மருவூரார்!

உன்னருகில் 
வந்ததுதான் தெரியும்! 
உணர்வலைகள் 
என்ன ஆச்சு. மயக்கம்! 
உன்..
விழியை கவனித்தேனா?
மொழியை கவனித்தேனா?
உதடசைவை 
கவனித்தேனா?
அங்கு நடப்பதை
நினைத்தானா?

புரியாத உலகுக்கு 
போய் வந்தேன்!
புரிந்தாலும் கூறமுடியா
ஊமையாய் நின்றேன்!

சுற்றி உள்ளவர் கூறுவது
உரைக்கவில்லை!
சுயநினைவு இல்லையே..
குருநாதா. .
என்ன சொன்னாய்
நினைவில்லை!
பற்றிய பாதத்தில் 
மலரிட்டேன்!
பரலோக சுகமதில்
மிதந்திட்டேன்!
சொல்கிறேனா..
உளறுகிறேனா..
புரியவில்லை. .
சொல்லவந்த 
வார்த்தைகளும்..
வரவுமில்லை!

மறுபடியும் மறுபடியும் 
உனது மொழி…
ஒலிக்குது ஒலிக்கிது..
செவியின் வழி!

கருவறையா..
அருட்கூடமா..
புரியவில்லை!
கணநேரம் மறந்தநிலை
அறியவில்லை!

உன்னருகில் வந்ததுதான் 
தெரியும்!

சபா..ஸ்ரீமுஷ்ணம்