விழுப்புரத்தில் ஒரு விழா :

விழுபுரத்தில் நடந்த விழா அது! மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி அன்னையின் பெயரால் நடக்கின்ற வார வழிபாட்டு மன்றத்தின் ஆண்டுவிழா செவ்வாடை அணிந்த தொண்டர் கூட்டம் அந்தப் பகுதியில் நிரம்பி இருந்தது. அன்னை ஆதிபராசக்தியின் பெருமையைப் பற்றிப் பலரும் சொற்பொழிவாற்றினார்கள். வழக்கமாக நாட்டில் நடைபெறும் பக்திச் சொற்பொழிவுகள் போல அங்கு பேசப்பட்ட சொற்பொழிவுகள் அமையவில்லை. அபிராமிபட்டரின் வரலாற்று விளக்கம் இல்லை பாஸ்கரராயரின் வரலாற்றில் நடந்த அற்புதங்கள் இல்லை குமரகுருபரர் கண்முன் மீனாட்சி அம்மை குழந்தையாக வந்து முத்துமாலை அணிவித்து விட்டுத் திருமலை நாயகன் இருந்த அந்த அரசவையில் மறைந்து விட்டாளாமே அதுபற்றியும் பேசப்படவில்லை; பவானியிலே யாரோ ஒரு வௌ;ளைக்கார துரை தங்கி இருந்த கட்டடம் இடிந்து விழ இருப்பதை அறிந்து பவானித்தாய் சின்னஞ்சிறு சிறுமியாக வடிவம் எடுத்துக் கொண்டு அந்த வெள்ளைக்கார துரையைக் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தாளாமே! வெளியே இருவரும் வந்து விட்ட சிறிது நேரத்தில் அந்தக் கட்டடமே இடிந்து விழுந்ததாமே தன்னைக் காப்பாற்றிய அந்தச் சிறுமியைத் திரும்பிப் பார்த்த நேரத்தில் அந்தச் சிறுமி மறைந்து போனாளாமே தன்! அனுபவத்தில் இப்படிப்பட்ட ஓர் அற்புதம் நடத்தியதை உணர்ந்து ஆனந்தப்பட்ட அந்த வௌ;ளைக்கார துரை பவானித் தாயாருக்குத் தந்தத்தால் ஊஞ்சல் செய்து கோயிலுக்குக் கொடுத்தானாமே இப்படிப்பட்ட தேவியின் திருவிளையாடல்கள் எதுவும் அந்தச் சொற்பொழிவுகளில் இல்லை. பேசியவர்கள்எல்லாருமே அவரவர்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றியே பேசினார்கள். அம்மா எனக்கு இன்னது சொன்னாள்; இன்னது செய்தான் என்ற போக்கிலே பரவசப்பட்டுப் பேசினார்கள். அவர்கள் பேச்சுக்களிலே ஒருவர் பேசிய பேச்சு எல்லாருடைய நெஞ்சையும் நெகிழ்வித்தது. அவர் தான் அம்மாவுடைய பெயரால் வாரவழிபாட்டு மன்றம் நடைபெற தனக்குச் சொந்தமாக இருந்த திருமண மண்டபத்தை ஒதுக்கிக் கொடுத்தார்.

இமயமலை உச்சியும் இந்துமாக் கடலின் ஆழமும் :

அந்த இன்பர் கண்ணீர் மல்கப் பேச்சிலே குறிப்பிட்டர். ‘இமயமலையின் உச்சியிலே நான் ஒரு காலத்திலே இருந்தேன். இந்துமகா சமுத்திரத்தின் அடியாழத்திலேயும் நான் தள்ளப்பட்டேன். இன்பத்தின் உச்சியும் கண்டேன்; துன்பத்தின் ஆழத்திலும் அகப்பட்டுதவித்தேன்; என்ன செய்வது என்று தத்தளித்த நிலையில் தான் நான் மேல்மருவத்தூர் சென்று அம்மாவைத் தரிசித்து அருள்வாக்கும் கேட்டேன். ஒரு சிக்கலா? இரண்டு சிக்கலா? அவிழ்த்துப் பிரிக்க முடியாத அத்தனை சிக்கல்கள் எனக்கு இருந்தன. அம்மா என்சிக்கல்களை உணர்ந்தவள் அல்லவா? ஒவ்வொன்றாக இவன் சிக்கலைப் பிரித்து நீக்கும் வரையில் இவன் தாளமாட்டான் என்று எண்ணினானோ என்னவோ? என் சிக்கல்களை எல்லாம் சுட்டுப் பொசுக்கி விட்டாள் என்னைக் கைதூக்கிக் கரையேற்றி விட்டாள்” என்று நன்றி ததும்பப் பேசினார்; அந்தப் பேச்சில் சற்றேனும் செயற்கைத் தனம் இல்லை; பெரிய துயரத்தில் இருந்து தப்பித்து வந்த மலர்ச்சி இருந்தது; அம்மாவிடம் ஈடுபட்டுக் காப்பற்றப்பட்ட பல்லாயிரக் கணக்கான குடும்பங்களில் அவர் குடும்பமும் ஒன்று! அங்த அன்பரை அம்மா காப்பாற்றிய வரலாறு இது!

பெயர் பெற்ற வாணிகக் குடும்பம் :

விழுபுரத்திலும் அதன் சுற்றுப் புறத்திலும் அவரைப் பற்றியும்இ அவர் குடும்பத்தைப் பற்றியும் அறியாதவர் இல்லை. பெரிய வாணிக நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வந்த குடும்பம் அது! 1962ஆம் ஆண்டில் இருந்து அன்பரது குடும்பத்தில் புயல்வீசத் தொடங்கி விட்டது! சகோதரர்களுள் மனக்கசப்பு! பொறுப்பில்லாமல் செலவு செய்வது! அவரவர் தங்கட்குப் பாதுகாப்புத் தேடிக் கொள்வது போன்ற முயற்சிகள் – எல்லாமாகச் சேர்ந்து கடன்கள் மளமள என்று ஏறி மலைபோல் குவிந்தவிட்டன சொந்தச் சகோதரர்கள் தாங்கள் தங்கள் பாதுகாப்பைத்தேடிக் குடும்பத்தில் இருந்து பிரிந்து விட்டனர். மலைபோல் வளர்த்த கடனை அடைத்து ஆக வேண்டும்.

விற்பனைவரி அதிகாரிகளின் கெடுபிடி ஒருபுறம்! போலீஸ் வாரண்டுடன் கொடுத்த கடனை வசூல் செய்ய முயல்பவர்கள் ஒரு புறம்! கடனை வசூல் செய்வதற்காக நீதி மன்றந் தொடர்பான நடவடிக்கைகள் எவ்வளவு உண்டோ அவ்வளவையும் சமாளிக்க முடியாமல் அந்த அன்பர் சிக்கித் தவித்தார்; திணறினார்; அந்தக் குடும்பத்தார் உழைத்து உழைத்துச் சம்பாதித்துப் பெருகிய வாணிக நிறுவனம் அது! ஊழ்வினை! ‘’குடைநிழல் அமர்ந்து புஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்து ஒரூர் தண்ணினும் தண்ணுவர்” என்ற பழம் பாடலுக்கு உதாரணமாக ஆகிவிட்டார்

எரிகிற வீட்டில் பறித்தவரை இலாபம் :

சொத்துகளை வற்றுக் கடனை எல்லாம் அடைத்துவிட வேண்டும். என்று நினைத்தார் அந்த அன்பர்யாரையும் வஞ்சிக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவரது பாpதாப நிலையைத் தங்கட்குச் சாதமாக ஆக்கிக் கொண்டு மதிப்பான பொருள்களையெல்லாம் ஈனவிலைக்கே வாங்கிக் கொண்டவர்கள் சிலர்! அன்பரது அவசரம் கடன்காரர் கெடுபிடி என்ன செய்வது? விலை மதிப்புள்ள பல பொருள்களைக் குறைவான விலைக்கே விற்றுச் சில கடன்களைத்தீர்த்தார்.

விற்பனை வரி அதிகாரிகள் கெடுபிடி :

இவற்றுக்கிடையில் விற்பனை வரியைச் செலுத்த வேண்டும் என்று அந்தத் துறையைச் சேர்ந்த அத்காரிகள் கெடுபிடி செய்தார்கள். எதையாவது விற்று அடைக்கலாம் என்றால் அசையும் பொருள் எதுவும் இல்லை. அசையாப் பொருள்களை விற்பனை செய்யலாம் என்று பார்த்தால் அதிலும் சிக்கல்; அடைமானம்வைத்துக் கொண்டவர்கள்இ ஜப்தி செய்தவர்களின் பிணைப்பு இப்படிப்பட்ட நிலைமை!

போலீஸ் துணையுடன் ஜப்தி :

விற்பளை வரித்துறை அதிகாரியிடம் னெ;று நிலையைகளை எல்லாம் கூறி அந்த அன்பர் விளக்கினார். தன்னால் உதவ முடியாது என்றும் அப்படி விட்டு வைத்தால் மேலிடத்தில் எனக்குக் கெட்ட பெயர் வரும் நடவடிக்கை எடுத்தால் பாவ மூட்டையைச் சுமக்க வேண்டி வரும் என்று அந்த அதிகாரி திண்டாடினார். எப்படியோ வாய்தா ஒருநாள் கேட்டுச் சொத்துகளைப் பிரித்துக் கொண்டு கட்டிவிடுவதாக உறுதிமொழியளித்தார். அந்த அதிகாரியே மனம் வருந்திஇ நீங்கள் மேல்மருவத்தூர் செல்லுங்கள்; அம்மாதான் இந் தச் சிக்கல்களுக்கு வழிகாட்டுவான் என்றும் நெறிப்படுத்தி அனுப்பினார்.

அந்த அன்பர் 17-2-80 அன்று அன்னையிடம் அருள்வாக்குக் கேட்டார். அம்மா சொன்னாளாம்: ‘’மகனே! நீ நெருப்பில் விழுந்த புழு மாதிரி துடித்துக் கொண்டு இருக்கிறாய்! ஏன் இந்த ஜென்மம் எடுத்தோம்? என்று எண்ணுகிறாய். கவலைப் படாதே விரைவில் பாகப் பிரிவினை செய்து உங்கள் மூவருக்கும் (அன்பர்க்கும் சகோதரர் இருவர்க்கும்) நல்வாழ்வு தருகிறேன்” என்றாளாம்.

எப்படியோ நண்பர் ஒருவர் உதவியுடன் விற்பனை வரிபாக்கி செலுத்தப்பட்டது; சொத்துக்களை ஜப்தி செய்யும் நிலை தலைக்குனிவு ஏற்படாமலும் அம்மா காப்பாற்றி விட்டாள். பாகப்பிரிவினையும் நடந்தது. இருந்த சொத்து மதிப்புகளுக்கு மேல் கடன் பாக்கி குவித்திருந்தது. சகோதரர்கள் இருவரும் தங்களால் இயலாது என்று சொல்லி அன்பர்தான் சமாளிக்க வேண்டும் என்று பொறுப்பை அவரிடம் கொடுத்துவிட்டார்கள்.

அன்பர் கடன்களை எல்லாம் பைசல் செய்ய ஆரம்பித்தார். சொத்துக்களை விற்றுத்தான் கடன்களை அடைத்தார். ஒவ்வொரு சொத்தையும் விற்கும் போதும் சொத்தின் மதிப்புக்கு மேற்பட்ட தொகையளவில் விற்பதற்கு அம்மா கருணை புரிந்தாள். சில இடங்களில் கடன்களைப் பைசல் செய்யச் சென்ற போது வட்டி வேண்டாம்; அசல் மட்டும் கொடுங்கள் போதும்” என்று சொல்லி அசலை மட்டும் பெற்றுக்கொண்டார்கள். ஊதுவத்தி கம்பெனி ஒன்று இருந்தது. அதனை வைத்துக் கொண்டே நன்றாக நடத்தி ஓரளவு தலை நிமிர்ந்து நின்றார் அன்பர் ஒவ்வொரு கட்டத்திலும் அம்மாவின் திருவருள் துணை புரிந்து காத்ததை அனுபவத்தால் புரிந்து கொண்டார் அவர் திருவருள் துணை மட்டும் இருக்குமானால் எப்படிப்பட்ட துன்பமாயினும் வென்று விடலாம் என்பதனை அன்பர் உணர்ந்து கொண்டு தம் கதைகளை விவரித்தார். ‘’மனிதர்களை நம்புவதை விட தெய்வத்தை நம்புவது மேல்” என்ற பாடத்தை அவர் பட்ட துன்பம் அவர்க்கு உணர்த்தியது இன்று அவர் குடும்பம் பராசக்தியிடம் ஈடுபட்ட குடும்பம். இப்படி மருவத்தூர்பெருமாட்டியிடம் ஈடுபட்ட பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் உண்டு. ஒவ்வொரு குடும்பத்துக்கும் இப்படிப்பட்ட வரலாறும் ஏதேனும் உண்டு.

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -2 சுடர் 3 (1982) பக்கம்: 26-29

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here