என்னை அறிந்து கொண்டவர்கட்கு அருகில் இருக்கிறேன், என்னை
அறியாதவர்களுக்கு அருவமாக இருக்கிறேன்,’

“பத்து தாய் இருந்தாலும் பெற்ற தாய் ஒருத்திதான், பத்து தெய்வங்களை நீ வணங்கினாலும் மூல தெய்வம் ஒன்று தான், அது தான் ஆதிபராசக்தி
அடி விழும் போது அம்மா – என்ற சொல் தானே வெளிவருகிறது’

“ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்கள் மனதில் தர்ம நிலைப்பாட்டையும் இயற்கை வழிப்பாட்டையும் செய்ய வேண்டும்,’

“உன்னுடைய உண்மையான தரும சிந்தனைக்கும் செயலுக்கும் தான் அருள் புரிவேன்,’

“அன்னதானம் செய்வதாலும் தருமங்கள் செய்வதாலும் பலருக்கு ஞானம் கிட்டும் தான தருமங்களால் வரும் ஞானமே,மிகவும் உயர்ந்ததாகும்,’

“தண்டால் எடுத்தவனல்லாம் தலைவன் ஆனால்,, அதர்மம் தான் இருக்கும்,
அந்த அதர்மத்தை தரும காரியங்களால் தான் வெல்ல முடியும்,’

“ஆன்மீகம் தான் எல்லாவற்றிற்கும் மருந்து – கலியுகத்திற்கு’

“தூய்மையான,மனத்துடன் என்னை நினைப்பவர்களுக்குச் சுத்தமான வாக்கையும் அளிக்கிறேன்,’

“அகிலாண்ட கோடிகளை அண்ட சராசரங்களையும் படைத்த நானே ஒவ்வொரு ஜீவனிடத்திலும் இயங்கி கொண்டிருக்கும் ஜீவாத்மா’

_____ அன்னையின் அருள்வாக்கு