குருவிற்குச் செய்யும் தொண்டு “சற்குரு சேவை மனத்தைச் செம்மைப் படுத்தும்; விதியின் வேகம் குறையும்; இறை உணர்வுகள் வளரும்; தீய குணங்கள் விலகும். ஞானம் வெளிவரும். சாபங்களின் சக்தி குறையும்.” – ஞானகீதை எப்படி இயக்குகின்றேன்? ————————– “இயற்கையில் உள்ள ஐம்பூதங்களையும் உங்கள் வாழ்க்கைக்குத் தக்கவாறு அமைத்துத் தருகிறேன். உழைப்பை உணவாக மாற்றித் தருகிறேன். வாயுவை வாயாக மாற்றுகிறேன். கண்ணீரைத் தண்ணீராக மாற்றுகிறேன். காற்றைக் காற்றாக மாற்றுகிறேன். இவ்வாறு மாற்றி உன்னுடைய ஆன்மிக உணர்வை இயக்குகிறேன். ஆனாலும் தொல்லைகள் பல வருகிற போது உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை குறைகிறது. அதனால் அந்தச் சாமி, இந்தச் சாமி என்று ஓடுகிறீரகள். எல்லாச் சாமிக்கும் சக்தி கொடுக்கிற சாமி தான் இந்தச் சாமி! இந்தச் சாமி தான் ஆதிபராசக்தி; என்ற எண்ணமும் நம்பிக்கையும் வருவதில்லை. அந்த நம்பிக்கை வராதபோது உங்கள் ஊழ்வினைகளை எப்படி மாற்ற முடியும்? அன்னையின் அருள்வாக்கு

]]>