மருவூரார்!

நின்…
திருவடிக்கும் விழி உண்டு! 
துதிப்போர்க்கு பலன் உண்டு!

வானளாவிய இறையை..
மானுடமான மறையை..
நானுடன் இருக்கும்..
நற்பாக்கியம் கண்டு..
ஊனுடல் உள்ளம்..
உருகுதம்மா..நின்று!

போதித்தோர்..உண்டு!
உன்னைபோல்..
சாதித்தோர் உண்டா?

தெய்வமா இருந்தாலும். .
மானிடரை மதித்த 
மகான்நீ!
அரசாங்கம் தந்த பத்மஸ்ரீ. .
அங்குகூட பரம்பொருள்..
பக்தர்களுக்காக செய்த
அற்புதத்தை
கொஞ்சம் கூட காட்டிக்காத..
அமைதியாய் பெற்ற.. 
ஆதிசக்தி குணாள
மகேசன்நீ!மற்றவர்கள் வாங்குவது
அவரவர் பெருமைக்கு! 
பெற்றவளே நீ வாங்கியது 
எங்கள் பெருமைக்கு!

ஆச்சர்யமான..அடக்கம் நீ!
அதிசயமான..துவக்கம் நீ!

எண்ணிய தெய்வமாய்..
எங்களுக்கு காட்சி தரும்…
இறைதன்மை 
என்ன சொல்வேன்!
சென்னியதுன்றன் 
திருவடி பேற்றினை..
போற்றவே..
பிறவி பெற்றேன்!

அச்சிவன் தனக்கும்
தாய்நீ!
அறியா கூட்டத்துக்கு
மாயை நீ!
உன் …
திருவடிக்கும் விழி உண்டு!
தெளிந்திடில் வழி உண்டு!

ஓம்சக்தி!?

…..சபா ஸ்ரீமுஷ்ணம். .