எண்ணங்களும் செயல்பாடுகளும்

0
300

எண்ணங்களும் செயல்பாடுகளும் ஒரே மாதிரி இருந்தால் தான் அவன் பக்திமான், செவ்வாடைத் தொண்டன்,

உள்ளம் ஒன்று நினைக்க ,உதடுகள் ஒன்று உரைக்குமானால் ,அது பாவனை தான்,

உள்ளம் சலனத்தில் லயிக்க ,உதடுகள் ஒன்று உரைக்குமானால் அது பாவனை தான் /

மனமுரண்பாடுகள் தொண்டனுக்கு எப்போதும் ஏற்படக் கூடாது,

நல்ல சிந்தனைகள் – நல்ல செயல்பாடுகளை பிரசவிக்கின்றன,

நல்ல செயல்பாடுகள் நல்ல மகிழ்ச்சியான விளைவுகளைத் தந்து கொண்டே இருக்கின்றன,

மகிழ்ச்சியான விளைவுகளே மகிழ்ச்சியான வாழ்வுகளாகின்றன,

களங்கமில்லா எண்ணங்களை நெஞ்சில் நிரப்பும் போது, கலங்கா நெஞ்சில் காணும் பொருளாக சக்தியைப் பார்க்கலாம்,

சந்தோசமான வாழ்க்கைக்கு சரியான மூலதனம் சஞ்சலமில்லா மனம் ஒன்று தான்,

சஞ்சலமில்லா மனம் யாருக்கெல்லாம் வாய்க்கிறது?

ஐம்புலன்களை முறையாகப் பயன்படுத்தி உணவையும் உணர்வையும் கட்டுப்படுத்தி
பக்தி, தியானம், வழிபாடு, தொண்டு என்ற சிந்தனையோடு ஒழுக்கத்தோடு நடப்பவர்களுக்கும் நடக்க முயல்பவர் களுக்குமே, சஞ்சலமில்லா மனம் கிடைக்கிறது,

ஒழுக்கம் அருள்சேர்க்கும்,

🌷 அன்னையின் அருள்வாக்கு🌷