‘பச்சை பயிரெல்லாம் வெந்து மடியுது. ஏந்தான் இப்பிடி வெயில் கொள்ளுத்துதோ? பூமியே வெடிச்சுரும் போலருக்கு’ என்று கிராமத்து பெரிசுகள் புலம்புவதைக் கேட்கிறோம்.  இளநீர், தர்ப்பூசணி, வெள்ளரி, நூங்கு, சர்பத், கூல்டிரிங்ஸ்; ஜஸ்கிரீம், கடைகளில் முண்டியடிக்கும் கூட்டம் கைக்குட்டையில் இருந்து



       பிழிந்து ஊற்றும் வியர்வையை வைத்தே, ஓராண்டு குடிநீர் தேவையைத் தீர்க்கலாம் போலிருக்கிறது. உள்ளே போகும் மூச்சுக்காற்று நெருப்பாகவே வெயியே வருகிறது. அக்னிதேவனின் கோபததுக்கு யார் காராணம்? பிரம்மாவோ, சிவனோ இல்லை; நீங்களும், நானும்.. தான். இயற்கையை சிதைக்காமல் இணைந்து வாழ்ந்த தாக்களை பரிகசித்துவிட்டு பைக்கை கண்மூடித்தனமாக ஒட்டி, ஸ்டைல் காட்டி, பாதசாரிகளை  கலவரப்படுத்தும் ஒவ்வொருவருமே அக்னியின் கோபத்துக்கு காரணம்.  உலகத்தையே கதிகலங்க வைத்திருக்கும் இந்த பிரச்சனைக்கு “குளோபல் வார்மிங்” (Gobel warming) என்று நாமகரணம். சு10ட்டயிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

புவி வெப்பநிலை அதிகரிப்பு என்று பொருள்படும் இது.  காலபோக்கில் புவியின் காற்று மண்டலம் மற்றும் கடல்களின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும் நிகழ்வைக் குறிக்கும் சொல்.  காற்று மாசுதான் இதன் அடிப்படை.  இதனால் “பசுமை இல்ல விளைவு” என்று சொல்லப்படுகிற வாயுக்களின் ஆட்டம் அதிகரிக்கிறது.  தொடர்ந்து வறுகடலை போல பூமி வறுக்கப்படுகிறது.

பெரும்பாலும் மனிதர்களின் செயல் பாடுகளினால் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து இப்போது வரை சராசரி வெப்பநிலை 0.6 சென்டிகிரேடு அளவு வரை அதிகரித்து இருக்கிறதாம்.  கடந்த 5 ஆண்டுகளில்.. குறிப்பாக 6 மாதங்களாக பூமியில்  தாங்கும் வெப்ப அளவு கலவரப்படுத்தும் வகையில் அதிகமாகி வருகிறது.

சுனாமி பேரலை கலைத்துப் போட்ட லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கையை மீட்பதற்கான போராட்டங்கள் இன்றுவரை ஓய்ந்த பாடில்லை.  அந்த நிசைவுகள் மறைவதற்கு முன்பாக, சுனாமியைக் காட்டிலும் அதிதீவிர பேரழிவுகளால் உலக நாடுகள் நிலைகுலையப் போகின்றன என்று விஞ்ஞானிகள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார்கள்.  அதற்காக விஞ்ஞானிகள் குறித்திருக்கம் கால அளவு 50 ஆண்டுகளுக்கும் குறைவு.  குச்சிமிட்டாய் கணக்காக வாகணங்கள் மீது இளைய தலைமுறை காட்டும் மோகம்தான்  இந்தப் பேரழிவுக்கான விதை.  வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கரியமில புகை காரணமாக பூமியைச் சுற்றி கண்ணாடி கொன்ற சுவர் எழுந்திருகிறது.  

இதனால், காற்று மண்டலத்தில் கலக்க முடியாமல் பூமியிலேயே தங்கி விடுகிறது ஏராளமான வெப்பம்.  தொழிற்சாலைகளின் பெருக்கம் காரணமாக 20-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே கரியமில வாயு (CO2)வின் அளவு 30 சாவிதம் அதிகரித்து விட்டது.  மீத்தேனின் அளவு இருமடங்கா கிவிட்டது.  குளோரோஃப்ளுரோ கார்பன், நைட்ரஸ்  ஆக்சைடு ஆகியவற்றின் அளவும் எகிறிக்  கொண்டிருக்கிறது.  இவை எல்லாம் “பசுமை இல்ல வாயுக்கள்” என்ற அழைக்கப் படுகின்றன.

நன்றி குங்குமம் (31.05.2007)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here