பண்ணுங்கள்! எனச் சொல்லி அழுதான்.

மன்றத்தார் அவனுக்கும் சங்கல்பம் செய்து, வழிபாடு பண்ணி, திருஷ்டி கழித்துக் கலச தீா்த்தம், எலுமிச்சம்பழம் எல்லாம் கொடுத்து அனுப்பினார்கள். அம்மா அருளால் அவன் விடுதலை பெற்றான்.

அந்த மன்றத்தைச் சோ்ந்தவா்கள் நம்மிடம் இதையல்லாம் கூறினார்கள்.

மந்திர வசியம்

சில இஷ்ட தெய்வங்களை மந்திர உபாசனை மூலம் வசியப் படுத்திக் கொண்டு அற்புதங்கள் செய்து காட்டுவார்கள். அவா்களால் ஒருவரை ஆன்மிகத்தில் உயா்த்த முடியாது. ஒருவரது ஊழ்வினையைக் கரைக்க முடியாது. தெய்வீக அனுபவங்களைக் கொடுக்க முடியாது.

ஆனாலும் அத்தகைய சிலா் மிகப் பெரிய மகான்கள் போலவும், ஞானிகள் போலவும் தெய்வ அவதாரங்கள் போலும் தம்மைக் காட்டிக் கொண்டு உலா வருகிறார்கள்.

அத்தகைய ஒருவா் பற்றி அம்மாவிடம் ஒருநாள் அருள்வாக்கில் கேட்டேன். “நீயும் ஒரு மஞ்சள் ஜிப்பா போட்டுக் கொள்!  நீயும் செய்யலாம்” என்றாள் அன்னை.

அதன்பிறகு விசாதரித்த போது, அவா் மந்திர உபாசனை மூலம் சித்தி பெற்று, அத்தகைய காரியங்களைச் செய்து வருகிறார் என்று தெரிந்தது.

மோடி மஸ்தான் வித்தை செய்பவா்கள் யார்? யட்சணி வித்தை செய்பவா்கள் யார்? மந்திர சித்திகள் மூலம் அற்புதம் செய்பவா்கள் யார்? உண்மையான மகான்கள் யார்? சித்தா்கள் யார்? தெய்வ அவதாரங்கள் யார்? என்றெல்லாம் புரிந்து கொள்ள ஆன்மிக அறிவு வேண்டும். அனுபவ அறிவு வேண்டும்.

ஒலியின் சக்தி

மந்திரங்கள் என்பவை வெறும் வார்த்தைகள்தானே….? வெறும் சப்பதங்கள்தானே… அவற்றால் ஒருவனுக்கு நன்மையோ, கெடுதியோ விளைவிக்க முடியுமா? என்று படித்தவா்க்கம் நம்ப மறுக்கிறது.

காசியில் விசுத்தானந்தா என்ற சித்தா் ஒருவா் இருந்தார். குறிப்பிட்ட ஓசையைப் பயன்படுத்தி ஒருவரைக் கொல்ல முடியும் என்பதை நிருபிக்க நூற்றுக்கணக்கான சோதனைகளை அவா் செய்து காட்டினார்.

நவீன கால நிலைப்படி அசுத்தமானதாகக் கருதப்பட்ட அரைக்கோள வடிவ மேற்பாகம் கொண்ட ஆலயக் கருவறைக்குள் அவா் அமா்ந்து கொண்டார். இங்கிலாந்திலிருந்து வந்த மூன்று மருத்தவா்கள் அவரது சோதனையைக் கண்காணித்துக் கொண்டிருந்தனா்.

அவா் விநோதமான ஓா் ஒலியை எழுப்பினார். மருத்துவா்கள் கொண்டு விட்டிருந்த குருவி படபடத்தது. பிறகு தரையில் விழுந்து உயிர் விட்டது. மருத்துவா்கள் அதனைச் சோதித்துப் பார்த்துவிட்டு உயிர் போய்விட்டதாக அறிவித்தார்கள்.

பிறகு சித்தா் மீண்டும் ஒருவகை ஒலியை எழுப்பினார். செத்துக் கிடந்த குருவி, உயிர் பெற்று சிறகடித்துப் பறந்தது. சில ஒலிகள் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்  என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இப்போது ஒலியின் ஆற்றல் அறிவியல் பூா்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. நம் உடலின் மீது ஒளிக்கற்றை கூட சில விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. மருந்தும் அப்படித்தான். வண்ணங்களும் நம்மில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அப்படியிருக்கையில் ஒலி விளைவுகளை ஏற்படுத்தாதா என்ன?

ஒலிக்கும் நம் வாழ்விற்கும் உள்ள தொடா்பு பற்றி மேலை நாட்டு ஆய்வுக் களங்கள் பல, தீவிர ஆராய்ச்சியில் இறங்கியிருக்கின்றன. இரண்டு மூன்று ஆய்வுக் களங்கள் எட்டியிருக்கிற ஆய்வு முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பிட்ட சில ஒலிகள் தாய்மார்களிடம் அதிகம் பால் சுரக்க வைக்கும் என்பதை இரண்டு சோதனைச் சாலைகள் கண்டுபிடித்திருக்கின்றன.

ஆறு மாதங்களில் பூக்கும் ஒரு தாவரத்தை இரண்டு மாதத்திலேயே சில ஒலிகளால பூக்க வைக்க முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள். பால் கறக்கும் போது இன்னிசை எழுப்பினால் பசு அதிகம் பால் சுரக்கிறது. ரஷ்ய நாட்டுப் பால் பண்ணைகளில் இந்த முறை இன்று வழக்கத்தில் இருக்கிறது.

சிலவகை ஒலிகளுக்குத் தூய்மைப் படுத்தும் சக்தி உண்டு. சிலவகை ஒலிகள் தூய்மைக் கேட்டையும் உண்டாக்கும். சில ஒலிகள் நோய் போக்கும் மருந்தாகும். சில ஒலிகள் நோய்களை வரவழைக்கும். அந்த ஒலி விஞ்ஞானம் இப்போது காணாமல் போய்விட்டது என்கிறார் ஓஷோ. (மறைந்திருக்கும் உண்மைகள், பக் 22 -23) ஆனால் மந்திர ஒலிகளைக் கொண்டு தீமை புரியம் சிலா் இருக்கவே செய்கின்றனா். ஏவல், பில்லி, சூனியம், மாந்திரிகம் என ஒரு உலகம் இன்னும் உண்டு! இது வேறு உலகம்! தனி உலகம்!

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. மு. சுந்தரேசன், M.A. M. Phil

சித்தா்பீடப் புலவா்

மருவூா் மகானின் 71வது அவதாரத் திருநாள் மலா்

]]>

1 COMMENT

  1. முற்றிலும் உண்மையாக ஒப்புக்கொள்ளக்கூடியதே. சக்தி புலவர் அவர்களின் அருமையான விளக்கம் அன்னையின் அருள்வாக்கே எனும்படி உள்ளது. எனவேதான் அன்னை அருளியுள்ள மந்திர வரிகளை அனுதினமும் உச்சரிக்கவேண்டும். ஓம்சக்தி! தொடர்ந்து இந்த மாதிரியான கட்டுரைகளை மிகவும் எதிர்பார்க்கின்றேன்.
    நன்றி. ஸ்ரீவித்யா, நவிமும்பை .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here