நமது சித்தர்பீடத்தில் ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்கள் 23.09.2014 செவ்வாயன்று மதியம் 11.30 மணிக்கு கருவறையில் அகண்ட தீபம் ஏற்றி வைத்தார்கள்.பல்லாயிரக்கான பக்தர்கள் பங்கேற்ற இவ்விழாவில் நவராத்திரி இலட்சார்ச்சனை அன்று தொடங்கி 3.10.2014 வரை தொடர்ந்து நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா வெகு விமரிசையாகத் துவங்கியது.23.09.2014 அன்று விடிகாலை 3.00 மணிக்கு மங்கள இசையைத் தொடர்ந்து கருவறையில் அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிடேக,அலங்காரங்கள் செய்யப்பட்டு,தங்கக் கவசம் சாத்தப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

முன்னதாக காலை 10.45 மணிக்கு ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள் சித்தர்பீடம் வருகை தந்தபொழுது பக்தர்கள் அம்மா அவர்களுக்குப் பாதபூசை செய்து சிறப் பான வரவேற்புக் கொடுத்தனர்.

பிரகாரத்தை வலம் வந்த அம்மா அவர்கள் அருட்கூடம் சென்று மீண்டும் கருவறைக்கு வந்தபொழுது ஈர உடையுடன் வந்தார்கள்.

கருவறையில் அம்மனுக்கு தீபாராதனை செய்து பதர்களுக்கு ஆசி வழ்ங்கினார்கள்

தொடர்ந்து கருவறையில் சுயம்பு அம்மனுக்கு முன்பாக வைக்கபட்டிருந்த அகண்ட தீபத்தை 11.30 மணிக்கு ஏற்றி வைத்தார்கள்.

பின்னர் பக்தர்கள் பகுதியிலிருந்து 63 நாயன் மார்கள் மற்றும் 12 ஆழ்வார்கள் வேடமிட்டு அமர்ந்திருந்த சிறுவர்களிலிருந்து குங்கிலி கலய நாயனார்,கண்ணப்ப நாயனார்,ஆனாய நாயனார் வேடமிட்டிருந்த மூன்று பேரையும் தேர்ந்தெடுத்தார்கள்.அவர்களுக்கு திருமதி அம்மா அவர்கள்பொட்டிட்டு,மாலையிட்டார்கள்.

hqdefaultஅம்மா அவர்கள் திருக்கரங்களில் வேப்பிலைக் கொத்து பிடித்திருப்பது போல ,அவர்கள் மூவரின் பற்களாலும் வேப்பிலைக்கொத்தைப் பற்றி வருமாறு செய்தார்கள்.

அம்மா அவ்ர்கள் ஏற்றிய அகண்ட தீபத்தை அவர்கள் கைகளில் எடுத்துக் கொடுத்து சித்தர்பீடத்தை வலம் வரும்படி கூறினார்கள்.

அகண்ட தீபத்தின் முன்பாக கற்புரத்தட்டும் மங்கள வாத்தியங்களும் சென்றன.

பிரகாரத்தின் முன்புறமும் மற்றும் மூலைகளிலும் தாமரை சக்கரம்,முக்கோணம்,செவ்வகம்,அறுகோணம்,எண்கோணம்,வட்டம் முதலிய சக்கரங்கள் வரையப் பட்டிருந்தன.

அவற்றின் மேல் அதே வடிவத்தில் அமர்ந்திருந்த சிறுவர்,சிறுமியர்,மத்திய இளம் மற்றும் முதிய சுமங்கலிகள் கைகளில் வெவ்வேறு வகையான சிறப்பு விளக்குகள் ஏந்தி அகண்ட தீபத்தை வரவேற்க அகண்ட தீபம் பிரகாரத்தை சுற்றி எடுத்து வரப்பட்டது.

ஆங்காங்கே வழியில் உள்ள அனைத்து சன்னதிகளையும் வலம் வந்த அகண்ட தீபம்11.45 மணிக்கு கருவறையினுள் தென்கிழக்கு திசையில் அக்னிமூலையில் அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் வைக்கப்பட்டு திருஷ்டிகள் கழிக்கப்பட்டன.

மதியம் 12 மணிக்கு ஆன்மிக குரு அருள்திரு அம்மா அவர்கள் அகண்ட தீபத்தில் மூக்கூட்டு எண்ணெய் ஊற்றியதைத் தொடர்ந்து நீண்ட வரிசைகளில் காத்திருந்த செவ்வாடை பக்தர்களும்,பொது மக்களும் அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி வழிபட்டனர்.

பின்னர்,கருவறை முன்பாக வரிசையில் அமர்ந்து செவ்வாடை பக்தர்கள் பதிவு செய்திருந்த பெயர்கள் நட்சத்திரங்கள் கூறி சங்கல்பங்கள் சொல்லியதைத் தொடர்ந்து,நூற்றுக் கணக்கான செவ்வாடை பக்தர்கள் 1008,108 தமிழ் மந்திரங்கள் படித்திட ,கருவறையில் அன்னைக்கு குங்கும அர்ச்சனை செய்து லட்சார்ச்சனை நடைபெற்றது,

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .

அன்று மாலை புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு 306யாக குண்டங்கள் அமைத்து குடும்பங்கள் நலம்பெறவும் முன்னோர் ஆன்மாக்கள் சாந்தி பெறவும் மகாளய அமாவாசை வேள்வி நடைபெற்றது.

அறுகோணப்பட்டை வடிவில் அமக்கப்பட்டிருந்த பெரிய பொது யாக குண்டத்தில் மித்துகளும்,நவதானியங்களும் இட்டு பல்லாயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்களும்பொதுமக்களும் வரிசையில் வந்து வழிபட்டனர்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கருவறையில் அம்மனுக்கு வெவ்வேறு பெயர்களில்,வடிவக்களில் தெய்வீக அலங்காரங்கள் செய்யப்பட்டு தினசரி லட்சார்ச்சனைகள் செய்யப்பட்டன.

விழாவின் ஐந்தாம் நாள் வழக்கம் போல அகண்ட தீபம் கருவறையிலிருந்து வெளியே எடுத்து வந்து,அந்தப் பிரகாரத்தின் வாயு மூலையில் இறக்கி வைக்கும் அற்புதமான நிகழ்ச்சியை அன்னை நடத்தி வைத்தார்கள்.

இதற்காக பக்தர்கள் கூட்டத்திலிருந்து 3 பள்ளிச் சிறுமிகளை அம்மா தேர்வு செய்தார்கள்,இந்த ஆண்டின் புதுமையாக கருவறையின் பின்புறம் காமதேனுவின் இரு கொம்புகளிலும் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களில் கற்பூரம் ஏற்றி வைத்து அகண்டம் அந்த இடத்திற்கு வரும்பொழுது அதை எரியும்படி செய்தார்கள்.

விழா நடைபெற்ற 11 நாட்களும் சித்தர்பீடத்தில் ஒவ்வொரு நாள்  மாலையும் ஒரு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.தினசரி அன்னதானம்,பிரசாதம் வழங்குதல் பணி தொடர்ந்து நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத் தலைவர் திருமதி அம்மா அவர்களின் தலைமையில் சென்னை மாவட்ட பக்தர்கள் பொறுப்பேற்று சிறப்பாகச் செய்திருந்தனர்.இயக்கத் துணைத் தலைவர் சக்தி திரு.கோ.ப.செந்தில்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சக்தி.திருமதி.ஶ்ரீதேவி ரமேஷ் மேற்பார்வையில் அகண்டதீப வலமும் சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: சக்தி ஒளி
அக்டோபா் 2014
பக்கம்: 33-35
]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here