மின்சக்தியே பராசக்தி!

பாகம் – 3

அன்னை ஆதிபராசக்தி எல்லாமாய் இருந்தும் நம் கண்களுக்குத் தெரிவது இல்லை. மின் சக்தியையும் யாரும் கண்டதில்லை. அன்னை நன்மைகளையும் செய்கின்றாள்; தீமைகளையும் செய்கின்றாள். ஒரே நேரத்தில் இரண்டையும் செய்து விடுகின்றாள்.

அருளாக உடலில் பாய்கின்றாள்; அமைதியாகக் குடி கொள்கின்றாள்; மின்சக்தியும் அவ்விதமே உடலில் பாய்கின்றது. ஆனால் உயிரைக் குடித்து விடுகின்றது! இவ்விதம் பாயும் மின்சக்தி ஒருமுறை என் மீதும் பாய்ந்து விட்டது. ஆனால் எவ்வித ஊறும் செய்யவில்லை! பெரும் சித்தாடலைச் செய்து அன்னை என் உயிரையும் மானத்தையும் காப்பாற்றினாள்! தவறாமல் கொல்லும் இம்மின் சக்தி என்னை ஏதும் செய்யவில்லை! பராசக்தி. மின் சக்தியைக் கட்டுப்படுத்தினாளோ!

ஓர் உயர் மின் அழுத்த நிறுவனத்திற்குச் சென்று பல மணிநேரம் மின் ஆய்வு செய்த பின் பசி மயக்க நிலையில் இருந்தேன். ஓர் ஒளி சுவிட்சு போர்டை கடைசியாக ஆய்வு செய்தேன். அதனைச் சோதனைச் செய்யும் போது ஆபத்து இருக்கலாம் என்று முன்னதாகவே உணர்ந்தேன் என்றாலும் அதைச் சுட்டிக் காட்டும் போது அதில் கைபட்டுவிட்டது. பட்ட நிலையில் கல் சுவரையும் மறு கையால் தொட்டு விட்டேன் நடந்தது ஒலியும் ஒளியும் காட்சி! மின்சாரம் ‘‘பட பட”   எ ‘‘பிளாஸ்” (Flash) ஆனது! எனக்கோ எந்தவித ஆபத்தும் நேரவில்லை.

மின்சாரத்தை உணரவில்லை. மறுபடியும் சம்சாரம் நடத்த அன்னையின் அருளால் புனர்ஜென்மம் பெற்றேன்! அந்த சுவிட்சு போர்டுக்கு மின் மாற்றி மெயின் போர்டிலிருந்து ‘‘மின் சப்ளை” நேரிடையாக வந்திருந்தது. நான் இறந்திருந்தால் என்னைத் தொட்ட பலர் இறந்திருக்க நேரிட்டிருக்கும்.

மறுதினம் ஆலயம் சென்று இருந்தோம். அருள் வாக்கின் போது அன்னை என்னையும் ஓணம்பாக்கம் அய்யாசாமி அவர்களையும் கூப்பிட்டாள். மற்ற பக்தர்களையும் அழைத்தாள். பின், உணர்ச்சியுடன் கூறினாள். ‘‘இந்த மின் பாலகனைக் காப்பாற்றினேன். இவனுக்காக ஒன்பது உயிர்களையும் காப்பாற்றி உள்ளேன்” என்றாள். இந்த ஆதிபராசக்தி அன்னை. அதேபோல் காணாமற் போன மகன் தங்கியிருந்த திருவண்ணாமலை விடுதியில், அவன் அறைக்கு நேர் எதிரிலேயே, இரவு 1 மணிக்கு அறை எடுத்துத் தங்கி, தந்தையானவர் அன்னையின் பாடல் களைப்பாட, மகனையும் காட்டிக்கொடுத்த வரலாற்றையும் விளக்கினாள்.

அன்னை ஆதபராசக்தி ஒரே செயலில் பல காரியங்களைச் செய்கின்றாள். ஒருவரை ஒரு பதவியில் இருந்து வேறு பொறுப்பான பதவிக்கு மாற்றுகின்றாள். முதலிலிருந்தே அவர் திறமை வெளிப்படப் புதிய புதிய வாய்ப்பைக் கொடுக்கின்றாள். காலியான இவ்விடத்திற்கு வேறு ஒருவரைப் பதவி உயர்த்தி வைக்கின்றாள். திறமையுடன் செயல்பட வாய்ப்பு அளிக்கின்றாள். இவரது பழைய இடத்திற்கும் ஒருவர் நியமிக்கப்படுகின்றார். ஒவ்வொரு அன்பருக்கும் திருப்தி ஏற்படுகிறது. முதல்வர் மீது குறையையே கண்டவர்களுக்கும் அமைதி. அன்னையின் நுண்ணிய நிர்வாகத் திறனுக்கும் சான்று; மற்றவர்களுக்கும் ஒரு படிப்பினை!

இதே போலதான் மின்சக்தியும் இயற்கையில் ஒரே செயலில் பல காரியங்கள் செய்து காட்டுகின்றாள்! மின்னலடிக்கின்றது! என்னென்ன நடக்கின்றது? இடிக்கும் மின்னலுக்கும் பயந்து ‘‘ராமா”, ‘‘கோவிந்தா”, ‘‘அர்சுனா” என்று எல்லாம் கூறுகின்றார்கள். தாம் தப்பு செய்து விட்டோம்! தெய்வம் தண்டிக்க வருகின்றது; இனி நல்ல பிள்ளையாக நடந்து கொள்வோம் என்று உறுதிசெய்து கொள்பவர்களும் உண்டு. இதனால் பல நன்மைகளும் உண்டு.

மின்னல் ஏற்படும் விதமே ஒரு விநோதமான செயல்; இயற்கையின் அதிசயக் காட்சி, பராசக்தியின் புதிர். ஆகாயத்தில் ஒரு பெரிய நாடகம் அன்னை நடத்துவதன் விளைவு தான் இடி மின்னல்!

மின்னல் ஏற்படுவதை முழுமையாகக் கண்டுபிடிக்க இயலாவிட்டாலும் கீழ்க்கண்டபடி அனுமானிக்கப்பட்டுள்ளது. கருமேகங்கள் ஆகாயத்தில் கூடும்போது சில மேகங்களில் மிக அதிக மின் அழுத்தம் ஊக்கப்படுகின்றது. இம்மேகங்கள் அருகில் உள்ள எல்லாப் பொருட்கள் மீது நேர் எதிர்முக மின் அழுத்தத்தைத் தூண்டுகின்றன. இதனால் வாயு மண்டலம் (Conisation) பிளக்கப்படுகின்றது. இதுவே இடியாகின்றது. மேகத்தில் இருந்து மிக அதிக சக்தியுடன் மின்னோட்டம் பல ஆயிரக்கணக்கான ஆம்பியரில் பாய்கின்றது. இடியுடன் மின்னலடிக்கின்றது, ஒலி, ஒளிக்காட்சி நடைபெறுகின்றது.

இவ்வித மின்னல் ஏற்பட அதிக நாழிகைகளாகலாம். மிக விரைவில் மின்னல் ஏற்படுவதும் உண்டு. இதில் மூன்று வித மேகங்கள் பங்கு கொள்கின்றன. ஒரு மேகக் கூட்டத்தில் அதிக மின் அழுத்த ‘‘சார்ஜ்” இருக்கின்றது. இதன் அருகில் வரும் மற்றொரு மேகத்தின் மின் அழுத்தம் குறைகின்றது. இதனால் மூன்றாவது மேகம் வேகமாக இம்மேகத்தின் மீது மின்னாற்றலுடன் பாய்கின்றது. இவ்விதம் இரண்டு மேகங்களும் ஈடுபடும் பொழுது, முதல் மேகத்தில் மிக அதிக மின் அழுத்தமேற்பட்டு கட்டிடங்கள், மங்கள் மீது மின்னல் தன் இச்சையாகப் பாய்கின்றது. இதுவே திடீர் மின்னல்தாக்கு! ஒலியினாலும், ஒளியினாலும் மின்சாரம் பாய்ச்சப்படுவதாலும், சூட்டாலும் ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இடியுடன் மின்னல் ஏற்படும் போது ஒலி, ஒளி, சூடு மின்சக்திப் பாய்ச்சல் எல்லாம் நடைபெறுகின்றன. வாயு மண்டலத்தில் பலவித வாயுக்கள் இருக்கின்றன. நமது ஆலைகளில் இருந்து நமக்குப் பயன்படாத வாயுக்களும் ஆவிகளும் புகையாகிப் போகும் தேவையற்ற பொருள்களும் வாயு மண்டலத்தில் கலக்கின்றன.

இவைகளின் ஊடே மின்னல் பாயும்போது ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு உர சம்பந்தமான பொருட்கள் அதிகமாக உற்பத்தி ஆகின்றன. மழைத்துளிகள் ஏற்பட்டு மழையாகப் பொழியும் போது சுத்தமான நீரில் ரசாயனப் பொருள்கள் கரைந்து பூமியை அடைகின்றன.

தாவர வகைகளுக்குச் சிறந்த உரமாகின்றன. எனவே தான் மழை பொழியத் தாவரங்கள் செழிக்கின்றன பல ஆயிரக்கணக்கான டன் உரத்திற்கு சமமாக ஒரு பெரும் மழையில் கிடைக்கின்றன. நமது முன்னோர்கள் தங்களது அறிவுத் திறனாலும் ஞான திருஷ்டியினாலும் மழை பொழியச் செய்வது முதல் மின்னலைக் கட்டுப்படுத்துவது வரை தெரிந்திருந்தார்கள். மழை பொழிய வருண சபம் யாகம் முதலியன செய்தார்கள். ஆகாயத்தில் ஓங்கார மந்திரங்களை ரீங்காரம் செய்யச் செய்தனர். மந்திர ஒலிகளால் ஆகாயத்தை ‘‘சார்ஜ்” செய்தனர். இவைகள் மேகங்களைக் கவர்ந்தன் கருமேகங்கள் குவிந்தன் மாதம் மும்மாரி பெய்தது.

செப்புக் கம்பியில் மின்னல்பாயும் என்பதையும் அறிந்திருந்தனர். எனவே தான் கூர்மையான இடி தாங்கியை வைத்துச் செப்புப் பட்டைகள் மூலம் மின்னலை பூமிக்கு பாய்ச்சினர். அதாவது மின்சக்தியை பூமிதேவியோடு சேர்த்தனர் ஆத்மா. பரமாத்மாவோடு சேருவது போல் மின்சக்தியைப் பராசக்தியாகிய பூதேவியோடு கலந்தனர்.

விஞ்ஞானத்தில் உச்சக்கட்டம் அடைந்துள்ளதாகப் பெருமிதம் அடையும் மேல் நாடுகள் மின்னல் எப்படி ஏற்படுகின்றது. அதை எப்படி உபயோகப்படுத்துவது என்பதை அறிந்தாரில்லை. மின்னல் சக்தியை மட்டும் சேகரித்து மின்கலங்களில் அடங்கச் செய்துவிட்டால் ஆயிரமாயிர மெகாவாட் மின்சக்தியைக் கிடைக்கச் செய்து நிரந்தரமாக எரிபொருள் பிரச்சினையைப் போக்கி விடலாம். இதை நம் அன்னை பராசக்தியே செய்ய வல்லாள்!

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 3 (1982) பக்கம்: 41-43

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here