அன்னை கூறினாள், “மகனே ! சாலையில் மாடு போகிறது. மனிதன் போகிறான். இது மாடு ! இவன் மனிதன் ! என்று பிரித்துப் பார்க்கும்பேத புத்தி உங்கட்கெல்லாம் உண்டு ! தெருவில் ஆண் போகிறான் ! பெண் போகிறாள் ! இவன் ஆண் ! இவள் பெண் ! என்று பிரித்துப் பார்க்கிற பேத புத்தி உங்கட்கெல்லாம் உண்டு. அடிகளார் அப்படி பார்க்கிறவன் அல்ல ! எல்லோரையும் ஆன்மாவாகப் பார்க்கிறவன். அந்தப் பக்குவம் உங்களில் யாருக்கும் இல்லை !” “அது மட்டுமல்ல ! 2000 ஆண்டுகளாக என்னை நோக்கித் தவம் செய்த ஆத்மா அடிகளார் ! அதெல்லாம் உங்கட்குத் தெரியாதடா !” என்றாள் அன்னை – ஆகஸ்ட் 2017 சக்தி ஒளி பக்கம் – 58

]]>