மருவூரார்!

புழுதியோடு இருந்தாலும் 
அழுதுவரும் 
குழந்தையினை..
அள்ளிக்கொள்ளும்
தாயை போல…
புலன்வழியில் ஆடினாலும்
உன்னடியே 
கதியென்றால்
அரவணைப்பாய் 
ஆசை தீர..!

விழுதெனவே விழும்போது
வேதனையை 
தீர்த்திடுவாய்..
வேறென்ன 
வேணும் கேட்க?
விண்ணவரும்
மண்ணவரும்
வேண்டிதேடும்
பரமசுகம்..
விளையாடுதே.
நானும் பார்க்க..!

எழும்பிரச்சனை
எல்லாமும்
இருமுடியை 
தோள்தாங்க 
ஏற்றுதருவாய்..
மாற்றம் நேரும்..
இனியஉனது 
திருப்பெயரை..
எழுதிசொல்லி
இடைவிடாது..
இன்பங்கொள்வார்
ஏற்றம் சேரும்!

நழுவவிட மனமில்லை. .
நாயகனே இதுபோல்இனி
அவதாரம் உண்டா கூறு?
நான்’மறந்து நின்றாலும்
நீமறவா 
எனைதேற்றி..நின்..
திருவடியில் 
?எம்மை சேரு!

…..சபா ஸ்ரீமுஷ்ணம். .