ஓம் சக்தி

பொது அருள்வாக்கில் அம்மா அவர்கள் நமது ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் சக்தி. ஸ்ரீதேவி அவர்களிடம் மிகு‌ந்த ஆதங்கத்துடன்  *”எனக்குன்னு யார் இருக்கிறார்கள் மகளே!”* என்று கேட்டுள்ளார்கள். சக்திகளே, இது ஏன்? என்று நினைக்கிறீர்கள்? *அவரவருக்கு அவரவர் வேலைகளே முக்கியமாகக் கொண்டு*, பெயரளவில் ‘நான் அம்மாவின் தொண்டன்’ என்று சொல்லிக் கொண்டு, ஏதோ கிடைக்கும் நேரத்தில் சில தொண்டுகளில் ஈடுபட்டு வருகின்றோமே, அதுதான் காரணமா?
*அம்மாவின் புகழை பட்டிதொட்டி எங்கும் பரப்ப தினமும் என்ன முயற்சி எடுத்து வருகிறோம்* நாம்? அம்மா ஒரு பழைய பக்தரிடம் கேட்டார்களாம், *”முதல்ல வரும் போது உனக்கு கல்யாணம் ஆகணும்னு வேண்டி வந்த… இப்ப பேரனுக்கு கல்யாணம் ஆகனும் கேட்கிற?”*, என்றார்களாம். ஆகக்கூடி, ஆன்மிக வளர்ச்சி எங்கே? பெரும்பாலோர் (அடியேனும் சேர்த்து) இப்படித்தானே இருக்கிறோம். அதாவது, *குடும்பத்திற்காக வேண்டுவது, தொழில், வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என வேண்டுவது, குழந்தைகள் பிறந்தபின் அவர்களின் படிப்பு, வேலை, திருமணம் குறித்து வேண்டுவது, உடல் நோய் தீர வேண்டுவது அல்லது சண்டை சச்சரவு, கோர்ட் வழக்கு, சொத்து பிரச்சனைகள் தீர வேண்டுவது* எனச் சுத்தி இதைத் தாண்டி பெரும்பாலும் என்ன நினைக்கிறோம் சொல்லுங்கள்? ஆக, நமக்காக நம் நன்மைக்காக நம் சந்தோசம், அமைதி, நிம்மதிக்காகத் தான் நாம் அம்மாவிடம் இருக்கிறோமே தவிர *முழுக்க முழுக்க அம்மாவிற்காகவே – அம்மாவின் வருகையை, அவளின் அவதார மகிமையை உலகமெங்கும் பட்டி தொட்டியெங்கும் பரப்ப வேண்டும் என்பதற்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் யாரும் இருக்கிறோமா? கூறுங்கள்.* இப்போது மனசாட்சி தொட்டு கேட்டுக் கொள்ளவும். *அம்மாவுக்கு என்று யாராவது இருக்கிறோமா?* என்று. ஓம் சக்தி. சிந்திப்போம், *இனியாவது அம்மாவிற்காகவே நம் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்வோமாக*. ஓம் சக்தி!
]]>