நான் கடந்த 10 வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். நான் வேண்டாத தெய்வம் இல்லை. பார்க்காத டாக்டர்கள் இல்லை. சில சமயங்களில் மனம் வெறுத்துப் போனேன். எத்தனை தெய்வங்களை வேண்டியும் பயனே இல்லையே……. என்று சலித்துக் கொண்டேன்.

        அந்தச் சமயத்தில்தான் மருவத்தூருக்கு சக்திமாலை அணிந்து இருமுடி எடுத்துச் சென்றால் குறைதீரும் என்று எங்கள் ஊர் ஆதிபராசக்தி மன்றத்தார் சொன்னார்கள். அவ்வாறே எங்கள் மன்றத்தின் மூலமாக மாலையணிந்து சென்றேன்.

        ஒவ்வொரு வருடமும் நம்பிக்கையோடு சென்றேன். காலம் கடந்து கொண்டே வந்தது. ஏன் எனக்கு மட்டும் சோதனையைக் கொடுக்கிறாய் ! என்று அம்மாவிடம் கண்ணீர் மல்க வேண்டுவேன். அம்மா அருளால் என் கண்ணீருக்குப் பலன் கிடைத்தது. நான் கருவுற்றேன்.

        கருவுற்ற காலத்தில் இரண்டாம் மாதத்தில் உதிரப் போக்கு ஏற்பட்டது. இது என்ன சோதனை ? 10 வருடம் கழித்துக் கிடைத்த பாக்கியத்துக்கு மீண்டும் சோதனையா ? என்று என் குடும்பத்தார் அனைவரும் கண்ணீர் விட்டனர்.

        டாக்டரிடம் சென்று காட்டியபொழுது இது சாதாரண உதிரப் போக்குத் தான், கவலை வேண்டாம் என்றார்கள். ஆயினும் ஆறுமாதம் அவ்வப்பொழுது பட்டுக் கொண்டே இருந்தது.

        நான் மந்திரநூலை எடுத்து அம்மாவின் மந்திரங்களை அடிக்கடி படித்துக் கொண்டே இருந்தேன். ‘அம்மா ! நீதான் எனக்குத் துணை’ என்று மன்றாடிக் கேட்பேன்.

        பிரசவ காலம் நெருங்கியது. ஆபரேக்ஷன் செய்துதான் குழந்தையை எடுக்க வேண்டும் என்றார்கள்.                 அம்மா அருளால் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இரண்டும் ஆண் குழந்தைகள் !

        நான் அடைந்த சந்தோக்ஷத்திற்கு அளவே இல்லை.

நன்றி,

சக்தி. ரா. பானுமதி

சக்தி ஒளி ஜனவரி 2009, பக்கம் – 63.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here