“நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளன எல்லாம் அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக் குன்றே ! அருட்கடலே ! இமவான் பெற்ற கோமள மே !” – என்று பாடுகிறார் அபிராமி பட்டர். “தாயே ! எங்கள் குறை தீர்க்க நீ மறுத்தாலும், எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தாலும், உனக்கே பணி செய்வோம் ! உன்னையே வாழ்த்தி, வாழ்நாளைக்கழிப்போம்” என்று சரணாகதியைத் தெரிவிக்கிற மந்திரம் இது !

1008 போற்றி மலர்கள் விளக்க உரை நூல் பக்கம் -245 + 246 + 247

]]>