வான்வெளிப் பகுதியில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

0
2157

வான்வெளிப் பகுதியில் மிகச் சிறிய கிரகமான ப்ளூட்டோ உள்ளது. இந்த கிரகத்தை சுற்றி உள்ள வளையங்கள் குறித்து அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்இந்த சிறிய கிரகத்தை சுற்றி புதிய கிரகம் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். ஹப்ளே விண்வெளி நுண்ணோக்கியின் மூலம் இந்த புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு பி4 என்ற பெயரை நிபுணர்கள் தற்காலிகமாக சூட்டி உள்ளனர். இந்த சிறிய கோள் நான்காவது கண்டுபிடிப்பாகவும் மிகச்சிறிய வடிவம் கொண்டதாகவும் உள்ளது. இது ப்ளூட்டோவின் நான்காவது துணைக் கிரகம் ஆகும்.

இந்த புதிய கிரகம் 13 முதல் 34 கிலோ மீற்றர் அகலம் கொண்டதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் 1043 கிலோமீற்றர் குறுக்களவு கொண்டது.

ப்ளூட்டோவின் மிகப்பெரிய துணைக் கிரகமாக சாரோன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி லங்காசிறி

]]>