திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அன்னதானப் பணியில் 2004 ஆம் ஆண்டு நான் ஈடுபட்டிருந்த சமயம் அது! அம்மாவைப் பற்றி தெரியாது. திருவண்ணாலையில் உள்ள சக்திபீடத்தைச் சேர்ந்த சக்தி துரைசாமி என்னை மேல்மருவத்தூருக்கு அழைத்து வந்தார். அம்மாவுக்குப் பாதபூஜை செய்ய வழி காட்டினார்.

-அம்மாவின் முதல் தரிசனம் அது ! என் தலையில் கையை வைத்து ஆசிர்வாதம் செய்து, ‘ இருமுடி செலுத்திவிட்டுப் போ ! இங்குள்ள நிறுவனங்களையெல்லாம் பார்த்துவிட்டுப் போ ! ‘ என்றார்கள்.

எனக்கு ஒரு புதல்வியும் இரண்டு புதல்வர்களும் இருக்கின்றார்கள். என் பெண்ணுக்கு 26 வயது. ஒரு வருடமாகத் திருமணத்துக்கு முயன்றோம். எந்த வரனும் பொருந்தவில்லை.

2006 ஆம் ஆண்டு பாதபூஜை செய்து மகள் திருமணம் பற்றிக் கேட்டேன். “ எல்லாம் சரியாக வரும். நான் பார்த்துக் கொள்கிறேன். நீ போ ! “ என்றார்கள். அப்போது கேட்டார்கள், “ உன் மகள் திருமணத்திற்கு எல்லாருக்கும் சாப்பாடு போடுவாய்தானே…..? அதுபோல நினைத்து இந்தச் சந்நிதியில் நிற்கும் கொஞ்சம் பேருக்காவது சிறிய அளவில் அன்னதானம் செய்துவிட்டுப் போ ! “ என்றார்கள். அப்படியே செய்தேன். இது  நடந்தது 2006 தை மாதம்.

அடுத்த ஆண்டு ஆனி மாதம் படித்த – வடிவான வரன் கிடைக்கப் பெற்று நிச்சயதார்த்தம் நடந்தது. 1.4.2007 ல் அம்மா அருளால் இனிதே திருமணம் நடந்தது.

நன்றி, சக்தி, பிரான்ஸ் சக்தி ஒளி ஜனவரி 2009, பக்கம் – 38-40.]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here