.

சித்தர்கள், ஞானிகள், மகான்கள் இவர்களின் ஆற்றலையும் ஆன்ம பரிபக்குவத்தையும் சாதாரண மக்களால் எடை போட முடியாது. அவர்கள் தாமாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளமாட்டார்கள். அவர்களிடம் நெருங்கி பழகித் தான் அறிந்து கொள்ள முடியும். நமது ஆன்மிக குருவிற்கு, அவர் பிறந்த நாட்களிலும், வெளியூர் பயணம் வரும் போதும் அவ்வூரில் உள்ள மன்றங்களிலும், சில தனியார் வீடுகளிலும் பாதபூஜை செய்யும் பேரருள் கிடைக்கிறது. *அவ்வாறு பாதபூஜை செய்வதால் குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகிறது. பாதபூஜை செய்வதால் ஊழ்வினை துன்பங்கள் குறைகின்றன. பாதபூஜையை ஏற்றுக் கொள்ளும் போது கிடைக்கிற ஆன்மிக குருவின் அருளாசி நமக்கு வேண்டும் நேரத்தில் ஆபத்து வராமல் காப்பாற்றும், பாதபூஜைக்கு அப்படி ஒரு மகத்துவம் உண்டு.* *அன்னையின் அருளும், பூர்வ ஜென்மப் புண்ணியமும் இருந்தால் மட்டும் பாதபூஜை செய்யும் பாக்கியம் கிடைக்கும்.* *பாதபூஜை செய்யப்பட்ட தீர்த்தமானது, நமக்கு மட்டும் பயன்பட கூடியது அன்று. நவகோடி சித்தர்களும், முனிவர்களும், யோகிகளும், நமது ஆன்மிக குருவின் பாதம் பட்ட அந்த புனித தீர்த்தத்திற்காக காத்திருக்கிறார்கள்.* நமது ஆன்மிக குருவிற்கு எங்கே பாதபூஜை செய்யப்பட்டாலும், அவர் சூட்சும நிலையில் சித்தர் பெருமக்கள் எல்லாம் வந்து பாதபூஜை தீர்த்தத்தை பெற்றுக் கொள்கிறார்கள். ஒருவர் பாதபூஜை செய்யும் போது அவர்கள் இல்லத்திற்கு நவயோகிகளும், ஞானிகளும், முனிவர்களும், அருளாளர்களும் ஆன்மிக குருவுடன் சூட்சும நிலையில் வருகிறார்கள். *”பாதபூஜை செய்வதற்கு வட்டி கணக்கு பார்க்காதே. இந்த பணம் ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும்’ முயற்சிக்கு உதவுகிறது”* என்பது *

அன்னையின் அருள்வாக்கு

]]>