காரியம் அன்று. அகவளர்ச்சி பெற்றவர்க்கே ஆன்மிகம் என்றால் என்ன என்று அறிய முடியும்.*

*இவ்வாறு ஆன்மிக மாநாடு கூட்டுவதன் நோக்கம் என்ன என்பதை நீங்கள் அறிய வேண்டும்.இங்கு வருகின்றவர்கள் அனைவரும் ஆன்மிகம் பற்றி அறிந்திருப்பார்கள், தாம் அறிந்ததைப் பற்றிக் கூறுவார்கள் என்ற கருத்தில் இது கூட்டப் பெறவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் இங்கு வந்து இந்த மண்ணை மிதித்தால் அதன்பிறகு அவர்களுக்கு ஆன்ம வளர்ச்சி கிட்டும். அடுத்து அவர்கள் பேசும்போது ஆன்மிகம் பற்றிய கருத்துக்களை வெளியிட வாய்ப்பாக அமையும்.இதற்காகத் தான் இந்த மாநாடு கூட்டப்பட்டது.* *இவ்வளவு செலவழித்து எத்தனை பேர் இதனால் பயனடைவார்கள் என நினைக்கிறீர்கள்? ஒருவர் பயனடைந்தாலே போதுமானது.* *இதனையடுத்து மகளிர் ஆன்மிக மாநாடும், உலக ஆன்மிக மாநாடும் நடத்தப் போகிறோம். பத்து பேர் உலகின் பல பாகங்களிருந்தும் வந்து பயனடைவார்கள். அந்தப் பத்துப் பேர்க்காக ரூபாய் 15 லட்சம் செலவு செய்வது பெரும் பயன் உண்டாக்கும் என்றாள் அன்னை.* *உலகியல் ரீதியாக நாம் போடும் கணக்கு வேறு! ஆன்மிக ரீதியாக அன்னை போடும் கணக்கு வேறு!* ஆதாரம் தலவரலாறு
]]>