எதற்கெம்மை படைத்தனை
இடருறும்போ 
தணைத்தனை…
சிதறாதெமை சேர்த்தனை..
சிறகெனநீ இருந்தனை…
உதறிடாதுள நிலையினை.
உணர்ந்தபத இறையனே..
பதறவிடா வெள்ளரி..
பழவீடெமெக் கருளனே!…
அய்யா…
மருவூர் வாழ்..
மகாதேவா….

மருந்தாலும் அன்பாலும்
மாறா பழவினை..
இருந்தாலே என்செய்வேன்
விழிஒளி எரிஇனி!
அருந்தவம் தொண்டுதுதியு
ஆற்றா வயதினி..
தரும்வழியு மனமறக்கும்
தடுமாறுந் நிலைசனி..
பருந்தாகி வந்தெமை..
பற்றியருள் பரமனே..!
?
….சபா ஸ்ரீமுஷ்ணம். ..