நான் மயிலாடுதுறையைச் சேர்ந்தவள். மூன்று குழந்தைகள். ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தேன்.

2007 ஜீன் மாதம் 25 ம் நாள் அன்று நடந்தது இது.

அன்று இரவு 12.30 வரை என் அம்மாவுடன் பேசிவிட்டு படுக்கச் சென்றேன்.படுத்தவாறே அறையின் ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, கருப்பாக இரண்டு உருவங்கள் தெரிந்தன. என்னவோ, ஏதோ என்று திரும்பிப் படுத்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் மூச்சுத் தினறல் ஏற்பட்டது. நெஞ்சை ஏதோ அமுக்குவது போல் இருந்தது. திணறினேன்.

என் கணவரும் சில பிரச்சனை
காரணமாகப் பிரிந்திருந்த சமயம் அது.மூன்று குழந்தைகளையும் ஆதரவில்லாமல் விட்டுவிட்டு இறந்து விடுவோமோ என்ற பயம் கவ்வியது.

என்னை ஒரு மருத்துவமையில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். என்னைப் பரிசோதித்துப் பார்த்து எல்லாம் நார்மலாகத்தான் இருக்கிறது கொண்டு போங்கள் ! என்று சொல்லி விட்டார்கள். வீட்டிற்கு வந்தேன். மீண்டும் பழையபடி மூச்சுத் திணறல் ! உடனே அங்கிருந்து நர்ஸிங் ஹோமில் சேர்த்தார்கள்.அங்கே ஒரு வாரம் வைத்துப் பார்த்து எல்லாம் நார்மலாகவே இருக்கிறது என்று சொல்லித் திருப்பி அனுப்பி விட்டார்கள்.

மறுநாள் பள்ளிக்குச் சென்றேன். அங்கேயும் எனக்கு மூச்சு அடைத்தது.

‘ உன் முகமே மாறிவிட்டது ! பழைய மாதிரி இல்லை’ என்று சொல்லிய ஓர் ஆசிரியை என்னை அங்கிருந்த தர்க்கா ஒன்றிற்கு அழைத்துச் சென்று முடிகயிறு போட்டார்கள்.அங்கே பாத்தியா ஓதும் சமயம்…நான் என்னை மறந்து ஆடினேன். பாம்புபோல வளைந்து வளைந்து ஆடியதாகச் சொன்னார்கள். நான் சுயநினைவோடு அப்போது இல்லை.

இங்கேயே படி கட்டி 10 நாட்கள் இருந்தால் எந்தத் தீய சக்தியாக இருந்தாலும் போய்விடும் என்றார்கள். அங்கே இரண்டு நாட்கள் தங்கிருந்தேன். என்னைக் கட்டி வைத்த தீய சக்திகள் ஒவ்வொன்றாக என்னை விட்டுச் சென்றதை உணர்ந்தேன். ஆனால் பாம்பு மாதிரி ஆடுவதை மட்டும் நிறுத்த முடியவில்லை.

வேறு ஒரு இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள்.

“ இரண்டு வருடங்களுக்கு முன்பு உன் வீட்டில் வந்த நாகப் பாம்பை – பக்கத்து வீட்டுப் பையனை விட்டு அடிக்கச் செய்தாய். அதனால் அந்தப் பாம்பு சீற்றம் கொண்டு உன்னை ஆட்டி வைக்கிறது. இது நாக தோ௸த்தால் வந்தது. காளாஸ்திரி சென்று தொ௸ம் கழித்தால் நாக தோ௸ம் விலகும் என்றார்கள்.
அவ்வாறே சென்று வந்தேன். அதன் பின்னரும் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.

அப்பொழுதுதான் ஒரு பெண்மணி மூலமாக மேல்மருவத்தூர் பற்றிக் கேள்விப் பட்டேன். அந்தப் பெண்மணி மருவத்தூர் அம்மாவின் டாலரை என் கழுத்தில் கட்டினார். அதன் பின்னரே என் உடலில் சற்று மாற்றம் ஏற்பட்டது.

அமாவாசை, பெளர்ணமி நாட்களில் மட்டும் அந்த மூச்சுத் திணறல் ஏற்படும்.

அப்போதுதான் என் மனதுக்குள் ஒரு யோசனை எழுந்தது.

ஒருமுறை அம்மாவுக்கு (அடிகளாருக்கு} பாதபூஜை செய்தால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும் என்று என் உள் மனம் சொல்லியது.

8.02.2008 அன்று அம்மாவுக்கு பாதபூஜை செய்து கண்ணீர்விட்டு அழுதேன். அன்று அம்மா மெளனம் ! என்று சொல்லி விட்டார்கள்.

மன்னை மிதித்து விட்டேன். அம்மாவின் பாதங்களைப் பற்றிக் கொண்டேன். தெய்வத்தைத் தரிசித்தாகி விட்டது. இனி எது நடந்தாலும் சரி ! என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் ஒன்று மட்டும் செய் ! எனக்கு ஏதாவது ஏற்பட்டால், என் மூன்று குழந்தைகளையும் நிர்க்கதியாக்கி விடாதே ! அவர்களையும் நீ எடுத்துக் கொள் ! என்று வேண்டி எவ்வளவு முடியுமோ அவ்வளவும் அழுது தீர்த்துவிட்டு வந்துவிட்டேன்.

நான் பாதபூஜை செய்தது சனிக்கிழமை ! திங்கட்கிழமையன்று இரவு ஓர் அற்புதமான கனவு !

இரவு 1.00 மணி இருக்கும். மேல்மருவத்தூர் கருவறையில் நிற்கிறேன். கருவறை அம்மா வீற்றிருக்கிறாள். இன்னொரு அம்மா(அடிகளார்) என் தலையில் அடிக்கிறாள். என் உடம்பிலிருந்து ஏதோ ஒன்று அழுதபடி வெளியேறுவதை உணர்கிறேன்.

என் பக்கத்தில் படுத்திருந்த ஏன் அழுகிறாய்? ஏன் கத்துகிறாய் ? என்று எழுப்பிக் கேட்டார்.

நான் நடந்ததைச்
சொன்னேன். அவர் அதனை நம்பவில்லை. நம்புபவர் நம்பட்டும்! இது என் அனுபவம்!

அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் அம்மா யார் என்பது புரியும்.

ஐந்து நிமிடம் அம்மாவை நினைத்துத் தியானம் செய்து வந்தால் அதன் பயனே பெரிது !

ஓம் சக்தி,

எம்.௵ரேவதி, கோலார், கர்நாடக மாநிலம்
நன்றி  சக்தி ஒளி
பக்கம் – 28, ஏப்ரல் 2009

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here