” செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தை சேர்ந்த ஊர் செய்யூர்….!!

அவ்வூரில் தவமணி என்ற பெண்மணி அன்னையின் பக்தை……!!

1976ஆம் ஆண்டு ஒரு ஞாயிற்றுக் கிழமை சக்தி தவமணி வழக்கம் போல வீட்டு வேளைகளில் ஈடுபட்டிருந்தார்….!!

அன்று அவர் கணவர் திரு வேணுகோபாலும்
அவரது நண்பர்கள் சிலரும் சென்னைக்குப்
புறப்பட்டனர்.

“கொழுத்த ராகு காலம்”….. !!

“அதனை எடுத்து சொல்லவும் மனைவிக்கு பயம் “….!!

கணவருக்கு அதில் நம்பிக்கை இல்லை….

அன்று மாலை இவர்கள் செல்லும் வழியில்…….,

” ஒரு அரசியல் கட்சியின் ஊர்வலம்
நடந்து கொண்டிருந்தது”……..!!

அதனை கடப்பதற்காக……,

” காரில் இருந்து இறங்கி கூட்டத்தை தாண்டுவதற்குள்”……,

கூட்டத்தில் கலவரம்…
அடிதடி…
போலீஸ் கண்ணீர்புகை…

எனக் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்டது…..!!

திரு.வேணுகோபாலையும்,
அவர் நண்பர்களையும்
மடக்கி போலீஸ் லாரியில் ஏற்றி…..,

” சென்னை மத்திய சிறைக்கு கொண்டு சென்றுவிட்டனர்”……..!!

அவரைப் போன்றே….,

” பல அப்பாவிகள் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு சிறை பிடிக்கப்பட்டனர்”…….!!.

சக்தி தவமணி, தன் குழந்தைகளோடு கணவர் வருகைக்காக இரவு முழுவதும் காத்திருந்தார்..

மறுநாள் மதியமும் வந்து சேரவில்லை…

“சக்தி தவமணிக்கோ ஒரே பயம்”…..!!

அம்மா….!
“என் கணவரை பத்திரமாகக்
கொண்டு வந்து சேர்த்து விடு”….!!

என்று மருவூர் அன்னையிடம் புலம்பினார்…..!!

திரு. வேணுகோபால் அவர்களுடைய நண்பர்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டது தெரியாமல் …..,

“ஆளுக்கொரு பக்கம் தேடினார்கள்” …!!

கூவம் ஆற்றில் ஒரு பிணம் மிதப்பதாகவும்,

அது உங்கள் கணவர் ஜாடையாக இருபதாக ஒருவர் சொல்லக் கேட்டு தவமணிக்குக் குலை நடுங்கியது….

சக்தி தவமணியின் தந்தை அரசாங்கத்தில் ஓர் உயர் அதிகாரி…

அவரிடம் ஒரு போலீஸ்காரர் வந்து உங்கள்
மருமகன் சிறையில் அடைபட்டிருக்கிறார் என்று சொல்ல ,

உடனே விரைந்து சென்று அவரை ஜாமீனில் எடுத்து
காஞ்சிபுரம் அழைத்து சென்று விட்டார்……!!

இந்த விவரம் மனைவிக்கு தெரியாது…..

உடனே இவரது மனைவி புறப்பட்டு மருவத்தூர் வந்தார்….!

அன்னையிடம் அருள்வாக்கு கேட்டார்…..,!!

“எனக்கு நல்ல பதில் சொல்லும்மா”…..!!

என்று பைத்தியம் பிடித்தவர் போல் அழுந்தார்…….!!

அன்னையோ அமைதியாக…,

மகளே….!
“மனம் கலங்காதே”…..!!

“மரண வாசலுக்கு செல்ல இருந்து மகனை”….,
” சிறைவாசலுக்கு அனுப்பினேன்”………!!

“பயப்படாதே மகளே”….!!

“நீ வீடு திரும்புவதற்கு முன் நல்ல செய்தி வரும்”…….!!

“உன் கணவனுக்கு எந்த ஆபத்தும் இல்லை”…..!!
என்றாள் அன்னை ”

“அன்னையை வணங்கும் ஒவ்வொரு செவ்வாடை தொண்டனையும்”…..,

“அவன் குடும்பத்தையும்”….,

” மருவத்தூர் தாய் துணை நின்று பாதுகாப்பாள் என்பதற்கு”……..,

“எடுத்துக்காட்டாய் நடந்த நிகழ்வு”…..