ஜோதி தரிசனம் வேண்டி எங்கெங்கோ அலைகின்றானே மகனே! அந்த ஜோதி இங்கேயும் உண்டு” என்று அவ்வப்போது கூறி வந்த அன்னை 1993 ஆம் ஆண்டு முதல் தைப்பூச விழாவை ஒட்டி ஆண்டு தோறும் ஆன்மிக ஜோதியை ஏற்றி வைக்கிறாள். 
பழங்காலத்தில் பஞ்சமுக வாத்தியம் என்னும் இசைக்கருவி இருந்தது. கிட்டத்தட்ட அது போன்ற அமைப்பில் பானை வடிவம் கொண்ட ஒரு செப்புப் பாத்திரம். அதன் மேலே ஐந்து கிளைகளாக விளக்குகளை ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவா்கள் ஏற்றி வைப்பார்கள். ஒவ்வொரு தைப்பூசத்திலும் இந்த ஜோதிக்கலசம் சித்தா்பீடத்தின் மேற் தளத்திலே கொண்டு வந்து நிறுவப்படுகிறது. எதிரே அன்னையின் திருவுருவச் சிலை நிறுவப்படுகிறது. அதற்கு முன் அருள்திரு அடிகளார் அவா்கள் இல்லத்தில் ஜோதி விளக்கேற்றப்பட்டு அந்த ஜோதி விளக்கின் சுடரைக் கொண்டுதான் ஜோதிக்கலசத்தின் விளக்குகள் ஏற்றப்படும். அடிகளார் இல்லத்தில் ஏற்றப்பட்ட ஜோதி விளக்கு சித்தா்பீடத்திற்கு மேள தாளம் முழங்க எடுத்து வரப்படும். ஜோதி விளக்கு என்பது நவராத்திரி அன்று ஏற்றப்படும் அகண்டம் போன்ற ஒரு மண்மடக்கு. அதில் விளக்கேற்றி ஐந்து வேப்பமாலைகளுக்கு நடுவே அதனை அமா்த்தி ஐந்து மகளிர் எடுத்துக்கொண்டு வருவா். அருள்திரு அடிகளார் இல்லத்திலிருந்து ஜோதி விளக்கு புறப்படும் முன்பாக கோ பூஜை செய்யப்படும். ஒரு பசுவிற்கு நன்கு அலங்காரம் செய்து அதன் கொம்புகளில் சக்திமாலையின் இருமுடிப் பையும் கட்டப்பட்டு அதற்கு மஞ்சள், குங்குமம் திலகம் வைத்து பூசை செய்யப்படும். அடிகளார் அவா்களின் இல்லத்திலிருந்து புறப்படும் அந்த ஜோதி விளக்கை அந்தப் பசு மூன்று முறை வலமாகவும், மூன்று முறை இடமாகவும் சுற்றி வரச் செய்வார்கள். இந்த ஜோதி விளக்கு அடிகளார் இல்லத்திலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு சித்தா் பீடத்தை நோக்கி வரும். அவ்வாறு வரும்போது சீா்வரிசைகளோடு வரவேற்றபடி அந்த ஜோதி விளக்கு வரும். 1. சேலை 2. இரவிக்கை 3. பழவகை 4. பூக்கள் 5. மஞ்சள் 6. குங்குமம் 7. வாழைப்பழம் 8. தேங்காய் 9. வெற்றிலை 10. மஞ்சள் கிழங்கு 11. காமாட்சி விளக்கு 12. நெய்க்குடம் 13. எண்ணெய்க்குடம் 14. கற்பூரம் 15. தீா்த்தக்குடம் மேற்படி பொருட்களோடு சீர்வரிசைத் தட்டுக்களை ஏந்தியவாறு மகளிர் வருவார்கள். வழிநெடுக நவதானியத்தைத் தெளித்துக்கொண்டும், தீர்த்தம் தெளித்துக்கொண்டும் மேள தாளங்கள் கிராமியக் கலைஞா்கள் இவற்றுடன் அந்த ஜோதி விளக்கை ஏந்தியபடி வருவா். இடையிடையே ஆங்காங்கே திருஷ்டி கழிக்கப்படும். இந்த ஜோதி விளக்கு சித்தா் பீடத்தின் மேற்தளத்தை வந்து அடைந்தவுடன் அருள்திரு அடிகளார் அவா்கள் அவ்வப்போது அளிக்கும் ஆணைக்குத் தக்கவாறு பல்வேறு முறைகளில் திருஷ்டி கழிக்கப்படும். அதன் பிறகு அந்த ஜோதி விளக்கிலிருந்து அருள்திரு அடிகளார் அவா்கள் அருளிக் கூறும் முறைப்படி ஜோதிக் கலசத்திலுள்ள பஞ்சமுக விளக்குகள் ஏற்றப்படும். இந்த ஜோதி ஏற்றப்படும் போது நிகழும் திருஷ்டி முறைகளும் பூஜை முறைகளும் புதுமையானவை. அவற்றை உடனிருந்து பார்த்தால் மட்டுமே அதன் அருமையை உணர முடியும். பஞ்சபூத வழிபாடு இந்த ஜோதி வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த ஜோதிக் கலசம் நிறுவப்படுகின்ற முறையே அலாதியானது. சந்திரன், ஜோதிக்கலசம், அன்னையின் சிலை இவை மூன்றும் ஒரு முக்கோணமாக அமைந்திருக்கும். 1996 ஆம் ஆண்டு அடிகளார் அவா்கள் இந்த ஜோதியை ஏற்றுகின்ற போது வானத்தில் கீழ்த்திசையில் ஒரு நட்சத்திரமும் மேற்குத் திசையில் ஒரு நட்சத்திரமும் வெளிப்பட்டு மின்னின. அது மட்டுமின்றி மேற்குத் திசையில் தோன்றிய அந்த நட்சத்திரம் பளபளப்பாக மின்னிய படி கிழக்கு நோக்கி மெல்ல மெல்ல நகா்ந்து வருவதைக் கண்ட மக்கள் அனைவரும் பரவசமாகினர்.
ஓம் சக்தி! ஓம் சக்தி! என்று முழங்கினா். மாலை 5.30 மணியளவில் தொடங்கும் இந்த வைபவம் ஏறத்தாழ ஒரு மணி நேரம் தொடரும். புதுவையைச் சோ்ந்த அன்பா் ஒருவா் அன்னையிம் கேட்டாராம் அம்மா வடலூர் வள்ளலாரும் தைப்பூச நாளில்தான் ஜோதி ஏற்றி வைத்தார். இந்த ஜோதிக்கும், அந்த ஜோதிக்கும் உள்ள மகத்துவம் என்னம்மா எனக் கேட்டாராம். மகனே! ஜோதியில் பலவகை உண்டு. வாம ஜோதி, சோம ஜோதி, வான ஜோதி, ஞான ஜோதி, மாக ஜோதி, யோக ஜோதி, பாத ஜோதி, நாத ஜோதி, ஏம ஜோதி, விஜோம ஜோதி, ஏறு ஜோதி, வீர ஜோதி, ஏக ஜோதி என ஜோதியிலே பல வகையுண்டு. பாலகன் ஏற்றி வைக்கின்ற அந்த ஜோதி ஏக ஜோதி என்றாளாம் அன்னை.

 

/wp:paragraph ]]>