நம் அறிவாற்றலுக்கு எட்டாத புலப்படாத தேவ ரகசியங்கள் உண்டு ஆன்மிக ரகசியங்கள் உண்டு அத்தகைய ரகசியங்களை மறைப்பவள் அன்னை, . தான் ஆதிசக்தியாகவும் பராசக்தியாகவும் பல்வேறு அவதாரங்களை எடுப்பவள் அன்னை அதனைப் பக்குவம் உள்ள ஒரு சிலர்க்கே வெளிப்படுத்தி மற்றைய எல்லோர்க்கும் மறைத்து விடுவது அவள்திருவுள்ளம், அது கருதியே ஓம் சரித்திரம் மறைத்தாய் போற்றி ஒம் என்ற மந்திரம் அவளைப் போற்றுகிறது,

மனிதர்களின் அறிவுத் தரத்தில் வேறுபாடு உண்டு பண்புகளில் வேறுபாடு உண்டு அவரவர் மனப்பக்குவத்தில் வேறுபாடு உண்டு எனவே தன் தெய்வ இருப்பை அவள் மற்றவர்க்குப் புலப்படுத்துவதிலும் வேறுபாடு உண்டு,

நல்வினைப்பேறும் திருவருள் துணையும் இருந்தால் தவிர இவளை எல்லோரும் வந்து பற்றிக் கொள்ள முடிவதில்லை,

மண்ணிலே விண்ணிலே என்னிலே உன் நிலை மதித்து நான் அறிய வேண்டும்,
வேண்டுதற்கூறு

எல்லாவற்றையும் கடந்து நிற்பது அனைத்துப் பொருள்களின் உள்ளும் ஊடுருவியிருப்பது எதுவோ அதனையே பராசக்தி என்பர்,

எனக்குள்ளேயும் நீ, நிலைப் பெற்றிருக்கிறாய் என்பதை நான் அனுபவத்தில் அறிந்து உணர வேண்டும் நீ ஆறு ஆதாரச் சக்கரங்களிலும் அதன் மேலும் உச்சியிலும் ஆன்மாவாகவும் எங்களுக்குள்ளேயே இருப்பதாகச் சித்தர்கள் பாடுகிறார்கள், அதை எனக்கு அனுபவத்தில் உணர்த்தி அருள்பாலிக்க வேண்டும் என்ற வேண்டுதலையே,
“என்னிலே உன் நிலை மதித்து நான் அறிய வேண்டும் என்னும் வரிகள் உணர்த்துகின்றன…