விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும்

பாகம் – 3

அளப்பதற்கரிய தன்மை என்பது யாது? இற்றை நாள் விஞ்ஞானம் அணுவின் பரிமாண, எடை அளவுகளையும், அண்ட கோளத்தின் பல பகுதிகளின் எடை முதலியவற்றையுங்கூட ஓரளவு துல்லியமாக அளந்து கணக்கிட்டுக் கூற முற்படுகின்றதே! அப்படி இருக்க அளப்பதற்கரிய தன்மை என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? என்று கேட்கப்படலாம். அளவு என்பது வெறும் எண்ணிக்கை அன்று. எந்த எண்ணிக்கையாக இருப்பினும் அது தம்முடைய மனத்தளவில் பதிந்து கருத்தில் ஒரு வடிவத்தைத் தரல் வேண்டும். 10 என்ற எண்ணை எழுதினால் அது தம் கருத்தில் தங்குகிறது. 10 க்குப் பின் 26 பூஜ்யங்களை எழுதினால் அதைப் படிக்க முடியாது போவதுடன் நம் மனத்தில் எவ்வித வடிவத்தையும் ஏற்படுத்துவதில்லை. இந்த அண்டத்தின் அரை விட்டம் (Radius) 35 கோடி ஒளி வருடங்களாகும்.

ஒரு ஒளி வருடம் என்பது என்ன தெரியுமா? ஒளி, மின்சாரம் இரண்டும் ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் தூரம் செல்லுமாம். அப்படியானால் 1 நிமிடத்திற்கும் 1 மணிக்கும் 24 மணி கொண்ட ஒரு நாளுக்கும் 385 நாள் கொண்ட ஒரு வருடத்திற்கும் அந்த ஒளி எவ்வளவு தூரம் செல்லும்? 1,86,000 x 60 x 60 x 24 x 365 மைல்கள். இதைப் பெருக்கி வரும் தொகையை ஓர் ஒளி வருடம் என்று கூறுகிறோம். ஓர் ஒளி வருடத்திற்கு இவ்வளவு மைல்கள் என்றால் 35 கோடி ஒளி வருடங்கட்கு எவ்வளவு மைல்கள் தூரம் இருக்கும். அதாவது 210 என்று எழுதி அதனை அடுத்து 21 பூஜ்யங்கள் போட்டுப் படிக்க முடிந்தால் அதுதான் இன்றைய அண்டத்தின் அரை விட்டம். இதைப் படித்துப் புரிந்துகொள்ள முடியாது என்பதனைத்தான் மணிவாசகர் அளப்பருத்தன்மை என்று கூறினார். இனி அடுத்து, அவர் கூறும் செய்திதான் பெருவியப்பை தருகிறது.

அந்தச் செய்தி யாது? நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன என்றல்லவா மெய்ஞ்ஞானி கூறுகிறார். அதாவது இந்த அண்டத்தில் சூரியமண்டலம் போன்ற கோடிக்கணக்கான பெருமண்டலங்கள் உள்ளன என்றும் அவை அப்படியே நில்லாமல் இந்த அண்ட வெளியில் விரிந்துக்கொண்டே செல்கின்றன என்றும் கூறுகிறார். எட்டாம் நூற்றாண்டை அடுத்துத் தோன்றிய ஒரு மெய்ஞ்ஞானி இருபதாம் நூற்றாண்டில் மேனாட்டார் கண்டு கூறியுள்ள விஞ்ஞானப் புதுமைகளை மிக இலட்சியமாகத் தம் பாடலில் கூறிச் செல்கிறார். இப் பெருமான் போகிறபோக்கில் கூறியுள்ள இரண்டு விஞ்ஞானப் புதுமைகளை விரித்துக்கூற இன்று நூற்றுக் கணக்கான வானியல், கணித நூல்கள் தோன்றியுள்ளன. ஆம்! எட்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் தமிழராகப் பிறந்த ஒரு மெய்ஞ்ஞானி கூறிய இரண்டு விஞ்ஞானப் புதுமைகளை விளக்கி நிரூபிக்க இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகட்குப் பல புத்தகங்கள் எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது! இதனுடைய விரிவை அடுத்துக் காணலாம்.

n

சென்ற இதழில் குறிக்கப்பெற்ற பாடலில் காணப்பெறும் சில விஞ்ஞான உண்மைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவை தற்கால விஞ்ஞானப் புதுமைகளுடன் எவ்வளவு ஒத்துள்ளன எனக் காண்போம். ‘‘அண்டப்பகுதி” என்று பெருமான் கூறியதை இற்றை நாளில் “Universe” என்று கூறுகிறோம். அதில் உள்ள ‘‘உண்டைப் பிறக்கம்” என்பதனை “Galaxics” என்று கூறுகிறோம். ‘‘நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன” என்பதனை ‘Expanding Universe’ என்கிறோம். ‘‘அண்டமாகிய பெரும்பகுதியில் நூறு கோடியின் மேலாக உண்டைகள் பெருக்க முற்று விரிந்தன” என்கிறார் பெருமான் பக்தர் ஒருவர் பக்தி மேலீட்டால் கண்ணை மூடிக்கொண்டு ‘‘அளந்தவை” யல்ல இவை என்பதை நன்கு மனதில் பதித்துக்கொண்டு கீழ்வரும் விஞ்ஞானிகள் கூறும் கூற்றைச் சற்றுக் காண வேண்டும்.

ஐன்ஸ்டினின் கணக்கின்படி இவ்வண்டத்தின் அரைவிட்டம் (Radius) 35 கோடி ஒளி வருடங்கள், இதனை நாமறிந்த மைல் கணக்கில் 210 ன் பிறகு 21 பூஜ்யங்கள் எழுத வேண்டும். அதனைப் படிக்கக் கூடியவர்கள் படித்துப் பார்க்கட்டும். ஒரு வினாடிக்கு 185,000 மைல்கள் வேகம் செல்லக் கூடிய சூரிய ஒளியானது அண்டத்தில் ஓரிடத்தில் புறப்பட்டு அதனைச் சுற்றிக்கொண்டு மீட்டும் புறப்பட்ட இடத்திற்கு வர 200 கோடி மானிட வருடங்கள் ஆகும். மணிவாசகப் பெருமான் கூறியபடி, அண்டப்பகுதியில் உள்ள உண்டைகளின் பெருக்கம் நூறு கோடியின் மேம்பட்டன என்பதை இற்றைதாபன் வானநூலார் ஒப்புக்கொள்வது மட்டுமன்று; அவை எண்ணி மாளாதவை என்றே கூறுகிறார்கள். அடிகளும் ‘‘நூற்றொரு கோடியின் மேற்பட” என்ற சொல்லால், அவை எண்ணி மாளாதன என்ற கருத்தையே வலியுறுத்துகிறார்.

மனத்திற்கு மயக்கம் தரும் இக்கணக்கு ஒருபுறம் நிற்க, அடிகள் பாடலின் நான்காவது அடியின் கடைசிச் சொல் நம் வியப்பை இன்னும் மிகுதிப்படுத்துகிறது. அச்சொல் ‘‘விரிந்தன” என்ற ஆழமான பொருளுடைய சொல். ஏனைய நாடுகளோடு மிகுதியும் தொர்பும் உடைய தமிழர்கள் அற்றை நாளில் வான நூற் புலமையுடையவர்களாக இருந்திருப்பர் என்றே நினைய வேண்டி உளது. ‘‘கோப்பர்நிக்ஸ்” (Copernicus) உலகம் உண்மை வடிவானது என்று கூறுமுன்பே இத்தமிழர் அண்டத்தில் உலவும் உலகங்கள் அனைத்தும் உண்டை வடிவம் உடையன என்று கூறியதைக் கண்டோம். அதனிலும் பார்க்க வியப்பானதாகும். ‘‘அவ் வுண்டைகள் விரிந்தன” என்று கூறியது. இற்றை நாள் வானநூலாகும். அண்டம் விரிந்துகொண்டே செல்கிறதென்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

‘‘அண்டத்தில் அரைவிட்டம் ஒளி அலைகளைவிட வேகமாகப் பெருகிக் கொண்டே செல்லுகிறது; இன்னும் வேகமாகப் பெருக எதுவும் உண்டு. இப்பொழுதுகூட ஓரிடத்திலிருந்து புறப்பட்ட ஓர் ஒளி அலை அண்டத்தை சுற்றிவர இயலாதபடி அதன் பரிதி வட்டம் மிகுந்து கொண்டே செல்கிறது. 2 இங்குப் பேசப்பெற்ற விரிவின் வேகத்தைக் கணக்கிட்டு ஒருவாறு தருகிறார் ஐன்ஸ்டீன்.

‘‘விண்மீன் மண்டலத்தின் உள்ளே இயங்கும் தமது சூரிய மண்டலம் வினாடிக்கு 13 மைல் வேகத்திலும், இவ் விண்மீன் மண்டலம் பால் வெளிக்குள் (Milky Wey) வினாடிக்கு 200 மைல் வேகத்திலும், இப் பால்வெளி இன்னும் தூரத்துள்ள மண்டலங்களை நோக்க வினாடிக்கு 100 மைல் வேகத்திலும் போகின்றன் இவை அனைத்தும் வெவ்வேறு திசைகளில் செல்லுகின்றன என்பதே விந்தை.

‘‘அண்டத்திற்குப் பரிமாணம் என்பதில்லை; ஏன் எனில் அது விரிந்துகொண்டே செல்கிறது. சில ஆண்டுகளாகவே இவ் விரிவை விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர். விரிவு வேகத்தைக் கணக்கிட்டே அண்டத்தின் விரிவை அறிகிறோம்”

தொடரும்…

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 3 (1982) பக்கம்: 33-36

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here