எதிலும் மனம் 
லயிக்கவில்லை..
இதயம் வலி..
பொறுக்கவில்லை…
உண்ண முடியவில்லை..
உறங்க முடியவில்லை..
உனக்கு உடல்நிலையில். .
சிறிது தொய்வு என்றால்..
எண்ண இயலவில்லை. .
என்ன விளையாட்டு. ???

சித்தர்கள் தலைவனாய்…
சித்துக்களின் 
முதல்வனாய்…
எத்தனை உயிர்
காப்பாற்றி…
எத்தனை நோய் சீராக்கி….

பித்தங்களை நேராக்கி…
பிரிந்த குடும்பம் 
ஒன்றாக்கி. …
அளப்பரியா அற்புதங்கள். .
அனுதினமும் செய்திட்டு…

மகிழ்வித்த மகானே…

எங்கள். ..
ஆரோக்கியம். ..அமைதி…
மகிழ்வு..உயிர். .
அனைத்தும் நீ..
புதுபித்தது…!

அனைத்தையும் 
எடுத்துக்கொண்டு
ஐயனே..முன்புபோல்..

மலரடி மகிழ்ச்சி 
மறுபடியும் தருவாய்….?

உன்னை காணாது…
உண்ண முடியவில்லை …
உறங்க முடியவில்லை. ..

(எங்கள் கண்ணே..
உன்மேல் பட்டிருக்கும்!)