வழிகாட்டி அம்மா நமக்கு வழிகாட்டி! – நம் அல்லலை நீக்குவள் அருள்கூட்டி அருள்வாக் கமுதால் தெளிவூட்டி! – நம் ஜயங்கள் போக்கிடும் பெருமாட்டி…..! தொண்டினைச் செய்திடத் துணிவூட்டி – அதைத் தொடர்ந்தே செய்யெனக் கனிவூட்டி, ஒன்றே தாயென நினைவூட்டி – நமை ஒரு குல மாக்கிடும் வழிகாட்டி! ‘அடிகளார்’  என்பவர் இங்காரு? – நம்மை nஅணைத்திடும் அன்னை பங்காரு! வடிவினில் சக்தியாய் வந்தாரு! – நம் வாழ்வினில் நிம்மதி தந்தாரு. அன்னையின் சக்தியுகம் கருவானது! – எங்கும் ஆன்மிகப் பேரலை உருவானது! பெண்மையே நன்மையென விதியானது! – அதைப் பேசிடும் தெய்வமே குருவானது!!   – சக்திக்கவிஞன்முத்துவடிவன் நகர், கோவை சக்தி ஒளி அக்டோபர் 2007 (பக்கம் 32)  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here