அன்னிய மதத்தவர் ஆலயத்தில் நுழையக் கூடாது என்ற அறிவிப்புப் பலகைகள் தொங்குகின்ற மற்றக் கோயில்கள் போல் இல்லாமல் தன் ஆலயத்தில் ஈஸ்டர் விழாக் கொண்டாடவும், முஸ்லீம் விழாக் கொண்டாடவும் கடந்த காலத்தில் செய்த பரங்குகள் அவளின் சித்தாடல்களில் ஒன்றே, பண்டைய கால வேள்வி முறைகளைச் சொல்லி வேள்வியை நடத்தும் முறைகளைச் சொல்லி, பள்ளிப் பிள்ளைகட்குப் பயிற்சி அளிப்பதுபோலத் தவத்திரு பங்காரு அடிகளார் மூலம் மற்றவர்க்குப் பயிற்சி அளித்து வருகிறாள்! ‘‘எல்லாத் தத்துவங்கட்கும் மூலமான தத்துவம் தானே என்கிறாள்; முழுமுதல் தத்துவம் நானே” என்கிறாள்.

காலப்போக்கில் இந்த மருத்தூர் திருத்தலம் சைவர்களின் சிதம்பரமாக, வைணவர்களின் திருவரங்கமாக, கிறிஸ்துவர்களின் ஜெருசேலம் நகரமாக, முஸ்லீம்களின் மக்காவாக, உலக ஆன்மிக மக்களின் ஞானபூமியாக மாறிக்கொண்டு வருகின்றது என்பதனை நேரில் பார்ப்போர் யாரும் மறுக்கமுடியாது என்பது உண்மை.

ஆன்மாவைச் சொல்லி – வினைப் பயனைச் சொல்லி பாவ புண்ணியங்களின் தன்மைகளைச் சொல்லி, பிறவிக் கொடுமைகளைச் சொல்லி பிறவா நெறிகளைச் சொல்லி, வழிகாட்ட வேண்டிய மடங்கள் – போலிகளாகி – ஜாதி நிறுவனங்களாக மாறி நாத்திக உணர்வுக்கு உரம்போடுகின்றவைகளாக மாறிவரும் இந்தச் சூழ்நிலையில், அவைகள் தன் பிணியிலிருந்து நீங்குவதற்கு அன்னை ஆதிபராசத்தி ஞானமெனும் மருந்தூட்டி சக்தி ஒளி கூட்டத் தன்தெய்வக் கொலுவை மேல்மருவத்தூர் என்னும் ஞான பூமியில் அமைத்துக் கொண்டான்.

ஆன்மிகத்தை எட்டிப் பிடிக்க வாய்ப்பில்லாத சமுதாயத்தில் என்னைப் பிறக்க வைத்து, தீயவர்களையும், குற்றவாளிகளையும் தினமும் பார்த்தும், பழகியும் வருகின்ற வழக்கறிஞர் தொழிலையும் எனக் கீந்து, என்னையும், தன்தாசனாக ஈர்த்துக்கொண்ட அவள் கருணையை என்னவென்று சொல்வேன்!

மனத்தை நிறுத்தி என்னால் வழிபட முடியவில்லை! மந்திரங்களைச் சொல்லி இவளுக்குப் பூசை செய்ய எனக்குப் பக்குவம் இல்லை! அவளின் முதலும் புரியவில்லை, முடிவும் தெரியவில்லை! இப்படி அவளின் ஆதியும் அந்தமும் புரியாத நிலையில் அந்த முயற்சியில் என் நாட்களை விணாக்க விரும்பாமல் ஒரே நிலையாக அவனிடம் முற்றும் ‘‘சரணாகதி” அடைந்துவிட்டேன்.

அந்தச் சரணாகதியின் மகிமையும் ஆற்றலும் நூல்களைப் படிக்கும்போது எனக்குப் புலப்படவில்லை. ஆனால் இந்த அன்னை என் வாழ்க்கையில் கொடுத்த அனுபவங்களின் வாயிலாகவே சரணாகதியின் மேன்மையை உணர்த்தி வருகிறாள். ஆணவத்தைப் போக்கி, அகங்காரத்தை நீக்கி, எளிமையைத் தந்து, ஆன்மிக மார்க்கம் கூட்டுகிறாள். தாயே! ‘‘நான் வெறும் கருவி, நீ என்னை ஆட்டிவைத்தபடி நான் ஆடுகிறேன். நல்லன வந்தாலும் துன்பங்கள் வந்தாலும், உன் திருவடிகளைத் தவிர வேறு எங்கே போவேன்?” என்று நினைக்கின்ற மனநிலையை உண்டாக்கிக் கொடுத்தவளும் இவளே! அன்னையை முழுமையாகச் சரண் அடைந்தால், வாழ்க்கை சுலபமாகிவிடும், பக்தியோடு வருகின்ற எவரையும் தெய்வம் சோதித்துப் பார்த்தே தேர்ந்தெடுக்கின்றது.

கோயிலின் கருவறையில் அமர்த்தப்பட வேண்டிய நிலையைச் சிற்பி எப்படியெல்லாமத் உளியால் இரக்கம் இல்லாமல் அடித்துச் செதுக்குகின்றான். அத்தனை அடிகளையும் தாங்கிக் கொண்டு ஒழுங்கான வடிவம் பெற்ற பிறகேதான், அந்தச் சிலை மூலஸ்தானத்தில் அமர்கின்றது. அபிடேகம், ஆராதனை, வழிபாடு ஆகிய சிறப்புகளைப் பெறுகின்றது.

அதே போலத் தொல்லையிலும், துயரத்திலும், கஷ்டத்திலும், நஷ்டத்திலும், மனமுடையாமல், தொய்ந்துபோகாமல், துவண்டு போகாமல், ‘‘தாயே இதெல்லாம் நீ செய்யும் விளையாட்டுகள்தானே” என்று நாமெல்லாம் கஷ்டத்திலும் களிப்படையக் கற்றுக் கொண்டால், தொல்லைகளால் துவளாமல் தாயின் திருவடிகளைச் சிக்கெனப் பிடித்து, முற்றும் சரணடைந்தால் ‘‘நாமே சத்தியம்”, ‘‘நாமே தர்மம்” என்பதாவோம். சத்தியம் சாகாது. தர்மம் அழியாது. அனைவரும் அன்னையிடம் சரணாகதி அடைந்து அவளின் அருளில் திளைப்போமாக!

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 2 (1982) பக்கம்: 28-29

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here