மருவூரார்!

0
1002

மனமது நினைவினில்..
சுகமதில் மலருது! 
தனிவழி உருள்வலம் 
வருகிற எழில்மது..
இனிமையில் லயிக்குது!
இருந்தாலும். .
இறையனே…இதுஇனி..
உனதுடல் அயர்வினை..
உணர்ந்திடில் ஒருபுறம்
அளவிலா அழுகையில்..
உளமது. .கதறுதே..!
படுகிற மனமினி..
பரம்பொருள் இறைவனே..
இதுஇனி நிறுத்திடு..
எனமனம் உருகுதே!
இதுநாள் வரையிலும்..
இடரறு துணையென..
இருந்தெமை 
அணைத்தனை..
இனியுனை..
பார்த்தால் போதும்..நீ
பார்த்தால் போதும்…!
எங்களுடன்..நீ.
இருந்தால் போதும்! 
உன்னுடன் நாங்கள்
இருந்தால் போதும் ..??
குருநாதா!

…சபா ஸ்ரீமுஷ்ணம். .