அண்டங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்துவரும் அன்னை ஆதிபராசக்தி இப்புளியம்பட்டி நகரிலே தன் திருவிளையாடல்களை எப்படிப் புhpயவைத்தான் என்று அனுபவ வாயிலாக நான் கண்ட உண்மையினை இக்கட்டுரையிலே எடுத்தியம்ப முயலுகிறேன்.

விஞ்ஞானயுகமான இக்காலத்திலே அஞ்ஞானங்கள் அகன்று மெய்ஞ்ஞானத்தினை உணர வைக்கத் திருவுள்ளம் கொண்ட அன்னை ஆதிபராசக்தி இங்கு ஒரு தொண்டரின் வாழ்க்கையில் நிகழ்த்திய திருவிளையாடலைக் காணுங்கள்.

சுமார் 55 வயதிருக்கும் இவருக்கு 7 வருடங்களாக சர்க்கரை வியாதி (டயாப்டீஸ்) இருந்து வந்தது. இவர் தினமும் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வார். அன்னையின் அருட்சக்தியை ஓரளவு உணர்ந்த நான் அவரிடம் நாங்கள் மேல்மருவத்தூர் செல்கிறோம். நீங்களும் எங்களுடன் வாருங்கள் என்று அழைத்தோம். அவர் ‘‘நான் எங்கே டாக்டர் அவ்வளவு தூரம் வரப்போகிறேன்? என்னால் சிறிது தூரம்கூட நடக்க முடியவில்லையே. கால்விரலில் பாருங்கள் புண் ஏற்பட்டு இந்தச் சர்க்கரை வியாதியால் ஆறாமல் இருக்கிறது. எப்படி 400 கி.மீ. தூரம் காரிலே உட்கார்ந்து கொண்டு வரப்போகிறேன்? அது முடியாது நீங்கள் சென்று வாருங்கள்” என்று கூறினார். என்றாலும் நாங்கள் அவருக்கு அன்னையின் பெருமைகளை எடுத்துச் சொல்லிக் கோவிலுக்கு வரச் சம்மதிக்கச் செய்தோம். பின்னர் இரண்டு பேர் கைத்தாங்கலாக அவரைப் பிடித்துக் கூட்டிவந்து காரிலே உட்கார வைத்து மருவத்தூர் அன்னை ஆதிபராசத்தி ஆலயத்திற்கு வந்து சேர்ந்தோம்.

அன்னையின் ஆலய மண்ணிலே அடி எடுத்து வைத்ததும் அவருக்கு ஒரு புத்துணர்ச்சி தோன்றியது. நாங்கள் எல்லோரும் அங்கப் பிரதட்சணம் செய்தோம். அவரையும் அங்கப் பிரதட்சணம் செய்யும்படிக் கூறினோம். ஆனால் அவர் மிகவும் பயந்துகொண்டு ‘‘நான் டயாபடீஸ் வியாதிக்காரன்; கால் புண்ணில் நீர்பட்டால் உடனே சீழ்பிடிக்கும் பிறகு புண் ஆறுவது மிகவும் சிரமம் வேண்டாம்” என்றார். ‘‘நீங்கள் பயப்பட வேண்டாம். தீராத வினை எல்லாம் தீர்க்கும் இப் பெருமாட்டி உங்கள் வியாதியையா தீர்த்து வைக்காமல் விடப்போகிறாள்? நீங்கள் அன்னையை முழுமையாக நம்பி அங்கப் பிரதட்சணம் செய்யுங்கள் என்று கூறினோம்.

அவரும் குளித்து மரஉடையுடன் அங்கப் பிரதட்சணத்திற்குத் தயார் ஆனார். முன்னரே பாதுகாப்பாக கால் விரல் புண்ணிற்கு பாலிதின் காகிதப் பையை வைத்துச் சுற்றித் தண்ணீர் மண் ஆகியவை படாதவாறு செய்து கொண்டார். அன்னையை வேண்டிப் படுத்தார்; உருண்டார் இல்லை இல்லை; அன்னையால் உருட்டி விடப்பட்டார். அங்கப் பிரதட்சண நிகழ்ச்சி முடிந்ததும் எழுந்தார். புற்று மண்டபத்திலே நான் நின்று கொண்டிருந்தேன். நேராக வந்தவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டு பொல பொல வெனக் கண்ணீர் சிந்தி அழுது விட்டார். ‘‘அன்னையைக் கண்டேன்; இல்லை! உணர்ந்தேன். அங்கப் பிரதட்சணத்தின் போதுதான் அன்னையின் சக்தியை நான் முழுதும் உணர்ந்தேன் என்று மிகவும் உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார். 10 அடிதூரம் கூடத் தனியாக நடக்க இயலாத நிலையில் இருந்த அவர் அங்கப் பிரதட்சணத்திற்குப் பின்னங்களடன் அன்னையின் ஆலயத்திற்குப் பின்புறமுள்ள வயலில் உள்ள கிணற்றிற்கு வந்தார். கிணற்றிலே இறங்கி நீந்திக் குளித்தார். அவரது வினையெல்லாம் அத்தோடு முடிந்தது போலும்! குளித்து வந்தவுடன் மிகவும் திடகாத்திரமாக இருந்தார். ‘‘10 வருடங்களுக்கு முன் நான் எப்படி இருந்தேனோ அப்படி இருக்கிறேன் இப்போது!” என்று கூறினார். பின்னர் மன்றத்துக்கான பொது அருள்வாக்கு நடைபெற்றது. அப்போது அன்னை அவரை நோக்கி ‘‘நீ புளியம்பட்டி மன்றத்தின் தலைவனாக இரு மகனே!” என்று சொல்லியவுடன் ‘‘தாயே! நான் நடக்கவே சக்தியில்லாதவனாக இருக்கிறேன். நான் எப்படி மன்றத்தின் தலைவனாக இருந்து செயல்பட முடியும்? என்று கேட்டார் உடன் அன்னை ஆன்மிகத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச் சொல்லி ‘‘உனக்குச் சக்தியை தருபவள் நானடா மகனே! மருந்து மாத்திரைகளை மூலையில் தூக்கி எறிந்துவிட்டு எனது பணியினைச் செய்துவா மகனே” என அருளாணை பிறந்தது. அன்று முதல் தொடர்ந்து அன்னையின் பணியினைச் செய்து வருகிறார்.

தினமும் இரண்டு இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டு மாத்திரையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் அன்று முதல் இன்றுவரை ஊசியும் போட்டுக் கொள்வதில்லை; மாத்திரையும் சாப்பிடுவதில்லை. அன்று மருவத்தூhpலேயே பகல் உணவு அருந்தும் போது சர்க்கரையே சேர்த்துக் கொள்ளாத அவருக்குப் பக்கத்து இலையில் இருந்த இனிப்புப் பலகாரத்தையும் கூட எடுத்து வைத்துச் சாப்பிடச் சொல்லி எல்லோரும் மகிழ்ந்தோம். அவருக்கும் எனக்கும் புதிய வாழ்வு கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சி.

மருவத்தூரிலிருந்து திரும்பியவுடன் புளியம்பட்டி பாத யாத்திரைப் பிரச்சாரக் குழுவுடன் சேர்ந்து இவரும் வாரா வாரம் தொடர்ந்து ஆறு வாரங்கள் சுமார் 30 மைல் தூரம் அனைவருடனும் நடந்து வந்து பிரச்சாரத்திலே ஈடுபட்டு தனக்கு நேரிட்ட நிகழ்ச்சிகனை அனுபவத்தினைக் கிராம மக்கள் இடையே சொற்பொழிவாற்றி அன்னையின் புகழ் பரப்பும் பணியினைச் செய்து வருகிறார்.

இதனையறிந்த சக மருத்துவ நண்பர்கள் ஒருநாள் அங்கப் பிரதட்சணம் செய்வதால் மட்டும் சர்க்கரை வியாதி குணமாகுமா என விவாதித்தனர். ஏதோ மனத்திலே ஏற்பட்ட நம்பிக்கையினால் தெம்பாக இருக்கலாம். ஆனால் வியாதி எப்படி நீங்கும் என்று விவாதித்தனர். விஞ்ஞானத்தை மட்டுமே நம்பும் சிலருக்கு நம்பிக்கை பிறக்க விஞ்ஞான முறைப்படி இவரைச் சோதனைக்குள்ளாக்கினோம். பரிசோதனை செய்ததிலும் சர்க்கரை வியாதி இருப்பதற்கான அறிகுறியே இல்லை. எனவே இவருக்கு டயாபடீஸ் வியாதி இல்லை என்று முடிவு செய்துள்ளனர். மெய்ஞ்ஞானத்திற்கு முன் விஞ்ஞானம் என்றாவது ஒருநாள் தலைகுனிந்து நின்றுதான் ஆக வேண்டும் என்பதன் துவக்கமோ இது! என்ற எண்ணமே உருவானது. படைத்தல், காத்தல், அளித்தல், அழித்தல் அனைத்தையும் செய்து ஆட்டிப் படைப்பவன் அன்னை ஆதிபராசக்தியே என்பது கண்கூடாய் விளங்குகிறது. அனைத்தும் அன்னை ஆதிபராசக்தியின் அருட் செயலே என்பதனை இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிகிறேன்.

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 3 (1982) பக்கம்: 29-31

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here