பாகம் -2

கடலில் அலைகள் எழுகின்றன. அங்கே நீரிலேயே நீர் எழுவதைக் காண்கின்றோம். அவ்வி தமே மனத்தை மனத்தாலேயே அறியவேண்டும். சிந்தனை அலைகள் மனத்தில் எழுதல் வேண்டும். தன்னைத்தானே ஊகித் துணர்தல் வேண்டும். நமது பிரதிவிம்பத்தை நம்முள்ளே காணல் வேண்டும். உலகிலுள்ள பல்வேறு மாயா சக்திகளைக் கண்டறிந்து வெல்லல் வேண்டும். மனம் மனனம் செய்தல் வேண்டும். அறிந்தவற்றிலிருந்து அறியாதவைகளைச் சிந்தித்து அறிதல் வேண்டும். மனத்துடன் ஒன்றி ணைந்து புதுப் புதுக் கற்பனைகளை உருவாக்க வேண்டும். தீர்க்க தரிசனத்தால் வாழ்வின் பயனையும், முடிவையும் அறிந்து, அவற்றை அடைதல் வேண்டும். நிலையற்ற உலக மாயையை விடுத்து என்றும் நிலைத்திருக்கும் உண்மைச் சக்தியை உணர்தல் வேண்டும். மனம் மனத்துடன் கலந்து கரைந்திட வேண்டும்.

ஓடும் மாட்டை இழுத்து வந்து கட்டுத்தறியில் கட்டிப்பழக்கினால் நாளடைவில் அந்த மாடு தானே கட்டுத்திறியில் வந்து வசப்படுவது போல், ஓடும் மனத்தை இலட்சியத்தில் தினந்தோறும் குறித்த வேளைகளில் இழுத்து வைத்துப் பழக்கினால் சிறிது காலத்தில் அது இலட்சியத்தில் தானே வந்து லயிக்கும். இன்பத்தைத் தேடிப் புறத்தே அலையும் மனம், இருதயத்தில் உள்ள அமைதியையும், இன்பத்தையும் சிறுது உணரத் தொடங்கிவிட்டால், அதுவே எவ்வித முயற்சியின்றி இலட்சியத்தை நாடி வந்து முடிவில் லயமடையும்.

”அலையும் மனத்தை அகத்தடக்குமவனே சரியைக் கடந்தவனாம் அலையும் மனத்தை அகத்தடக்குமவனே கிரிகை முடித்தோனாம் அலையும் மனத்தை அகத்தடக்குமவனே யோக தற்பரனாம் அலையும் மனத்தை அகத்தடக்குமவனே ஞானி அதிசூரன்” என்கின்றது நிஷ்டானுபதி.

கைகால்களை அசைக்காமலும், வாயினால் பேசாமலும், காதினால் கேளாமலும், கண்ணினால் காணாமலும், மூக்கினால் முகராமலும் இருந்துவிட்டாலும், மனம் உள்ளளே வேலை செய்து கொண்டிருக்கிறது. அது சும்மா இருப்பதில்லை. ஓர் யானையைப் பாகன் கட்டி இடத்தில் நிறுத்தி விடுகின்றான். ஆனாலும், யானை துதிக்கையை மட்டும் பல பக்கங்களிலும் வீசிக்கொண்டேயிருக்கும். அதற்காக பாகன் என்ன செய்கிறானென்றால், துதிக்கையில் ஒரு சங்கிலிளைக் கொடுத்து விடுகிறான். அதனால் ஆட்டம் நின்றுவிடுகிறது. அதேபோன்று பலவிஷயங்களிலும் பாய்ந்து திரியும் மனத்தையும் தெய்வ சிந்தனையில் நிறுத்தும் போது நிலை பெற்றுவிடுகிறது. சீவன் சிவனில் கலந்து விடுகிறது. சும்மா இருக்கிற நிலை ஏற்பட்டு விடுகிறது. மனம் தூய்மையும், அமைதியும்

‘’மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே” என்கிறார் அகத்தியர் ஞானப் பாடலில்.

மனஞ் செயல், மனச் சக்தி, பணச்சாரம் என்று மூன்று வகையில் பாகுபாடு செய்து மனத்தை அறிதல் வேண்டும். இறைவனை அறிய, அடைய மனமே மார்க்கம், வழிகாட்டி நடுவர், புலப்படுத்தும் கண்ணாடி உள்ளொளி இறைவனை உருவகப்படுத்தவும், சிந்திக்கவும், உதவுகிறது. பரிசுத்தமான ஆத்மசக்தி உள்ளொளி யால் புலப்படுகிறது. மனம் வெளிப் படல், வியாபித்தல், பங்கேற்றல் ஆகிய தன்மைகளால் மலர்ச்சி யுறுகிறது. தன்னைத்தானே அலசிப் பார்த்து, சிந்தித்து, தெளிவுறுதல் வேண்டும்.

சித்தாநந்தா உன்ற சீடர் தம் குருவிடம் ததான் பலகாலம் மந்திர செபம் செய்தும் ஒரு தோற்றமும், ஒரு கனவுக் காட்சியும் தனக்குத் தோன்றவில்லையேயென அங்கலாய்த்தார். அதனைக்கேட்ட குரு ‘’உனக்குக் கனவுதானே ஏற்பட வேண்டும்? சரி, இன்னும் ஒரு வாரத்தில் அது நிகழும்.” என ஆறுதல் கூறினார். அதன்படி கனவு ஒன்று கண்டார் சித்தாநந்தா. தான் இறப்பதாக கனவு கண்டார். உடனே மனம் கலங்கி குருவை நினைத்துப் பிராத்தனை செய்தார். குரு தோன்றினார். அவரிடம் தான் இறப்பதாய்க் கனவு கண்டதைக் கூறி வருந்தினார். ‘‘கவலை வேண்டாம். இதோ இக்கதவைத் திறந்து செல், உயிர்பெறுவாய்” என்றார் குரு. அதன்படி சீடர் அக்கதவை திறந்து சென்றார். உயிர் பெற்றார். அங்கே அனைவரும் நன்கு அறிமுகம் ஆனவராய்க் காணப்பட்னர். எனவே, அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் ஒரே ஒரு ஆள் மட்டும் தனக்கு ஒவ்வாத, அருவருப்பு அளிப்பவராய்க் காட்சி அளித்தார். உடனே அவரைக் பற்றிக்குருவிடம் விசாரித்தார். அதுகேட்டு குரு புன்னகைபுரிந்து, ‘’அந்த அன்னியன் வேறு யாருமல்ல, நீயேதான். அது தான் உனது உண்மையான தோற்றம். பிறருடன் பழகுவது உனக்கு இன்பமாய் இருக்கிறது. ஆனால் உன்னுடன் பழகுவது உனக்கே அருவருப்பாய் உள்ளது. என்ன விந்தை! இநத உணர்வே உன்னை சிந்திக்கச் செய்து உண்மையை உணர்த்தும். தன்னை அறிவதால் தான் மனமலர்ச்சி ஏற்படும். அதனை காலமே அறிவுறுத்தும்; காலம் ஒரு பல்பொருள் அங்காடி அல்ல் கேட்டதை நல்கும் மந்திரக் கோல் அல்ல. நாம் தான் மனத்தால் காலத்தை வென்று கட்டுப்படுத்த வேண்டும். ஐம்புலன்களும் அடங்காது திரிந்தால் துக்கமும், சோகமுமே ஏற்படும். உள்ளொளியை உணர்ந்து உவகை கொள்ள விடாது. ஆகவே, புலனை அடக்கி உன் நாட்டம் கொண்டு உள்ளொளி காணும் கலையைப் பெறவேண்டும். அதனை மிகக் கவனத்தோடும், கனிவோடும் முயன்று அடைய வேண்டும். அதுவே மனத்தின் செயல், சாரம், சக்தியாவும்.” எனறு அறிவுரை வழங்கினார்.

இறைவனைக் கண்டறிந்து அடையப் புத்தியின் உதவி தேவை. மனத்தால் புத்தியை அறிதல் வேண்டும். தீவிர நடவடிக்கையால் மனம் சிதறிப் போகிறது. கட்டுப்படுவ தில்லை. மூடமாய்ச் சில சமயம் என்ன நடக்கிறதென உணராமலும் இருக்கிறது. சில சமயம் தன்னையே மறந்து மகிழ்ச்சியிலும், இன்பத்திலும் நினைக்கிறது. இந்நிலையில் மனத்தால் உண்மையை உணர்ந்து, தன்னை அறியமுடியாது. அஃதின்றி கட்டுக்கு அடங்கிய மனத்தால்தான் யாவும் உணரமடியும். காட்டில் யானையை எவ்விதம் பிடித்து அடக்குகின்றனர். பள்ளம் தோண்டி அதில் விழச்செய்து, பின் பட்டினி போட்டு பள்ளத்திலிருந்து அகற்றி, பழகிய யானையைக் கொண்டு பயிற்சி அளித்து, சிறுகச் சிறுக உணவு கொடுத்துத் தேற்றி, நாளடைவில் அடக்குகின்றனர். அதேபோல் மனத்தையும் கையாண்டு, அடக்கிப் பயனடையச் செய்தல் வேண்டும்.

புத்தியைப் பயன்படுத்தி மனத்தின் மூலம் அறிந்தால்தான் நாம் யாரென்று விளங்கும். மனத்தின் சாரம் புரியும். கடல், கடல்மீது அலைகள், கடலினுள் நீரோட்டம் இருப்பது போல், மனம், புலன்கள் வழி மனம் அலைதல், உள்ளொளி கண்டறிந்து ஆத்ம சக்தி பொறல் ஆகிய தன்மைகள் உள்ளன. இறுதியான உள்ளொளி கண்டறிந்து, மனம் ஆன்மாவில் கலத்தல் வேண்டும். நிரந்தர நிலை பெறல் வேண்டும். எல்லையற்ற பரம் பொருளின் தன்மையை உணர்ந்து, தன்னை அர்ப்பணித்தல் வேண்டும். தான் அழிந்து, தான் என்ற அகம் அழிந்து மனத்துடன் மனம்கரைந்து, முழு நிம்மதி அடைதல் வேண்டும். மனம் அறிவின் கருவூலம். மனம் தெளிவுற்றால் தீர்க்கதரிசனம் கிட்டும். மனம் சக்தி பெருகி யாவும் மனக்கண்முன் தோன்றும். சிலர் மன எழுச்சியும், சக்தியும் பெறத் தவறாகப் போதைப் பொருள்களையும், ஆவி சக்திகளையும், பில்லி சூனியக் கண்கட்டு வித்தைகளையும் கையாளுகின்றனர். அவைகளால் நன்மையைவிட தீமைகளே அதிகம் விளையும். அவற்றை விடுத்து இறைவனிடம் அனபும், பக்தியும் செலுத்துவதே நன்மை பயக்குமென ஆன்றோர் கூறுவர்.

கொல்லர் ஒரு கையால் இரும்பை பழுக்கக் காய்ச்சுகிறார். மறுகையால் சம்மட்டி கொண்டு உருகிய இரும்பை அடித்து உருவாக்குகிறார். அந்த வேலையைத் தான் மனம் செய்தல் வேண்டும். மன வைராக்கியத்தால் காய்ச்சி, மன அப்பியாசத்தால் அடித்து, உண்மையின் உருவைத் தொpதல் வேண்டும். மனத்தை மனத்தால் காணவேண்டும். அதற்குத் தெய்வ சிந்தனை கைகொடுத்தும் உதவும்.

‘‘ தனைத்தான் அடக்கல் பேசாமை தன்னுள்ளத்தின் பரிசுத்தம் மனத்தின் அமைதி பொறுமையிலை மனத்தின் தப சென்றோதுவரே”

என்கிறது கீதை.

தன்னடக்கம், தற்புகழ்ச்சி, பேசாமை, உள்ளத் தூய்மை, மன அமைதி, சினமற்ற பொறுமை ஆகிய நற்பண்புளை மேற்கொள்ளலே மனத்தில் தபசாகும். மனத்தைத் தன் வயமாக்கிய ஒருவன் விருப்பு வெறுப்பின்றி ஐம்புலன் களால் எதை அனுபவித்தாலும்அவன் அமைதியும் சாந்தமுமே அடைவான். ‘‘மனவசியமானவனுக்கு ஜீவ வசியமாகும். ஜீவவசியமானவனுக்கு ஜகவசியமாகும். ஜகவசிய மானவனுக்குப் பரவசியமாகும்”. என்ற எனது தந்தையார் தெய்வத் திரு. பொன்னையசுவாமிகள் அருளினார்கள் மேலும், ‘’மனம் எங்கிருந்து தோன்றுகின்றதோ அங்கு ஒடுக்கப் படுவதே யோகம்”, என்பார்கள். அவ்வாறே கீதையும் கூறுகிறது. தாயுமானரும் கூறுகிறார்.

‘’சிந்தை பிறந்ததும் ஆங்கே – அந்தச் சிந்தை யிறந்து தெளிந்ததும் ஆங்கே எந்த நிலைகளும் ஆங்கே -கண்ட யான் தான் இரண்டற்றிருந்ததும் ஆங்கே”.

மனித குலத்தின் நடைமுறையை விளக்கி, வாழ்க்கைக்கு நல்வழிகாட்ட வந்த நூல் கீதை. முதலில் ‘கர்மயோகம்” பற்றி விளக்குகிறது. கர்மாவில் பலவகை உண்டு. விரும்பத் தக்கது, விரும்பத்தகாதது எனப் பலவாகும்.ஒருவருக்கு விரும்பத்தக்க செயலாகத் தெரிவது. அதே சமயத்தில் மற்றொருவருக்கு விரும்பத் தகாததாகத் தெரிகிறது. காரணம் மனத்தின் எண்ணங்களைப் பொறுத்ததே அவ்வுணர்வு. உதாரண மாக, ஒரு நண்பன் அன்புடன் நம்மை ஓங்கி அடித்தால் அது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது ஆனால் அதே அடியை நமது எதிரி கொடுத்தால் நமக்குக் கோபத்தையும், ஆத்திரத் தையும் ஊட்டுகிறது. அடி ஒன்றுதான். ஆனால், ஒன்று இனிமையாகவும், மற்றொன்று வழிமையாகவும் இருக்கிறது. இவ்வாறு மாறுபடும் மன ஓட்டத்தை நிலைப்படுத்தி; அனைத்தையும், நடுநிலையோடு பார்க்கும் கண்ணோட்டத்தை உருவாக்க வேண்டும். இந்தச் சலன மற்ற மனநிலையை உருவாக்கும் கலையே கர்மயோக விஞ்ஞான மாகும் இதை எப்படி உருவாக்குவது? மன ஓட்டத்தை எப்படி உயர்த்துவது? இதற்கு விடைதான் யோகம், மனத்தை நடுநிலையில் கட்டுப்படுத்துவதே, என்கிறது கீதை.

அடுத்து, மனத்தின் காமம், கோபம், பொறாமை, அன்பு போன்ற உணர்ச்சிகளை விளக்குவது கீதை. நமது உணர்ச்சிகளை நல்லவையாக, சிறந்தவையாக மாற்றுவதே பக்தி யோகம். ‘’காமத்தால் இந்திரன் கலக்க மெய்தினான்; காமத்தால் இராவணன் கருத்தழிந்தனன் காமத்தால் கீசகள் கவலையுற்றனன்; காமத்தால் இறந் தவர் கணக்கில்லார்களே. கோபத்தாற் கௌசிகன் தவத்தைக் கொட்டினான்; கோபத்தால் நருடனும் கோலமாறினான்; கோபத்தால் இறந்தவர் கோடி கோடியே, கோபமே குட்டநோய்; கோபமே தாயையுங் கொல்லும் திண்படை; கோபமே தவத்தினைக் குலைக்கும் பேயரோ.”

‘‘சினம் காக்க” என்றும், செல்லா விடத்துச் சினம் தீது. என்றும் வள்ளுவர் கூறுகிறார். ‘‘சினமெனும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே – யாவும் சித்தியென்றே நினையேடா தாண்டவக் கோனே”

எனறு பாடுகின்றார் இடைக்காட்டுச் சித்தர். எனவே, மனத்தின் கண் இத்தகைய தீய உணர்ச்சிகளைப் போக்கி, நல்ல உணர்ச்சிகளைப் பெருக்கி, செயல், பக்தி, அறிவு ஆகிய மூன்றையும் திறமையாகச் சமநிலைப் படுத்தி உயர்ந்து விளங்க வேண்டும்.

‘‘காமம், கோபம், பொறாமை ஆகிய குணங்கள் மனத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அவற்றை விலக்கி மனத்தை நாம் கட்டுப்படுத்துவது எப்படி? மனம் எனக்குள் இருக்கிறது. ஆனால் நான் மனம் இல்லை. நான் வேறு, மனம்வேறு என்ற பரிபக்குவம் பெற்றுவிட்டால் மனத்தைக் கட்டுப் படுத்த இயலும்” என்கிறார். சின்மயானந்த தமது கீதை உரையில். குரங்குக்குணம் கொண்ட மனத்தைக் கட்டுப்படுத்தி, காமம் போக்கி, கோபம் ஒழித்து, பொறாமை நீக்கி, அன்பு பூண்டு, பரந்த நோக்கோடு கொண்டது கொடுத்து, மனச் சக்கி உணர்ந்து, பக்தி செலுத்தி, உள்ளொளி நாடி, சான்றோர்வாக்குப் படி நடந்து, அடக்கம் பெற்றால், அனவொடுக்கம் உண்டாகும். இச் சாதனை கூடக்கூட மன உருக்கம் விளையும். உருக்கம் உண்டானதும், மாசுகள் மறைந்து, மனத்தூய்மை வளர்த்து, மன அமைதியும், சாந்தியும் பெற்று, இறுதியில் முக்தியும் அடையலாம்.

ஓம் சக்தி

நன்றி சக்தி ஒளி

விளக்கு -2 சுடர் -1

பக்கம் : 17-21

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here