தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் இருக்கின்றன! எல்லா ஆலயங்களிலும் புனிதனும், சக்தியும் இருக்கத் தான் செய்கின்றன! ஆனால் மேல்மருவத்தூர் ஆலயம் மற்ற ஆலயங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது! அதை மருவத்தூர் மண்ணை மிதித்து, மருவத்தூர் அன்னையை தொழுவார்கள் மனப்பூர்வமாக உணர்ந்து கொள்கிறார்கள். 1. குருவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் சக்தி தலம் மேல்மருவத்தூர்! 2. அன்னையின் உரு, அருள்திரு அடிகளார் அவர்களின் அருள் காட்டுதலில் – ஆன்மீகத் தொண்டுகள் செய்து வரும் இலட்சக்கணக்கான ஆடவர்- மகளிர் சக்தி தொண்டர்களை கொண்டது மேல்மருவத்தூர்! 3. ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டு “அன்னையின் அருள்வாக்கு விதிகளுக்கு மட்டும்” உட்பட்ட அருள் சித்தர் பீடம் மேல்மருவத்தூர்! 4. ஆதிபராசக்திக்கு விரதமிருந்து, சக்திமாலை அணிந்து சக்தி இருமுடி செலுத்தும் சக்தி தலம் மேல்மருவத்தூர்! 5. அன்னையின் அருள்வாக்குப் படி எல்லா காரியங்களும் நடைபெறுவதால் – “தெய்வீக நிர்வாகம்” நடக்கும் சக்தி தலம், மேல்மருவத்தூர்! 6. சமுதாயத் தொண்டுகளுக்kum், கல்வி மருத்துவ பண்பாடு அறத் தொண்டுகளுக்கும் தமிழகத்தில் முதன்மையான ஆலயம், மேல் மருவத்தூர்! 7. ஜாதி, மத, இன வேறுபாடில்லாமல், ஏழை- பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் “ஒரே தாய்!! ஒரே குலம் !!” என்ற ஒரே சிந்தனையுடன் “செந்நிற” ஆடை அணிந்து எல்லோரும் ஆன்மீகப் பணிகளைச் சமமாக செய்ய வாய்ப்புகள் தரும் சக்திதலம், மேல்மருவத்தூர்! 8. ‘சமுதாயத்திலும், ஆன்மிகத்திலும், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!” என்று வாயளவில் பேசாமல், செயல் அளவில் பெண்களுக்கு எல்லாவற்றிலும் (வழிபாட்டு பூசைகளில், கேள்வி பூசைகளில், அமைப்பு , நிர்வாகத்தில்) அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் சக்தி தலம் , மேல்மருவத்தூர்! 9. வித்தியாசமான எளிய பூஜை, திருஷ்டி முறைகளும், வேள்வி முறைகளும் கொண்டு, “சப்தகன்னிமார்களுக்கு ” சந்நிதியும், ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை முதலியவற்றைமாய்க்கும் அதர்வண பத்ரகாளி சந்நிதியும் அமைந்த சக்திதலம், மேல்மருவத்தூர்! 10. 1800 -க்கு மேற்பட்ட ஓம் சக்தி மன்றங்களின் வாயிலாக வழிபாடும், சமுதாயத் தொண்டும் செய்து, அதை நிர்வகித்து வரும் தலைமை சித்தர்பீடம், மேல்மருவத்தூர்! 11. “உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும். ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!” என்ற உயர்ந்த இலட்சியத்திற்கு – தனது வியர்வைத் துளிகளால் அபிடேகம் செய்து வரும் அருள்திரு. அடிகளார் அவர்களால் அகிலம் முழுமைக்கும் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட்டு வரும் அற்புத சக்தி தலம், மேல்மருவத்தூர்! இத்தனை சிறப்பு அம்சங்கள் மேல்மருவத்தூரில் இருப்பதால் தான் “தொண்டு” -என்பது இங்கே தவிர்க்க முடியாததாகிவிடுகிறது!

]]>