எனக்கு எட்டு வருடங்களாகத்தான் அம்மாவைத் தெரியும். என்னையும், எங்களது குடும்பத்தையும் எவ்வளவோ கக்ஷ்டங்களிலிருந்து காப்பாற்றியிருக்கிறாள். எங்களது படிப்பு, வேலை, வாகனம், வீடு என எந்தெந்த நேரம் என்ன கொடுக்க வேண்டுமோ அத்தனையும் கொடுத்தாள்.

இப்படியெல்லாம் கொடுத்த அம்மாவுக்கு நான் ஒரு நேர்த்திக்கடன் வைத்து மூன்று வருடங்களாகியும் நிறைவேற்றவில்லை. இதனால் தானோ என்னவோ இன்று கக்ஷ்டப்படுகிறேன்.

நான் பொறியியற் படிப்பு முடிக்கிற தருவாயில் நிறைய இடங்களில் வேலை தேடி அலைந்தேன். சில இடங்களிலிருந்து நேர்முகத் தேர்வு வரும். ஆனால் ஒன்றிலும் வெற்றி கிட்டவில்லை. இறுதித் தேர்வுக்கு இன்னும் சில கிழமைகளே இருந்தன. படிப்பு முடிந்தவுடன் என்ன செய்வதென்று எனக்கு ஒரே பயமாக இருந்தது. கடைசி தேர்வு முடிந்தால், நான் ஒரு வேலை இல்லாத பட்டதாரி ! அந்த நிலைமையில் இருக்க நேர்ந்திடுமோ என்று அஞ்சினேன்.

இப்படி இருக்கையில் நான் கடைசித் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் போது, வீட்டுக்கு “ சக்தி ஒளி “ தபாலில் வந்தது. நான் எனது பாடப்புத்தகத்தை வைத்துவிட்டு, சக்தி ஒளியை எடுத்து ஆவலாகப் படித்தேன். நான் எப்பொழுது “சக்தி ஒளி “ வாசித்தாலும், கவலையில் இருந்தாலும் அதற்கான பதில் அதிலேயே கிடைக்கும். இதை அனுபவத்தில் உணர்ந்து சொன்னவர்களிடமிருந்து அறிந்திருக்கிறேன்.

நான் அன்று படிக்கும்போது சக்தி ஒளிக்கு எழுதினால் வேலை கிடைக்கும் என்று சிலர் எழுதிய அனுபவங்களிலிருந்து எனக்குச் செய்தி கிடைத்தது. உடனே நானும் எனக்குக் கடைசி பரிட்சை எழுதுவதற்குள் என் கையில் வேலை உத்திரவாதம் கிடைக்க வேண்டுமெனவும், கிடைத்தால் சக்திஒளிக்கு எழுதுவதாகவும் வேண்டினேன்.

வேண்டிய சில நாட்களில் ஒரு நிறுவனத்திலிருந்து தொலைபேசி வந்தது. நேர்முகத் தேர்வுக்கும் போனேன். உடனேயே வேலையும் கிடைத்தது. எனது பரிட்சை முடிவுகள் வரும் முன்னரே வேலையையும் தொடங்கினேன்.

 நன்றி சக்தி. சசிகலா சத்குணநாதன்,

மெல்போர்ன்,ஆஸ்திரேலியா

சக்தி ஒளி அக்டோபர் 2009, பக்கம் – 64.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here