மன்றமும் ஒரு குடும்பம்தான்! ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் புரிந்து கொள்ளும் தன்மையும் இருந்தால்தான் அந்தக் குடும்பமும் கோவிலாகும்.”*

*நீ வெறும் கருவிதான்*
———————————

*நீ வெறும் கருவிதான். கருவியென்றால் ஆதாரம். நீ ஆன்மீகத்தின் கருவியாக இருந்து செயல்பட வேண்டுமே தவிர கரியாகிவிடக் கூடாது.*

*கருவிக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?.*

*கருவியின் கடைசி எழுத்தை நீக்கினால் கரு. இடையில் உள்ள எழுத்தை நீக்கினால் கவி.*

ஒரு கவி கவிதை எழுதத் தேவைப்படுகிறது மூலக்கரு. கவிக்கு எப்படி கரு முக்கியமோ அதைப்போல நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கும் நம் அம்மாதான் நமக்கு மூலக்கரு என்ற எண்ணம் உனக்கு வரவேண்டும்.

நம்மைக் கருவியாக வைத்து அம்மாதான் கவி எழுதுகிறாள் என்ற எண்ணம் உனக்கு வரவேண்டும்.

ஆக, *நாம் ஒரு கருவியாகத்தான் இருக்க வேண்டுமே தவிர எரிந்து சாம்பல் ஆகி விடுகிற கரியாகி மாறக்கூடாது…*

–அன்னையின் அருள்வாக்கு.

சக்தி ஒளி அக்டோபர் -18.

குருவடி சரணம்.
திருவடி சரணம்.

]]>