என்னைப் போல ஆன்மிக ஈடுபாடு என் மனைவிக்கு அவ்வளவாகக் கிடையாது. 2.1.2007 ல் அவளுக்கு நுனி நாக்கில் ஒரு காய் போல் கட்டி வந்து தொல்லைப் படுத்தியது. இந்தியாவில் ஒரு டாக்டரிடம் சிகிச்சை அளித்தோம். அறுவைசிகிச்சை செய்து அதை எடுத்து விட்டார். நாங்கள் பிரான்ஸ் சென்றோம். 20.1.2007  வரையிலும் அந்தப் புண் ஆறவில்லை. சீழ் கட்டிவிட்டது. வலி அதிகமாகித் துடிப்பாள். இதனால் என் மகள் திருமணம் பாதிக்கப்படுமோ என்ற பயம் வந்துவிட்டது. தையல் போட்ட நூலை அந்த நாக்கின் நுனியில் பார்த்தாலே பயமாக இருக்கும்.

ஒரு வியாழக்கிழமை ! படுக்கைக்குத் தூங்கச் சென்றபோது, அம்மாவின் பாதபுஜை தீர்த்தத்தை ஒரு சிறிய கரண்டியில் எடுத்து சாப்பிட்டுவிட்டுத் தூங்கு ! எல்லாம் சரியாகிவிடும் என்றேன். அவ்வாறே செய்தாள்.

மறுநாள் காலை….. ஒரே ஆச்சரியம் ! ஆம் ! நாக்கில் இருந்த தையல் நூலையும் காணோம், வலியும் காணோம். சீழ் கட்டி இருந்த இடமே தெரியாமல் மறைந்துவிட்டது. அதன் பிறகுதான் அம்மாவின் மகிமையை என் மனைவி புரிந்துக் கொண்டா.ள்.

இன்னொரு சம்பவம் !. என் மூன்றாவது பிள்ளைக்கு 17 வயது. அவனுக்கு 2007ல் A.I. தேர்வு நடைபெற இருந்தது. மகளின் திருமண நேரத்தில் அவனால் ஒழுங்காகப் படிக்க முடியவில்லை. திருமணக் கொண்டாட்டங்கள் முடிந்து சீராக வர ஏப்ரல் 15 ஆகிவிட்டது. முழுப் பாடங்களையும் திரும்ப படிக்க அவனுக்கு கால அவகாசம் இல்லை. ஆனால் தேர்வு குறித்து பயந்தான்.

“ உன்னால் முடிந்த அளவு முயற்சி செய் ! இயலாத கட்டத்தில் அந்த ஓம் சக்தி கை கொடுப்பாள் “ என்று தைரியம் சொன்னேன்.

தேர்வுக்க்கு இன்னும் ஐந்து நாட்கள் இருக்கும் சமயம். பள்ளியிலிருந்து வந்த என் மகன் அழுதபடியே வீட்டிற்குள் நுழைந்தான். ஏன் அழுகிறாய் ? என்று விசாரித்தேன். தேர்வுக்குப் படித்தது போதாது. பயமாக இருக்கிறது என்றான். பயப்படாமல் படி ! அம்மா துணை இருப்பார்கள் என்றேன். 2007 மே மாதம் தேர்வு முடிந்தது.

தேர்வு முடிவுகள் ஜீன் மாதம் வெளியிட இருந்தார்கள். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், நானும் அவனும் பள்ளிக்குச் சென்றோம்.

இந்த நாட்டில் தேர்வில் சிறிதளவு மதிப்பெண்கள் குறைந்தால் ஒரு வாரத்தில் நேர்முகத் தேர்வு வைப்பார்கள். அதில் திருப்தியாக மதிப்பெண் எடுத்தால் தேர்வில் வெற்றி பெறச் செய்வார்கள். அதே நிலைமை என் மகனுக்கும் வந்துவிட்டது. அவன் 80 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். அதுவும் மறுநாளே தேர்வில் எடுக்க வேண்டும். திரும்பப் படிக்கவோ அவனுக்கு நேரம் போதாது. கூடியவரை படி ! என்றேன்.

 நன்றி,

சக்தி, பிரான்ஸ்

சக்தி ஒளி ஜனவரி 2009, பக்கம் – 38-40.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here