மருவூரார்!

எத்தனை வழிகள். .
கொடுத்தாய் இறைவா…!
எங்களை பார்த்து. …
எதாவது நிலையில். .
வருவாய் மனிதா..
எது தகுமோ
எடுத்துக்கொள்
என்றனை எளிதா….!

மந்திரம் படிக்கலாம். ..
மனம் நிறை தொண்டில்
துதிக்கலாம்!
முடியா நிலையில். ..
மந்திர ஒலி…ஒலிக்கலாம். .
செவிக்கெலாம்…
சேவிக்கலாம். ..
வேள்வியில் கலக்கலாம். .
உருள்வலம் உருளலாம்…
அமைதியா எண்ணி..
தியானத்தில் லயிக்கலாம்..
ஓயாது உன்பெயரை. ..
உரைக்கலாம்..
ஜெபிக்கலாம்…
பூசம் மார்ச் சித்திரை. .
பூரம் நவராத்திரி. .என..
பலவழிகள் தந்தனை…
பக்குவமாய் உன்றனை..
பற்றிடவே சிந்தனை ..
எப்படியும் கரைசேர்க்க. ..
இடைவிடாது வழிகாட்டும். .
எளிய வந்த இறைவனே…
மருவூர் வாழ் துணைவனே.
எப்போதும் எங்களுடன்..
எங்கள் தலைமுறையும்..
உனக்கு அடிமையே…!

……சபா ஸ்ரீமுஷ்ணம். ..