அவரிடம் ஒரு நாள் அன்னை அருள்வாக்கின்போது “மகனே! காலை மாலை இரண்டு வேளைகளிலும் என் கோயிலைச் சுற்றுகிறாய்; அறிவேன். என்னைச் சுற்றிவதைவிட உன் வேலைத் தலத்தை இன்னும் இரண்டுமுறை சுற்றினால் அதனால் அதிகப் பயனுண்டு. ஏன் தெரியுமா? நானே திருமண மண்டப வேலைத்தலத்தில்தான் இருக்கிறேன். நீ அங்கே சுற்றினால் அதை நான் ஏற்றுக்கொள்வேன். அங்கே இன்னும் இரண்டு முறை அதிகமாகச் சுற்றும்போது அங்குள்ள குறைகள் உன் கண்ணில் படும். அவ்வாறே செய்”என்று பணித்தாள்.

பக்கம்: 241. மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம் தல வரலாறு. பாகம்-1.
]]>