ஆதிபராசக்தியம்மா!

எடுப்பு

ஆதிபரா சத்தியம்மா ஓம்சத்தியே! – நீ அண்டவெளிப் பாதையினாய் ஓம்சத்தியே! (ஆதி)

தொடுப்பு

ஆதாரம் ஆறினிலும் ஓம்சத்தியே! – நீ ஆதாயம் தருபவளே! ஓம்சத்தியே! (ஆதி)

முடிப்பு

காலம் படைப்பவளே ஓம்சத்தியே! – நீ கண்ணருள் வைப்பவளே ஓம்சத்தியே! வேதம் படைத்தவளே ஓம்சத்தியே! – உள்ள வினைகள் மடிப்பவளே ஓம்சத்தியே! (ஆதி)

நீதிநெறி கோப்பவளே ஓம்சத்தியே! – மன நிம்மதியைக் காப்பவளே ஓம்சத்தியே! பாதமலர் பணிவந்தோம் ஓம்சத்தியே! – வந்து பாங்குடனே காத்தருள்வாய் ஓம்சத்தியே! (ஆதி)

கூடிப் பணியவந்தோம் ஓம்சத்தியே! கொள்கை மலரவைப்பாய் ஓம்சத்தியே! உள்ளம் மலர்ந்திடுவாய் ஓம்சத்தியே! – உவந்து ஒருவரம் அளித்திடுவாய் ஓம்சத்தியே! (ஆதி)

ஆனைமுகன் அன்னையளே ஓம் சத்தியே! -தம்பி ஆறுமுகன் நதாயவளே ஓம்சத்தியே! சிவனைப் படைத்தவளே ஓம்சத்தியே! – நீ திருமாலின் சோதரியே ஓம்சத்தியே! (ஆதி)

பங்காரை யாள்பவளே ஓம்சத்தியே- எங்கள் பாரம் தணிப்பாயம்மா ஓம்சத்தியே! வீரங் கொடுத்திடுவாய் ஓம்சத்தியே! – எங்கள் வேதனையைப் போக்கிடுவாய் ஓம்சத்தியே! (ஆதி)

பூரம் உவப்பவளே ஓம்சத்தியே! – மனப் பூரிப்பை நல்கிடுவாய் ஓம்சத்தியே! பூசம் மலர்ப்பவளே ஓம்சத்தியே! – நல்ல புண்ணியம் காத்திடுவாய் ஓம்சத்தியே! (ஆதி)

நவராத்திரி நாயகியே ஓம்சத்தியே – எமக்கு நல்லருள் புரிந்திடுவாய் ஓம்சத்தியே! அவங்கள் குறைந்திடுவாய் ஓம்சத்தியே! – எங்கள் ஆணவம் போக்கிடுவாய் ஓம்சத்தியே! (ஆதி)

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 7 (1982) பக்கம்: 40

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here