கருவறையில் விக்கிரகம் இல்லையே….

காலை 10.30 மணி இருக்கும் நான் கருவறைக்கு முன் சென்று நின்றபின் அன்னையின் தரிசனம் பெற நிமிர்ந்து பார்த்தேன். ஆனால் அந்தக் கருவறையில் ஒன்றுமே தென்படவில்லை. மந்திரங்கள் மட்டுமே தமிழில் கேட்டது. அங்கே ஆட்களோ, தொண்டர்களோ ஒருவருமே இல்லை.

அன்னையின் விக்கிரகமே கருவறையில் இல்லை. என்ன இது ? விக்கிரகம் எதுவும் இல்லாமலா இங்கே பூசை செய்கிறார்கள் ? என்ற கேள்வி எழ , குழம்பியபடி இருந்த அடுத்த கணம் , காதைப் பிளக்கும்படி , அம்மா ! அம்மா ! என்ற சப்தம் கேட்டது. எங்கே அம்மா ? என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.என் தலை சுற்றியது.

அடிகளார் திருமேனியில் ஆதிபராசக்தி: “ அந்தக் கருவறை எதிரில் அடிகளார் நிற்பதையும் , அவரை நோக்கிச் செவ்வாடைத் தொண்டர்கள் அனைவரும் அம்மா ! அம்மா ! என்று அழைப்பதையும் கண்டேன்.

ஒரு நான்கு ஐந்து வினாடிகள் அடிகளாரை உற்று நோக்கியபடி இருந்திருப்பேன். கண் இமைக்கும் நேரத்தில் நான் கண்ட காட்சி இருக்கின்ற்தே….. அது யாருக்குக் கிடைக்கும்…? அடிகளாரைப் பார்த்த அந்தக் கணத்தில் அங்கே அடிகளார் இல்லை.

செவ்வாடைக் கோலத்தில் கையில் சூலம் ஏந்தி – கால்களில் சிலம்பு மின்ன – அழகுக் கூந்தலோடு அம்மாவின் நின்ற கோலம் கண்டேன் சாமி!

சுமார் இரண்டு நிமிடங்கள்தான் இருக்கும். உடனே அடிகளாராக மாற்றிக் கொண்டாள். நான் கண்டது கனவா ? நனவா ? கருவறைத் தரிசனத்திற்காக வரிசையில் நின்றபடி இருந்த எனக்கும் இப்படி ஒரு காட்சி கொடுத்து என் கண்களைத் திறந்து விட்டாள் சாமி ! என்னுடைய அஞ்ஞானத்தைப் போக்கி உண்மையை உணர்த்தி விட்டாள் – என்று பாலு சுவாமிகள் உணர்ச்சிப் பொங்கக் கண்ணீர் மல்க நடந்த கதையைச் சொல்லி முடித்தார்.

உணர்ச்சி வசப்பட்ட பாலுசாமி இன்னொன்றும் சொன்னார். “ஆதிபராசக்தி கருவறையில் இல்லை சாமி ! எல்லாமே அடிகளார் கிட்ட போய்விட்டது. அடிகளார்தான் நமக்கு குரு ! அவர்தான் அவள் ! அடிகளாரைப் பிடித்தே நா்ம் கரையேறி வி்டலாம் என்ற உயரிய ஙூட்பத்தை அன்று அவர் தெளிவு படுத்தினார்.

கருவறையின் முன் நின்ற பாலு சுவாமிகளுக்கு, “நான் விக்கிரகத்தில் இல்லை ! நீ யாரை அலட்சியமாக எடுத்தெறிந்து பேசினாயோ அந்த அடிகளார் வடிவத்தில் இருக்கிறேன் இப்போதாவது உண்மையைத் தெரிந்துக் கொள் !” என்று அன்னை அவருக்குப் பாடம் புகட்டினாள்.

அஞ்ஞான இருளில் தடுமாறிக் கொண்டு, உலக சுகபோகங்களில் உழன்று கிடக்கிற ஆன்மாக்களைக் கரையேற்ற வந்துள்ள அன்னையின் அவதார ரகசியத்தை யாராலும் உணர முடியவில்லை.

ஒருசில ஆன்மிக ஙூல்களைப் படித்துவிட்டு எல்லாம் தெரிந்து கொண்டு விட்டோம் என்று அகங்காரம் தலைக்கேறிய ஆத்மாக்களால் அடிகளாரைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

பூர்வ புண்ணியத்தின் காரணமாக் இந்தப் பிறவியில் சில பதவிகளும் அதிகாரங்களும் பெற்று போதையேறித் தடுமாறுகின்ற சிலருக்கு இந்த அவதார நோக்கம்-அவதார ரகசியம் புரிவதில்லை.

படிப்பாளிகள் என்று தம்மைக் கருதிக் கொண்டு, ஆணவம் தலைக்கேறிய சிலருக்கும் அன்னையின் அவதாரம் புரிவதில்லை.

அன்னையே விரும்பி யாருக்குத் தன்னை உண்ர்த்த வேண்டும் என்று கருதுகிறாளோ அவர்கள்தாம் அன்னையின் மகிமையைத் தெரிந்து கொள்ள முடிகின்றது

அதிர்ஸ்ட வசமாக, நம் செவ்வாடைத் தொண்டர்களுக்கும், அம்மா பக்தர்களுக்கும் அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் நம் தொண்டர்கள் உணர்ந்து கொண்டு, நம்மிடையே ஏற்றத் தாழ்வை மறந்து அகம்பாவத்தைத் தவிர்த்து, தியானம் , ஒழுக்கம் , தொண்டு , பக்தி, தருமம் இவற்றால் நம்மை வளர்த்துக் கொண்டு முன்னேறுவதுடன், நம் அம்மாவின் மகிமைகளை உலகத்து மக்களிடம் பரப்பி ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்ள வைப்பது நம் கடமை. ஒம் சக்தி !

நன்றி சக்தி.இசைமணி செல்வராஜ் சக்தி ஒளி பக்கம் -9 , ஏப்ரல் 2009  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here