மேல்மருவத்தூரில் “இயற்கை வைத்தியம் உண்டு; செயற்கை வைத்தியம் உண்டடா மகனே! நான் மேற்கொள்வதோ ஆன்மீக வைத்தியமடா மகனே!” என்பது பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருள்வாக்கு.

“மகனே! முடிந்தவரை உன் விதிப்படியே விட்டுவிடுகிறேன். ஆனால் எந்தக் காரணமும் கேட்காமலே என்னையே சரணடைந்து நான் சொல்வதைக் கேட்டு நாடக்கும் தொண்டர்களின் விதியை மாற்றியமைக்கும் வல்லமையை மேற்கொள்கிறேன் மகனே!” என்பதும்
பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருள்வாக்கு.

என்னுடைய மண்ணை மிதிக்கும் ஒவ்வொரு மனிதனின் “தலையிலிருந்து பாதம் அவரை மறைமுகமான சிகிச்சைகளை என் மருவூர் மண்ணிலே மேற்கொள்கிறேன் மகனே! என்பதும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருள்வாக்கு.

மேற்கண்ட அனைத்து அருள்வாக்குகளின்
“செயல் பாடுகளை” அனைத்து செவ்வாடைத் தொண்டர்களின் வாழ்க்கையிலேயும் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் தினந்தோறும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

“எனது தாயாரின் தங்கை சக்தி கல்யாணி என்பவர் “பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் தீவிரமான தொண்டர். அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய ஓர் அற்புதத்தை
பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் செய்து “செவ்வாடையின் மகத்துவத்தையும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் கருணையையும் எங்கள் “வாளாடி கிராமத்திற்கே
” உணர வைத்தார்கள்.

எங்கள் கிராமம் உணர்ந்ததை இந்த உலகில் உள்ள அனைவரும் உணரவேண்டும் என்கிற வேண்டுதலில் இந்தக் கட்டுரையை சக்தி ஒளிக்குச் சமர்ப்பிக்கிறேன்.

எங்கள் சித்தி பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் ஆணையின் படி “மாதம் ஒருமுறை மருவூர் மண்ணைக் குடும்பத்தோடு மிதித்து வருவார்கள்.

பிதுர் சாபங்கள் மற்றும் அனைத்து சாபங்களையும் அழிக்கக் கூடிய அமாவாசையன்று மருவூர் வருவார்கள். 2009 ஆம் ஆண்டு புரட்டாசி அமாவாசையன்று வழக்கம் போல குடும்பத்தோடு மருவூர் வந்தார்கள். அவர்களது உடல் எப்பொழுதும் போல இல்லாமல் உடம்பு சற்று படுத்தும்; அடிக்கடி வாந்தி வருவதும்; சிறுநீர் கழிக்க முடியாமலும் அவதியுற்றார்கள். அமாவாசை வேள்வியில் “சமித்துக் குச்சியும் நவதானியமும் போட்டுவிட்டு அன்று இரவு மருவூரின் மண்ணிலே தங்கினோம்.

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் மூச்சுக்காற்று நிறைந்த அந்த பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் சாம்ராஜ்யத்தில் உறங்கினோம். மறுநாள் காலை “நவராத்திரி அபிஷேகம், அலங்காரம், அன்னதானம் என்று மருவூர் மண் ஜொலித்தது. அன்று காலை 10 மணியளவில் எனது சித்தியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

உடனே நாங்கள் மருவூரிலே இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தோம். எனது சித்திக்கு 3 வயதிலே பெண்குழந்தை இருக்கிறது.

மருத்துவமனையில் SCAN செய்து பார்த்துவிட்டு “இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து இயங்கவில்லை. உடனே நீங்கள் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று உடனே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து இன்னும் 3 மணி நேரத்தில் உங்கள் ஊருக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றனர்.

எங்களால் ஒன்றும் செய்யமுடியாமல் அப்படியே திகைத்து நின்றோம். அப்பொழுது உடம்பு முடியாமல் கிடந்த எங்கள் சித்தி பேசத் தொடங்கினார்கள். “மருவத்தூர் மண்ணை விட உயர்ந்த மருத்துவமனை உலகில் உண்டா; மருத்துவ உலகமே கைவிட்ட எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றிக் கொடுத்துள்ள பரம்பொருள் பங்காரு அம்மா அவரர்களை விட, “உயர்ந்த மருத்துவர் உண்டோ”?

என்னைக் காப்பாற்ற. உலகைப் படைத்து, காப்பாற்றுகிற என் அம்மா பங்காரு அம்மா இருக்கிறார்கள்! நான் இந்த மண்ணை விட்டு வரமாட்டேன்” என்று உறுதியாக கூறிவிட்டார்கள்.

நாங்களும் அதனை ஏற்றுக் கொண்டு மருவூரிலே தங்கினோம்; தொடர்ந்து 3 நாட்கள் தங்கினோம். 3 மணி நேரத்தில் உயிரோடு ஊருக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றது மருத்துவ உலகம். ஆனால் 3 நாட்களிலே பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் ஆன்மீக வைத்தியத்தில் பூரண நலம் பெற்றார்கள்.

எங்கள் சித்தி எவ்வாறென்றால் நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒன்பது கோள்களின் எந்தக் கேட்ட வீரியமும் மனிதர்களைத் தாக்காமல் இருப்பதற்காகக் கருவறையில் அமர்ந்து தினம் ஒரு அலங்காரம், தினம் ஒரு காப்பு” என்றும்; ஒன்பது நாட்களும் மௌனம் காத்தும் அருட்கூடத்திலே அமர்ந்தும் “காத்துக் கொண்டுள்ள நமது தாயான பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் நவராத்திரி அபிடேக தீர்த்தமும் காப்புப் பிரசாதமும், அன்னதான பிரசாதமும் அடங்கிய கைப்பையினை ஏதேனும் வெளிநாட்டினைச் சார்ந்த பக்தர்கள் கொண்டு வருவார்கள்.

அவர்கள் நவராத்திரி நாட்கள் முழுவதும் மருவூரிலே தங்கியும் ஒருசிலர் இருப்பார்கள். 10 நாட்கள் கழித்துப் பிரசாதத்தைத் தங்கள் நாட்டுக்குள் கொண்டு போக முடியாமல் சக்கரைப்பொங்கல், சுண்டல், பஞ்சாமிர்தம் இவை வீணாகிவிடும் என்பதால் அதனை யாருக்காவது கொடுப்பார்கள்.

அவ்வாறு கிடைத்த நவராத்திரி அபிடேக சுண்டலும், சக்கரைப் பொங்கலும், பஞ்சாமிர்தமும் எங்களின் சித்திக்கு அம்மா கொடுத்த மருந்தாக கிடைத்தது. 3 நாட்களில் நன்றாகச் சிறுநீர் கழித்து, உடல் ழுவதும் வற்றியது. வாந்தியும் நின்றது! பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் மேற்கொண்ட ஆன்மீக வைத்தியத்தினால் பூரண குணமடைந்தார்கள்.

நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் கருணையை நினைத்து எங்களது ஆனந்தக் கண்ணீரை பரம்பொருள் பங்காரு தெய்வத்திற்கு சமர்ப்பித்தோம்.

ஒரு நான்கு நாட்கள் கழித்து எங்களது திருச்சியில் மிகவும் பிரபலமான “விஸ்வநாதன் மருத்துவமனை சிங்காரத்தோப்பு – திருச்சியில் சென்று காண்பித்தோம்.

மருத்துவரிடம் “ஐயா ஒரு வாரத்துக்கு முன்பு எங்கள் சித்தியின் உடலில் இவ்வாறெல்லாம் பிரச்சனை இருந்தது என்று கூறி மருவத்தூரில் எடுத்த SCAN REPORT ஐ காண்பித்தோம்.

மருத்துவரிடம் இன்று ஒரு SCAN எடுங்கள் என்று கூறினார்.” அவ்வாறு எடுத்த பொழுது இரண்டு SCAN REPORT டையும் ஒப்பிட்டுப் பார்த்து அசந்தே போனார்.

ஒரு வாரத்திற்கு முன்பு “பழுதடைந்த சிறுநீரகம் இயங்காமல் போன இரண்டு சிறுநீரகங்களும் இயங்குகின்றனவே” என்று வியப்போடு கேட்டார். நாங்கள் நிகழ்ந்த அனைத்து விபரங்களையும் கூறினோம்.

பிறகு உடனே இரண்டு மருத்துவ SCAN REPORT களையும் “எடுத்துக் கொண்டு பரம்பொருள் அம்மா அவர்களிடம் வந்தோம். பாத பூஜையில் இரண்டு “SCAN REPORT களையும் வைத்திருந்தோம். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் எனது சித்தியைப் பார்த்து “நீ அம்மாவை முழுமையாக நம்புற! காலையிலும் மாலையிலும் வழிபாடு செய்யுற! மாதந்தோறும் அமாவாசைக்கு வர்ற! தொண்டு செய்யுற! “இதெல்லாம்தான் “உன்னைய காப்பாத்த எனக்கு வசதியா இருந்திச்சு” நீ வீட்டுக்குப் போ; அடுத்த வார சித்திரா பௌர்ணமியில் கலந்து கலசம் விளக்கு வாங்கி வழிபாடு செய்;

நீ இருக்கிற ஊரையும் காப்பாத்தறேன்.என்று கூறிவிட்டு, இங்கே பாரு உன்னை ஆஸ்பத்திரியில் போட்டோ ஸ்கேன் எடுத்தப்போ நீ ரொம்ப ரொம்ப கூசி “அம்மா தாயே என்று என்னைக் கூப்பிட பாரு! அதையும் அம்மா பாத்துக்கிட்டுதான் இருந்தேன்” என்று கூறினார்கள்.

எனது சித்தி அருள் கூடத்தை விட்டு விட்டு வெளியில் வந்து சொன்னார்கள். ஸ்கேன் எடுத்தப்போ ஸ்கேன் எடுத்த பையன் எனது இடுப்புல மருந்து தடவிய போது அம்மா, “நான் உன் பிள்ளை, எனக்கு மிகவும் கூசுகிறது என்று வருத்தத்தோடு கலங்கினேன். அதைத்தான் “எங்கும் நீக்கமற! அண்டத்திலும், பிண்டத்திலும் நிறைந்திருக்கும் அம்மா கூறினார்கள் என்றார்.
மருவூரிலே பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் நடத்தும் அனைத்து விழாக்களும் அறுவை அரங்கை (OPERATION ) சுத்தம் செய்வது போல உன்னைச் சுற்றியுள்ள, உன் ஆன்மாவைச் சுற்றியுள்ள
அனைத்து ஊழ்வினைகளையும், செய்வினைகளையும், ஆபத்துக்களையும், பிரச்சனைகளையும், அழுகைகளையும், நோய் நொடிகளையும், திருமணத் தடைகளையும், குழந்தைப்பேறு இல்லாமையும், தொழிலில் நஷ்டங்களையும், குடும்பக் கஷ்டங்களையும் சுத்தம் செய்வதற்காகவே! என்பதும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின்அருள்வாக்கு.

ஓம்சக்தி!

சக்தி சத்தியபாமா,
வாளாடி இலால்குடி, திருச்சி மாவட்டம்.
பக்கம் 24 – 28.
சக்தி ஒளி மார்ச் – 2021.