*ஒரே பிறவியில் ஒருவன் எல்லாம் தெரிந்து கொண்டு முழுமை அடைய முடியாது என்பதால் தான் பல பிறவிகள் பல பிறவிகள் கொடுக்கப்படுகின்றன. பாவ புண்ணியக் கணக்குப்படி இன்ப,துன்ப அனுபவங்கள் அளிக்கப்படுகின்றன.* அவனுக்கு ஏன் அப்படி? எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று வாதாடிப் பயனில்லை. உன் வாதம் எந்தக் கோட்டைக்குப் போயும் ஜெயிக்காது! *புண்ணியமும், பாவமும்..* ——————————– *புண்ணியம் செய்தால் இன்னொரு நல்ல உடம்பு! இன்னொரு உலகம்!* *பாவம்செய்தால் இன்னொரு நல்ல உடம்பு! இன்னொரு உலகம்!* இப்படிதான் ஆன்மா வேறு உடம்பு! வேறு ஒரு பிறவி வேறு உலகம் என்று நீண்ட நெடிய பயணத்தில் சஞ்சரித்தபடி இருக்கிறது. *ஞானம் உள்ளவன் இந்த உண்மையைப் புரிந்து கொண்டான். அஞ்ஞானி விஞ்ஞானம் பேசிக்கொண்டு மதி மயங்கி கிடக்கிறான்! மற்றவர்களையும் மயக்குகிறான்* *மொத்தத்தில் இந்த வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு! இந்த ஆட்டத்தில் ஏணியும் உண்டு. பாம்பு உண்டு. புண்ணியம் என்ற ஏணி மேலே ஏற்றுகிறது. பாவம் என்ற பாம்பு கீழே தள்ளுகிறது. இப்படி ஏறுவதும்,இறங்குவதுமாகவே வாழ்க்கை தொடர்கிறது. பரமபதத்தை அடையும் வரை இந்த விளையாட்டு தொடர்கிறது.* பக்கம் 40-41.

]]>