பணத்தாசை தான் பிணத்தாசையாக மாறுகிறது. வயது, எண்ணம், பணம் என இவையனைத்தும் ஓர் அளவு வைத்துக் கொண்டு, இவ்வளவு தான் என்று ஓர் வரம்பு வைத்துக் கொண்டு வாழ வேண்டும். “

உனக்கு நீயே காப்பு ” உன்னை நீயே காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எழுத்து, பேச்சு, அனுபவம் எவற்றாலும் என்ன சொன்னாலும் எடுபடாது. ஐம்புலன்களை அடக்காமல் அலங்காரம், அபிடேகம், அர்ச்சனை இவற்றால் மட்டும் பெரிய பயன் எதுவும் இல்லை. உள்ளம் தருமத்திற்கு வழிகாட்ட வேண்டும். உள்ளத்தைக் கட்டுப் படுத்த வேண்டும். உழைப்பு உடலில் இருக்க வேண்டும். உடல் உறுப்பில் ஒன்று பழுது பட்டாலும் துன்பம் உண்டாகும். ”
]]>