ுறும் அன்பர் தமைக்காக்கும் ஆதிபரா சக்தியின்தாள் இன்பமுற. வாழ்த்தி உய்வோம் யாம் !

சித்தர்பலர் வாழும் சிறந்தநல்ல மேல்மருவூர்ப் பத்தர்கள், ஆதிபரா சக்தி அம்மை —- மெய்த்திறனைக் கண்ணாரக் கண்டு, கலிகளெலாம் தீர்கின்றார் ! விண்ணோரும் நிற்பர் வியந்து ! கன்னிக் குமரியாய், காமாட்சி, மீனாட்சி, அன்னைஉயர் காசிவிசால. லாட்சியாய், — — — இன்னும்பல்பேர் அம்பிகையாய், மேல்மருவூர் ஆதி பராசக்தி, இம்பர்உறை கின்றாள் இனிது ! அன்னைபரா சக்தி அருள்வெள்ளம், மேல்மருவூர் தன்னிற் பெருகிமிகத் தங்கியுளது ; — — என்னோ, நீர் ஆங்கத்தில்வந்து ஆடிப் பருகித் திளையாமல், ஏங்கிமிக. நிற்கின்றீர் இங்கு ! நன்றி நா. ரா. முருகவேள் ஐந்தாவது ஆன்மிக. மாநாடு மலர்
]]>