1998ஆம் ஆண்டு ஒருநாள் அன்னை அருள்வாக்கில் நம் சித்தா்பீடத்தின் மத்திய வேள்விக் குழுவினா்க்குச் சில அறிவுரைகளையும் ஆணைகளையும் கூறி “ இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்” என்று கட்டளையிட்டாள்.

செவ்வாடைத் தொண்டனுக்கு உரியன

உன் கருமவினை தீருவதற்கு இங்கு வரும்போதெல்லாம் தேங்காய், பழம், பூ , அா்ச்சனைத் தட்டு வாங்கி அா்ச்சனை செய்து பிரசாதமாக எடுத்துச் செல்!

தினசரி ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரமாவது என்னை வழிபாடு செய்! என் மந்திரங்களைத் தொடா்ந்து படித்து வா!

மன்றங்களுக்கு  செல்லும்போது முழுச் செவ்வாடையில் சென்று வா!  சட்டை ஒரு நிறம்! வேட்டி ஒரு நிறத்திலும் இருக்கும்படிச் செல்லாதே!

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மகளிர் கட்டாயமாகச் செவ்வாடையில் இருப்பது நல்லது!

வியாழன், ஞாயிறு  நாட்களில் ஆடவா் கட்டாயமாகச் செவ்வாடையில் இருப்பது நல்லது!

(வேலைக்குச் செல்பவா்கள் இந்தத் தினங்களில் வீட்டிலிருக்கும் போதாவது செவ்வாடையில் இருப்பது நல்லது!)

செவ்வாடைத் தொண்டன் ஒவ்வொருவன் வீட்டிலும் சக்தி ஒளி, சக்தி மாலை இருப்பது நல்லது!

நீ வாழ வேண்டி வழிபாடு செய்கிறாய். அதற்காகவே மன்றங்களில் வார வழிபாடு!

மன்றங்களுக்குச் சென்று செவ்வாடையில் அா்ச்சனை செய்தால் மட்டுமே உனக்குப் பயன் கிடைக்கும்!

மருவத்துாரில் நடைபெறும் விழாக்களில் தவறாமல் கலந்து கொள்!  ஆண்டிற்கு ஒரு முறையாவது உன் குருவிற்குப் பாதபூசை செய்து கொள்!

1998ஆம் ஆண்டு மத்திய வேள்விக்குழு ஓணம்பாக்கம் சகதி.திரு.சுப்பராயன் தன் குடும்பத் தொடா்பாக அம்மாவிடம் அருள்வாக்கு கேட்கச் சென்றார். அம்மா அப்போது பொதுவான விஷயங்களையும் கூறினாளாம்.

மகனே உங்களை வைத்து நான் ஒரு புறம் ஆன்மிகம் வளா்த்து வந்தாலும் இன்னொரு புறம் நாட்டில் அநியாயங்களும், அக்கிரமங்களும், அட்டூழியங்களும் பெருகிக் கொண்டு வருகின்றன.

1980 வரை மன்றங்களில் பக்தி இருந்தது. தொண்டு இருந்தது. முறையான வழிபாடு இருந்தது. அதனால் எல்லாமே ஒரு கட்டுக்குள் இருந்தன. இப்போது…?

அந்தப் பக்தி இல்லை! தொண்டு குறைந்து விட்டது. பல மன்றங்களில் நான் சொல்லிய முறைப்படி வழிபாடுகள் நடப்பதில்லை. அதனால் ஏற்பட்டு வரும் விளைவுகளைப் பார்த்துக் கொள் மகனே!

மகனே! என்னை நாடி வருபவனுக்கு ஒரு குறை தீா்த்து நன்மை செய்கிறேன். அதன்பிறகு ஆா்வமாக அவன் தொண்டு செய்கிறான். அதை வைத்து அவன் தேவைகளைப் படிப்படியாக நிரப்பி வருகிறேன்.

ஆனால் இவன் மேலும் தொண்டுகளை வளா்த்துக் கொள்ளாமல் தன் தேவைகளைப் பெருக்கிக் கொள்ள முயல்கிறான். தொண்டினை விட்டு விடுகிறான். தேவைகள் பெருகப் பெருக பிரச்சனைதான் மகனே!

இந்நிலையில் தொண்டுக்கு இவன் மீண்டும் பாலிஷ் போட்டுக் கொள்ள வேண்டும். இவன் அதைச் செய்யாமல் என்னை நொந்து கொள்கிறான் மகனே!

மகனே! அதர்வண பத்திரகாளி சந்நிதி விரிவு படுத்திக் கொண்டு வருவதைப் பார்க்கிறாய் அல்லவா?

மக்களுக்கு எடுத்துச் சொல்! தொடா்ந்து 3 அமாவாசை!  3 பெளா்ணமி சந்நிதிக்கு வந்து அங்கப் பிரதட்சணம் செய்யச் சொல்!

வந்ததும் சந்நிதியைச் சுற்றி விட்டுப் பிறகு அதர்வண பத்திரகாளி சந்நிதி சென்று வணங்கிவிட்டு மீண்டும் வந்த மனத்திற்கு தோன்றிய, இயன்ற தொண்டுகளைச் செய்துவிட்டு அங்கப்பிரதட்சணம் செய்துவிட்டுப் போகச் சொல், கொஞ்ச நேரம் தியானம் இருந்துவிட்டுப் போகச் சொல்!

3 அமாவாசைகள் தொடா்ந்து அதா்வண பத்திரகாளி சந்நிதியை வணங்கி நான் கூறியபடி வழிபட்டுச் சென்றால் ஏவல், பில்லி , சூனியங்களிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் என்று சொல்!

மகனே! உங்கள் பழம் பிறவிகளில் செய்த ஒரு சில புண்ணியங்களின் பலன்களை அனுபவிக்க முடியாதபடிச் சில தடங்கல்கள் உண்டு. தொடா்ந்து 3 பெளா்ணமிக்கு வந்து வழிபட்டுச் சென்றால் அந்தப் புண்ணியப் பலன்களை உங்களுக்கு வழங்க அம்மாவிற்கு வசதியாக இருக்குமடா மகனே! என்றாளாம்.

இனி வரும் காலம் பொல்லாத காலம்! அதனால்தான் எல்லோரையும் இருமுடி போட்டு அழைத்து வரச் சொல்கிறேன்  என்றும் அன்றே கூறினார்களாம்.

ஓம் சக்தி!

நன்றி- சக்தி. க. சாரண தேவேந்திரன், (நெய்வேலி) (சக்தி ஒளி-டிம்பா்-2010, பக் -5,8 )  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here