அன்னையின் படம். அடிகளார் படம் இவற்றிற்கு முதலில் கற்பூரம் காட்டி எலுமிச்சம்பழம் பிழிந்து திருஷ்டி கழிக்க வேண்டும்.பின் மஞ்சள் நீர் தெளித்து, பூசை அறையை சுத்தப்படுத்த வேண்டும். மஞ்சள் நீர் தோய்ந்த சுத்தமான சிவப்பு துணியைக் கொண்டு அம்மா படம், அடிகளார் படத்தைச் சுத்தப்படுத்த வேண்டும். படத்திற்கு ஒற்றைப்படையில் மஞ்சள். குங்குமப்பொட்டு வைக்க வேண்டும். பின் மாலை சார்த்த வேண்டும்.பின் காமாட்சி விளக்கோ, குத்து விளக்கோ ஏற்ற வேண்டும். பின் அம்மாவிற்கு நைவேத்தியம் ஏதாவது வைக்க வேண்டும். தேங்காய், வெற்றிலை, மஞ்சள் கிழங்கு, வாழைப்பழம், சுண்டல், பொங்கல், வேப்பிலை வசதிக்குத் தக்கபடி நிவேதனம் செய்யலாம். எல்லாவற்றையும் தயார் செய்து வைத்துக்கொண்டு மந்திர வழிபாடு செய்ய அமர வேண்டும். அமருவதற்கு முன்பாக அடிகளார் படத்திற்குக் குருபூசையாக கற்பூர ஆராதனை காட்ட வேண்டும். அம்மா படத்திற்கும் கற்பூர ஆராதனை காட்டவும். பின் எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்கவும்.

அதன் பிறகு மந்திர வழிபாடு பின்வரும் முறையில் செய்யவும். 

1) மூலமந்திரம்

2) அடிகளார் 108 போற்றி

 3)வேண்டுதற்கூறு

4)மூலமந்திரம்

5)1008 போற்றி மலா் (செவ்வாய் முதல் வியாழன் வரை)

6)1008 போற்றித்திருவுரு  (வெள்ளி முதல் திங்கள் வரை)

7) அன்னையின் 108 போற்றித்திருவுரு

8) சக்தி கவசம்

9) மந்திரக்கூறு

10) சக்தி வழிபாடு

11) தியானம்

12) சரணம்

செவ்வாடை அணிந்தபடியே வழிபாடு செய்யவும். வீட்டு வழிபாட்டில் வாழ்த்து படிக்கவேண்டாம்.

வசதிக்குத் தக்கபடி பொருள்களையும், இடத்தையும் அமைத்துக்கொண்டு வழிபாடு செய்யலாம். மந்திர நுாலில் உள்ளவற்றில் மேற் சொன்ன பகுதிகளைப் படிப்பதில் குறைத்துக்கொள்ள வேண்டாம்.

விடியற்காலையில் ஒருமணி நேரம், சூரியன் அஸ்தமனமாகின்ற மாலைப்பொழுது ஒருமணி நேரம் இப்படி நேரத்தை அமைத்துக்கொண்டு தினந்தோறும் வழிபாடு செய்தால் அது தான் முறையான வழிபாடு. தினந்தோறும் முடியாதபோது செவ்வாய், வெள்ளி, ஞாயிறு நாட்களில் அவ்வாறு வழிபாடு செய்யலாம்.

பௌர்ணமி, அமாவாசை நாட்களிலும் வழிபாடு செய்தல் வேண்டும்.

அன்னையின் படத்திற்கு 24 மணி நேரம் விளக்கேற்றி வைத்து வழிபடலாம். முடியாதவர்கள் காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றி வைத்து வழிபடலாம்.

நாள்தோறும் வழிபாடு செய்கிற பழக்கம் வந்தால் மனதை ஓரளவு கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறலாம்.

எந்தச் சூழ்நிலையிலும் மூலமந்திரம், அடிகளார் 108 மந்திரம், அம்மாவின் 108 மந்திரம் இவற்றை முணுமுணுத்தபடியே மனம் கிடந்தால் உள்ளே அசுத்தமான எண்ணங்கள் புகமுடியாது. அதனால் உடம்பும், மனமும் சுத்தமாகும். உடம்பு மந்திரமயமாகும். சூக்கும சரீரம் துாய்மையடையும். குண்டலினி சக்தி வேலை செய்யும். திறமைகள் வளரும். தெய்வ சக்திகள் துணைவரும். ஊள்வினை தணியும். புதுப்பொழிவு ஏற்படும். இறப்பிற்குப் பிறகு ஆன்மா நல்ல கதி அடையும். இப்படி மந்திர வழிபாட்டில் ஏராளமான பலன் உண்டு. 

நன்றி (அன்னை அருளிய வேள்வி முறைகள்)

பக்கம்-472-473). 

 

 

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here